ஓடுகாலி மவ.. இசக்கியை கொடுமைப்படுத்திய பாண்டியம்மா.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில் பாண்டியம்மா ஒரு மூட்டை துணியை கொண்டு வந்து போட்டு இசக்கியை துவைக்க சொல்ல அவள் முடியாது என்கிறாள்.வெறும் பய மவளுக்கு கோவம் வேற வருதா என்ற பேச, இசக்கி ஆத்திரத்தில் கத்துகிறாள். அதாவது, பாண்டியம்மா துவைக்க கொடுத்த புடவையை கொளுத்தி விட்டு இசக்கி தீ வைத்ததாக சொல்லிவிட்டதாக சொல்லி வம்பு இழுக்கிறாள்.

பாக்கியம் இசக்கி அப்படி பண்ணியிருக்க மாட்டா என்று சொல்ல இசக்கியும் நான் கொளுத்தல என்று சொல்கிறாள். சௌந்தர பாண்டி பாண்டியம்மாவுக்கு சப்போர்ட் செய்து பேசி இசக்கியிடம் கோபப்படுகிறார். பிறகு சௌந்தரபாண்டி பாண்டியம்மாவிடம் நடந்த விஷயம் என்ன என்று கேட்க அவள் தனது திட்டத்தை சொல்கிறாள் இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil anna

அண்ணா சீரியல்: இன்றை எபிசோடில், பாண்டியம்மா, டேய் தம்பி இப்போ நீ வைகுண்டத்துக்கு போன் போட்டு, உன் மவ இப்படி பண்ணிட்டா என்று சொல் என்கிறாள்.உடனே சௌந்தரபாண்டி, வைகுண்டம் ஒரு வெத்துப்பய அவனுக்கு போன் போட்டா பிரச்சனை பெரிசா ஆகாது அக்கா,. சண்முகத்துக்கு போன் போட்டா தானே பிரச்சனை பெருசாகும் என்று சொல்ல,டேய் தம்பி, அக்கா என்ன பிளான் போட்டாலும் அதில் ஒரு விஷயம் இருக்கும் நீ நான் சொல்லுவதை செய் என சொல்கிறாள்.

இதையடுத்து,சௌந்தர பாண்டி, வைகுண்டத்துக்கு போன் போட்டு உன் பொண்ணு ஒழுங்காக வந்து கூட்டிட்டு போயிடு இல்லன்னா உயிரோடவே இருக்க மாட்டார் என்று எச்சரிக்கை கொடுக்க வைகுண்டம் பதறுகிறார். பிறகு பரணியிடம் விஷயத்தை சொல்ல அவள் சண்முகத்துக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் தெரிஞ்சா பிரச்சனை பெருசாகி விடும், நாம இதை பார்த்துக்கொள்ளலாம் என்கிறாள்.

கடுப்பான வைகுண்டம்: ஆனால் அதற்குள் மீண்டும் வைகுண்டத்துக்கு போன் போடும் சௌந்தரபாண்டி உன் பொண்ணோட உயிர் மேல உனக்கு அவ்வளவு தான் அக்கறையா? என்று கேட்க கடுப்பான வைகுண்டம் இதோ வரேன் டா கோவத்துடன் கிளம்பி வீட்டிற்கு வருகிறான். வைகுண்டம் வரும் நேரம் பார்த்து பாண்டியம்மா, இசக்கியை கூப்பிட்டு, என்னடி புடவை கொளுத்திவிட்டு இல்லனு நாடகம் ஆடுற என்று, இசக்கியின் தலைமுடியை பிடித்துக்கொண்டு சண்டை போடுகிறாள். அந்த நேரம் பார்த்து வைகுண்டம், ஏய் பாண்டியம்மா உன்னை கொன்னுடுவேன், என் மக மேல இருந்து கையே எடு என்று கத்திக்கொண்டே வர, பாண்டியம்மா, சும்மா கத்தாத உன் மவ என் பட்டுப்புடவை எரிச்சிட்டா, எல்லாமே பட்டுப்புடவை, எவ்வளவு விலை தெரியுமா என்று கேட்க, அருகில் இருக்கும் சௌந்தரபாண்டி, அட ஓடுகாலி பெத்த மகளுக்கு எப்படி அக்கா அது தெரியும் என்று சொல்கிறான்.

சாய்ந்த வைகுண்டம்: இதனால், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற வைகுண்டம், என் பொண்டாட்டி சூடாமணி பத்தியா தப்பா பேசுற, என்று சௌந்தரபாண்டியனை எட்டிமிதிக்க பதிலுக்கு சௌந்தரபாண்டியும் ஓங்கி மிதிக்க வைகுண்டம் அப்படியே நெஞ்சை பிடித்துக்கொண்டு சாய்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X