ரத்னாவை பழிவாங்க துடிக்கும் வெங்கடேஷ்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில், ரத்னாவை அலங்காரம் செய்து முதலிரவு அறைக்குள் அனுப்பி வைக்க அவள் வெங்கடேஷிடம் நான்தான் இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி இருந்தேன்ல.. என்னை விட்டுடுங்க என்று கோபப்பட்டு வெளியே வருகிறாள். பிறகு வெங்கடேஷ் அம்மாவிடம் பாக்கியம் அத்தை கிட்ட இப்போதைக்கு இதெல்லாம் வேண்டாம்னு சொல்லி இருந்தேன். அவங்க உங்க கிட்ட எதுவும் சொல்லலையா என்று கேட்க சொன்னாங்க உன் மதினி பரணி தான் எல்லா ஏற்பாட்டையும் கவனிக்க சொன்னாங்க என்று சொல்ல ரத்னா பரணி அப்படின்னு சொல்லி இருக்க மாட்டா என வாக்குவாதம் செய்கிறாள்.
வெங்கடேசன் அம்மா நான் பொய் சொல்லல என்று சொல்லி பரணிக்கு ஃபோன் போட பரணி நான் தான் ஏற்பாடுகளை கவனிக்க சொன்னதாக சொல்ல ரத்னா உன்னை நம்புனேன் பாரு என்று கோபப்படுகிறாள். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில்,காலையில் எழுந்திருக்கும் ரத்னா, குளித்துவிட்டு சாமி அறையில் பாட்டுப்பாடி பூஜை செய்கிறாள். இதையடுத்து, வெங்கடேஷனுக்கு காபி கொண்டு வந்து கொடுத்துவிட்டு, நேற்று நான் கோவமாக நடந்து கொண்டேன் என்னை மன்னித்து விடுங்க என்று சொல்ல, வெங்கடேஷ் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு, காபி குடிக்க எடுக்க பல் தேய்க்காமல் காபி குடிக்கக்கூடாது என்று சொல்லுகிறாள். மேலும், எப்படி மூக்கில் அடிபட்டது என்று கேட்க, அதுவா சொன்ன சிரிக்கக்கூடாது என்று சொல்லி அடிபட்ட கதையை சொல்ல ரத்னா சிரித்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறாள். அப்போது வெங்கடேஷ், நல்ல சிரிடி இன்னும் எத்தனை நாளைக்கு நீ இப்படி சிரிக்க போறே என்று பார்க்கிறேன். இனி மே உன் வாழ்க்கையில் அழுதுக்கிட்டேத்தான் இருப்ப என்று மனதிற்குள் சொல்லிக்கொள்கிறான்.
பரணி எடுத்த முடிவு: மறுபக்கம் பரணி, சண்முகம் கடையில் வேலை செய்பவனை அழைத்து, அண்ணன் கடையை எவ்வளவுக்கு அடகுவைத்தார் என்று கேட்டுவிட்டு, பணத்தை எடுத்து கொடுத்து கடையை மூட்ட சொல்லுகிறாள். எப்படி மதினி இவ்வளவு பணம் என்றுகேட்க, என் நகை அடமானம் வைத்துவிட்டேன், அதை நகை நான் மூட்டிக்கொள்வேன். நீ முதலில் போய் இந்த பணத்தை கொடுத்து பத்திரத்தை எடுத்துட்டுவா, இப்படி தர முடியாதுனு சொன்ன, இந்த பணத்தை நீயே வெச்சு இருந்து திருமணம் 5 ஆயிரம் வட்டி கட்டு என்கிறாள். அந்த நேரம் சண்முகம் இங்கு வர வேறு ஒரு கதையை சொல்லி சமாளித்து விடுகிறாள். . இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











