குடும்பத்தின் மீது விழுந்த திருட்டு பழி.. ஷண்முகம் தப்பியது எப்படி? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், இன்ஸ்பெக்டர் அனுப்பிய ஆட்கள் வீட்டிற்கு வெளியே நின்று பரணி மற்றும் ஷண்முகம் வீட்டில் இருக்கிறார்களா என்று நோட்டம் விட்டுவிட்டு, சரியான நேரமாக பார்த்து வீட்டிற்கு வந்து நிற்கின்றனர். பின் கோவில் நகையை திருடியதாக தகவல் வந்திருப்பதாக சொல்ல அதை கேட்டு எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர்..
இதையடுத்து, நகைகளை அதிகாரிகளிடம் கொடுத்து, பில் வேணுமா தரேன், நகைக்கடை போன் நம்பரும் அதில் இருக்கு வேணும்னா போன் போட்டு விசாரிங்க என்று சொல்கிறான். அப்போது, நகையை பிரித்து பார்க்கின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், நகைக்கான பில் சரியாக இருந்த போதும், அதே நகை கோவில் கருவூலத்தில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்று சொல்லி ஷண்முகம் பரணியை கைது செய்து கோவிலுக்கு அழைத்து வர கோவிலில் எல்லா நகைகளும் சரியாக இருக்கிறது. பிளாஷ்கட்டில் ஷண்முகம் அனைத்து நகைகளையும் சாமி போட்டோ முன்பு வைத்து சாமி குடும்பிட்ட போது, முருகன் கழுத்தில் இருந்த மாலை கீழே விழ அதில் சௌந்தரபாண்டி வைத்த போலி நகைகள் மாட்டி கொண்டதும் அது மீண்டும் அந்த மாலையுடன் முருகன் கழுத்துக்கு சென்றதும் தெரிய வருகிறது.
மன்னிப்பு கேட்ட போலீஸ்: கோவிலிலும் நகை சரியாக இருந்ததால் போலீஸ் அதிகாரி, எங்களுக்கு பொய்யான தகவல் வந்ததால், நாங்க பரணியையும் சண்முகத்தையும் கைது செய்து அழைத்து வந்தோம். அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று அனைவர் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்கிறார். அப்போது, சண்முகம், உங்களுக்கு யார் பொய்யான தகவல் கொடுத்தது என்று எனக்கு நல்லா தெரியும் இனிமேல், அவன் சொன்னான், இவன் சொன்னானு வந்தீங்க என்றால், வேற சண்முகத்தை பாப்பீங்க என்று சொல்கிறான்.
இதையடுத்து, போலீசார் அங்கிருந்து கிளம்பு ரெடியாக, அப்போது குறுக்கே வந்த பரணி, எங்களை வீட்டில் விட்டு போங்க, நீங்க தானே எங்களை கைது பண்ணி கூட்டி வந்தீங்க. நாங்க தான் தப்பே செய்யவில்லையே, அப்போ நீங்க தான் எங்களை கூட்டிட்டு போய் வீட்டில் விடணும் என்று சொல்கிறாள், போலீஸ் வேறு வழியின்றி அவர்களை ஜீப்பில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து வந்து விடுகின்றனர்.
கொன்னுப்புடுவேன்: இதனால், கடுப்பான போலீஸ் அதிகாரி, நேராக சௌந்தரபாண்டி வீட்டிற்கு வர, சௌந்தரபாண்டி ஓடி வந்து, சண்முகத்தை கைது பண்ணியாச்சா என்று கேட்க கடுப்பான போலீஸ், சௌந்தரபாண்டியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து இன்னொரு முறை பொய்யான தகவல் கொடுத்தீங்க அவ்வளவு தான், பெரிய இடம்னு பாக்குறேன் இல்லனா அவ்வளவு தான் என்று மிரட்டி விட்டு செல்ல சௌந்தரபாண்டி ஷாக் ஆகிறார்.
அக்கா நீ நகையை வெச்சியா இல்லை என்று கேட்க, சத்தியமா வெச்சேன் டா என்று சொல்ல, இல்லை நீ ஏதோ கோல்மால் பண்ணிட்ட, உன்னை இனிமேல் நம்பக்கூடாது என்று சௌந்தரபாண்டி நினைக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











