சகுனியாக மாறிய பாண்டியம்மா.. ரத்னாவுக்கும் பரணிக்கும் உருவான மோதல்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், சண்முகம் கோவில் நகையை திருடிவிட்டான் என பழி போட சௌந்தர பாண்டி பிளான் போட, அந்த பிளான் வீணாகி போய்விட்டது. அது மட்டுமில்லாமல் போலீசை சண்முகம் அவமானப்படுத்திவிடுகிறான். இதனால், கடுப்பான போலீஸ் அதிகாரி, நேராக சௌந்தரபாண்டி வீட்டிற்கு வந்து, அவனின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து இன்னொரு முறை பொய்யான தகவல் கொடுத்தீங்க அவ்வளவு தான் என்று செல்ல சௌந்தரபாண்டி ஷாக் ஆகிறார்.
அக்கா நீ நகையை வெச்சியா இல்லையா என்று கேட்க, சத்தியமா வெச்சேன் டா என்று சொல்ல, இல்லை நீ ஏதோ கோல்மால் பண்ணிட்ட, உன்னை இனிமேல் நம்பக்கூடாது என்று சௌந்தரப்பாண்டி நினைக்கிறான். இதையடுத்து இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், அதாவது முத்துப்பாண்டி முதல்முறையாக இசக்கியை வெளியே அழைத்துச் செல்ல இசக்கி ரொம்ப தேங்க்ஸ் மாமா எனக்கு உங்க கூட இப்படி எல்லாம் வெளிய வரணும்னு ரொம்ப ஆசை என்று சொல்ல முத்துப்பாண்டி இத முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல என்று கேட்கிறான். இசக்கி எங்கே சொல்ல விட்டீங்க என்று கேட்க எல்லாம் என்னோட தப்பு தான் என சொல்லும் முத்துப்பாண்டி காதலோடு இசக்கியின் கையை பிடிக்கிறான். அதன் பிறகு போலீஸ் ட்ரைனிங் விஷயமா ஒரு மாதம் வெளியூர் செல்வதாக சொல்கிறான்.
புது திட்டம்: அடுத்ததாக வீட்டில் ரத்னா மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் வெங்கடேஷ் வீட்டுக்கு கிளம்பி கொண்டு இருக்க பாக்கியம், இசக்கி ஆகியோர் வீட்டுக்கு வந்திருக்க இவர்களுடன் பாண்டியம்மாவும் வருகிறாள். பாண்டியம்மாவை பார்த்ததும் பரணி கோபப்பட்டு, இவங்களை எதுக்கு இங்கே கூப்டு வந்தீங்க என்று கேட்க, பாக்கியம் நாங்க அவங்களை கூப்பிடவே இல்ல, அவங்க வந்துட்டாங்க என்று சொல்கிறாள்.
பாண்டியம்மாள் செய்த வேலை: ரத்னா,சண்முகம் வாங்கி கொடுத்த நகையை போடாமல் இருப்பதை பார்த்த, பாண்டியம்மா பரணிக்கும் ரத்னாவுக்கு இடையே ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு இதை ஊதி பெருசாக்கிட வேண்டியது தான் என்ற ஒரு பிளான் போடுகிறாள். கனியிடம் வந்து பரணி முதலிலேயே சண்முகத்துக்கிட்ட அவ நகையை கொடுத்திருக்கா சண்முகம் தான் அத வாங்காம கடையை அடமானம் வைத்து நகை வாங்கி இருக்கான். இத போய் ரத்னா கிட்ட சொல்லு அப்புறம் அவளே புரிஞ்சிக்குவா என்று சொல்கிறாள். பாண்டியம்மா சொன்னதை அப்படியே ரத்னாவிடம் சொல்ல ரத்னா கோபப்பட்டு கனியை திட்டி அனுப்பி விடுகிறாள்.
கோபத்தில் ரத்னா: இதையடுத்து, வரும் பரணி, ரத்னா நகை போடாமல் இருப்பதை பார்த்து ஏன் நகை போடவில்லை என்று கேட்க. நீ எதுவும் என்கிட்ட பேச வேண்டாம், நான் என்ன பண்ண வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று ரத்னா கோபத்தை கொட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











