பாண்டியம்மாவை வச்சு செய்த பரணி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், இசக்கி புடவை எரிந்துவிட்டதாக நாடகம் போடுகிறாள் பாண்டியம்மா. மேலும், வைகுண்டத்துக்கு போன் போடும் சௌந்தரபாண்டி உன் பொண்ணோட உயிர் மேல உனக்கு அவ்வளவு தான் அக்கறையா? என்று கேட்க கடுப்பான வைகுண்டம் இதோ வரேன் டா கோவத்துடன் கிளம்பி வீட்டிற்கு வருகிறான்.
வைகுண்டம் வரும் நேரம் பார்த்து பாண்டியம்மா, இசக்கியை கூப்பிட்டு, என்னடி புடவையை கொளுத்திவிட்டு, இல்லனு நாடகம் ஆடுறியா என்று, இசக்கியின் தலைமுடியை பிடித்துக்கொண்டு சண்டை போடுகிறாள். அந்த நேரம் பார்த்து வைகுண்டம் உள்ளே வர, சௌந்தர பாண்டிக்கும், வைகுண்டத்திற்கும் கைகலப்பு நடக்க. சௌந்தரபாண்டியும் ஓங்கி மிதிக்க வைகுண்டம் அப்படியே நெஞ்சை பிடித்துக்கொண்டு சாய்கிறான். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், நெஞ்சை பிடித்துக்கொண்டு வலியால் துடித்துக்கொண்டு இருக்கும் வைகுண்டத்திற்கு பாக்கியம் சுடு தண்ணீரை வைத்து குடிக்க வைக்கிறாள். இந்த நேரம் வீட்டுக்கு வரும், சரிந்து கிடக்கும் வைகுண்டத்தை பார்த்து மாமா என்ன ஆச்சு என்று கேட்க, உன் அப்பா சௌந்தர பாண்டி என் அப்பாவை நெஞ்சில மிதிச்சிட்டாரு, அப்பா அப்படியே நெஞ்சை பிடிச்சிக்கிட்டு விழுந்துட்டாரு என்று சொல்லி அழுகிறாள்.
சண்டை போட்ட பரணி: இதையடுத்து, பரணி, வைகுண்டத்தை செக் செய்து ஒன்னும் பயப்பட வேண்டாம் பிபி நார்மலாத்தான் இருக்கு என்று சொல்கிறாள். இதையடுத்து இசக்கி, பெரியாத்தா பாண்டியம்மா பேய் புடிச்ச மாதிரி ஆடுறா. நான் புடவை எரிக்கவே இல்லை. நான் தான் புடவையை எரிச்சேன் என்று சொல்லி என்கிட்ட சண்டை போடுறா என்று சொல்லி அழுகிறாள். இதையடுத்து, பரணி, மாடியில் ஒளிந்து கொண்டு இருக்கும் பாண்டியம்மா, சௌந்தரபாண்டியை பார்த்து வெளுவெளுவென வெளுத்துவிடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











