சீரியலில் மட்டும் ரொமான்சே நடக்காதா.. பாவம் இந்த சண்முகம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், ரௌடிகள் இசக்கியை கடத்திய நிலையில், அந்த இடத்திற்கு சென்ற ஷண்முகம், ரௌடிகளிடம் சண்டை போட்டு, இசக்கியை காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருகிறான். பின் முத்துப்பாண்டியை பார்த்த இசக்கி ஓடிப்போய் அவனை கட்டிப்பிடித்துக் கொள்ள சௌந்தரபாண்டி இசக்கி கிடைத்து விட்டதால் கொஞ்சம் நிம்மதி அடைகிறான்.

இப்போது, முத்துப்பாண்டி, இசக்கியை கடத்தியதில் இவங்க ரெண்டு பேருக்கும் தொடர்பு இருக்குனு தெரிந்தால், இரண்டு பேரையும் கரும்பு மிஷினில் வைத்து அப்படியே நசுக்கி விடுவேன் என்று சொல்ல, பாண்டியம்மா பதறுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

zee tamil anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், ஷண்முகம் வீட்டிற்கு வந்து விஷயத்தை பரணியிடம் சொல்ல, பரணி ஏன் என்கிட்ட சொல்லல என்று கோபப்படுகிறாள். எதையும் சொல்வதற்கு நேரம் இல்ல, எப்படியாவது இசக்கியை கண்டுபிடிக்க வேண்டும் என்ற பயம் தான் இருந்தது என்கிறான். ஆனால், எனக்கு என்னமோ அந்த பாண்டியம்மா மேலே தான் சந்தேகமாக இருக்கு என்று சொல்ல பரணி அவளை சும்மா விட கூடாது என்று கோபப்பட்டு சத்தமாக கத்த, சண்முகம் சத்தம் போடாதே எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க என்று சொல்கிறான்.

நோ ரொமான்ஸ்: சண்முகத்தின் பேச்சை கேட்காத, பரணி, முத்துப்பாண்டிக்கு இந்த விஷயம் தெரிந்து எப்படி சும்மா இருக்கான். பாண்டியம்மாவ நாம சும்மா விடக்கூடாது, என்று அங்கிருந்து கிளம்ப ஷண்முகம் பரணியின் கையைப் பிடித்து இழுத்து தடுக்க, இரண்டு பேருக்குள்ளும் ரொமான்ஸ் நடப்பது போல காட்சி காட்டப்படுகிறது. கடைசியில் ஒன்றும் நடக்காமல் ஷண்முகம் படுத்து தூங்கிவிடுகிறான்.

பிச்சைக்காரன் வேடத்தில் சனியன்: அதனை தொடர்ந்து சனியன் சௌந்தரபாண்டியிடம் இருந்து பணம் வாங்க பிச்சைக்காரன் வேடத்தில் வர இவனை பார்த்த இசக்கி தன்னை கடத்தியவர்களில் ஒருவன் என்று நினைத்து கொண்டு பாக்கியத்திடம் விஷயத்தை சொல்ல பாண்டியம்மா இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். சனியன் சௌந்தரபாண்டிக்கு போன் போட்டு பேச அவர் நான் வெளியே இருக்கேன். யார்கிட்டயும் மாட்டிக்காமல் அங்கிருந்து ஓடி போய்டு என்று சொல்ல சனியன் எஸ்கேப் ஆக முயற்சி செய்ய அவனை மடக்கி பிடிக்கின்றனர்.

மொக்கை அரிவாள்: இசக்கி சண்முகத்துக்கு போன் செய்ய போன் ரீச் ஆகாததால் வைகுண்டத்திற்கு போன் போட அவர் ஆவேசத்தில் மொக்கை அரிவாளை தூக்கி கொண்டு கிளம்புகிறார். சௌந்தரபாண்டி வீட்டிற்கு வந்ததும் கையில் இருப்பது மொக்கை அரிவாள் என்று தெரிந்து கொண்டு இதை வைத்து ஒன்னும் பண்ண முடியாதே என்று யோசிக்கிறார். பாண்டியம்மா பிச்சைக்காரன் தானே விடுங்க டா என்று சொல்ல சிவபாலன் உன் மேலே எனக்கு ஆரம்பத்துல இருந்தே சந்தேகம் இருக்கு.. நீ சொன்னா விட்டுடணுமா என்று பதிலடி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X