திருட்டு கேசில் பரணி கைதாவாளா?அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில்,ஷண்முகம் கோவிலுக்கு வந்து நகைகளை வைத்து பூஜை செய்யும் நேரத்தில் இந்த திருட்டு நகைகளையும் சேர்த்து வைத்து விடுகின்றனர், ஷண்முகம் அதை கவனிக்காமல் நகைகளை வீட்டில் கொண்டு வந்து வைக்கிறான். அதோடு சௌந்தரபாண்டி இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு போன் செய்து தர்மகத்தா கோவில் நகைகளை திருடுறாங்கனு என்று எனக்கு தகவல் வந்து இருக்கு, வீட்டில் போய் பாருங்க உண்மை தெரிந்து விடும் என்று சொல்ல போலீஸ் ஷண்முகம் வீட்டில் சோதனை போட முடிவு செய்கின்றனர்.
வீட்டில் பரணி இப்போ கடையை அடமானம் வைத்து நகை வாங்கணுமா வேண்டுமா. அடுத்தடுத்து இரண்டு பெண்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் நீ கல்யாணம் பண்ண வேண்டும் என்று பரணி ஷண்முகத்திடம் கேட்க, என் தங்கச்சிக்காக நான் பண்ணுவேன், இதுல யாரும் தலையிட வேண்டாம் என்று பதிலடி கொடுக்கிறான். இதை ரத்னா கேட்டுவிடுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா: இன்றைய எபிசோடில், பரணி பேசுவதை அரைகுறையாக கேட்ட ரத்னா அண்ணன் தனக்கு நகை போடுவதில் பரணிக்கு விருப்பமில்லை என்று தவறாக புரிந்து கொள்கிறாள். உடனே அண்ணா, இனிமேல் எது செய்ய வேண்டுமானாலும் பரணிக்கிட்ட கேட்டு செய்ய, எனக்கு இப்போ நகை போட்டா, அடுத்து இசக்கிக்கும் போடனும், அப்புறம் பரணிக்கு எப்படி நகை போடுவா என்று, ரத்னா குதர்க்கமாக பேசுகிறாள்.
இதைக்கேட்டு கடுப்பான பரணி, என் ரத்னா இப்படி பேசுற நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று சொல்ல. யாரும் எனக்கு விளக்கம் சொல்ல தேவையில்லை. இனிமே உன் தங்கச்சிக்கு எதாவது செய்யவேண்டும் என்றால், உன் பொண்டாட்டிக்கிட்ட கேட்டு, செய் என சண்முகம் மனசை காயப்படுத்தும் வகையில் பேசிவிட்டுஅங்கிருந்து சென்று விடுகிறாள் ரத்னா.
திருட்டு கேஸ்: இன்ஸ்பெக்டர் அனுப்பிய ஆட்கள் வீட்டிற்கு வெளியே நின்று பரணி மற்றும் ஷண்முகம் வீட்டில் இருக்கிறார்களா என்று நோட்டம் விடுகின்றனர். கொஞ்ச நேரத்தில் போலீஸ் வீட்டிற்கு வந்து நீங்க கோவில் நகையை திருடியதாக தகவல் வந்திருப்பதாக சொல்ல அதை கேட்டு எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். டாக்டர், தர்மகத்தா, டீச்சர் என எல்லாரும் நல்ல பதவியில் இருக்கும் போது நாங்க எதுக்கு திருட வேண்டும் என்று வாக்குவாதம் செய்கிறான்.
அப்போது, அதிகாரிகள் கேட்காததால், சூடாமணி போட்டோ முன்னாடி வைத்த நகைகளை அதிகாரிகளிடம் கொடுத்து, பில் வேணுமா தரேன், நகைக்கடை போன் நம்பரும் அதில் இருக்கு வேணும்னா போன் போட்டு விசாரிக்க என்று சொல்லிகிறான். அப்போது, நகையை பிரித்து பார்க்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? நகை திருட்டு கேசில் பரணி கைதாவாளா? என்பதை அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











