வெங்கடேஷ் வீட்டில் நடந்தது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் ரத்னா, சண்முகம் வாங்கி கொடுத்த நகையை போடாமல் இருப்பதை பார்த்த, பாண்டியம்மா பரணிக்கும் ரத்னாவுக்கும் இடையே ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு இதை ஊதி பெருசாக்கிட வேண்டியது தான் என்ற ஒரு பிளான் போடுகிறாள்.
இதையடுத்து அங்கு வரும் பரணி, ரத்னா நகை போடாமல் இருப்பதை பார்த்து ஏன் நகை போடவில்லை என்று கேட்க. நீ எதுவும் என்கிட்ட பேச வேண்டாம், நான் என்ன பண்ண வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று ரத்னா கோபத்தை கொட்டுகிறாள். இதையடுத்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அண்ணா இன்றைய சீரியல்: அதாவது, ரத்னா பரணி மீது கோப்பட ஷண்முகம் ரத்னாவை அதட்டி நகைகளை போட வைக்கிறான். அடுத்து பாண்டியம்மாவின் வருகை யாருக்கும் பிடிக்காத காரணத்தால் வெங்கடேஷ் வீட்டிற்கு போகும் போது பாண்டியாம்மாவை கழட்டி விட்டு செல்ல முடிவெடுக்கின்றனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக எல்லாருக்கும் முன்பாக பாண்டியம்மா காரில் ஏறி உட்கார்ந்து விடுகிறாள். அடுத்து ரத்னாவுடன் வெங்கடேஷ் வீட்டிற்கு வர ரத்னா முறைப்படி வெங்கடேஷ் குடும்பத்திற்குள் நுழைகிறாள்.
பாண்டியம்மா போட்ட பிளான்: இப்போது பாண்டியம்மா ஏதோவது பிரச்சனை பண்ணும், அவங்க மேல ஒரு கண்ணு இருக்கட்டும் என்று பரணி சிவபாலனிடம் சொல்ல, நீ கவலைப்படாத, நான் இருக்கேன் அப்படி ஏதாவது செய்தா, மண்டையை உடைச்சிடுவேன் என்று சொல்கிறான். அப்போது, ரத்னா வீட்டில் விளக்கு ஏற்ற அந்த நேரம் பார்த்து, ஃபேனை போட்டுவிட்டால், விளக்கு அணைந்துவிடும் என்று பிளான் போட்ட பாண்டியம்மா, பேன் போட போக, அதனை கவனித்துவிட்ட சிவபாலன், நீ என்ன திட்டம் போட்டாலும் அது நடக்காது போய் ஒழுங்கா உக்கார இல்லனா, அடி தான் வாங்குவ என்று சொல்ல, பாண்டியம்மா போய் உங்காருகிறார்.

கடுப்பான ரத்னா: பிறகு எல்லாரும் இருக்கும் சபையில் வைத்து பாண்டியம்மா ரத்னாவுக்காக ஷண்முகம் கடையை அடகு வைத்து நகையை போட்டு அனுப்பி இருக்கான், இது பரணிக்கு பிடிக்கல என்று சொல்ல அனைவரும் அதிருப்தி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.



Click it and Unblock the Notifications











