கதறி அழுத இசக்கி.. கோபத்தின் உச்சத்தில் சண்முகம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், நெஞ்சை பிடித்துக்கொண்டு வைகுண்டம் வலியால் துடித்துக்கொண்டு இருக்க, இந்த நேரம் வீட்டுக்கு வரும் பரணி, சரிந்து கிடக்கும் வைகுண்டத்தை பார்த்து மாமா என்ன ஆச்சு என்று கேட்க, உன் அப்பா சௌந்தர பாண்டி என் அப்பாவை நெஞ்சில மிதிச்சிட்டாரு, அப்பா அப்படியே நெஞ்சை பிடிச்சிக்கிட்டு விழுந்துட்டாரு என்று சொல்லி அழுகிறாள் இசக்கி.

பரணி, வைகுண்டத்தை செக் செய்து ஒன்னும் பயப்பட வேண்டாம் பிபி நார்மலாத்தான் இருக்கு என்று சொல்கிறாள். இதையடுத்து, பரணி, மாடியில் ஒளிந்து கொண்டு இருக்கும் பாண்டியம்மா, சௌந்தரபாண்டியை பார்த்து வெளுவெளுவென வெளுத்துவிட்டு, இந்த விஷயம் மட்டும் சண்முகத்துக்கு தெரிஞ்சா உங்களை சும்மா விட மாட்டான் என வார்னிங் கொடுக்கிறாள். இதையடுத்து இன்றைய எபிசோடில் நடக்கக்போவது என்ன என்று பார்க்கலாம்.

zee tamil anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், அதன் பிறகு வைகுண்டத்தை அங்கிருந்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வர சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியம்மா போட்ட கணக்கு தப்பா ஆயிடுச்சு என டென்ஷனாகின்றனர். அதைத்தொடர்ந்து வைகுண்டம் வீட்டில் டல்லாக இருக்க சண்முகம் அதை பார்த்து என்னாச்சு என்று கேட்க உண்மை தெரிய வருமா என பில்டப் எகிறுகிறது. வைகுண்டம் எதுவும் இல்லை என சமாளித்து விடுகிறார்.

ஏதாவது பிரச்சனையா: அதைக் கடந்து இங்கே இசக்கி அப்பாவின் ஞாபகமாகவே இருக்க பரணிக்கு போன் போட்டு நலம் விசாரிக்க போன் போட சண்முகம் போனை எடுத்து, என்ன இசக்கி இந்த நேரத்தில் போன் பண்ணி இருக்க, ஏதாவது பிரச்சனையா என்று கேட்ட, ஒன்னும் இல்ல அண்ணா நாளைக்கு காலையில் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு இசக்கி கட் செய்து விடுகிறாள்.

சண்முகம் செய்யப்போவது என்ன: இதனால், சந்தேகப்படும் சண்முகம், மீண்டும் இசக்கிக்கு ஃபோன் போட்டு, என்ன ஆச்சு இசக்கி ஏதோ பிரச்சனை இருக்கு என்ன என்று சொல்லு என்று சொல்ல, இசக்கி கதறி அழுதபடி, பாண்டியம்மா புடவை கொளுத்துவிட்டு, நான் தான் கொளுத்திவிட்டேன் என்று சொல்லி, என்னை அடிச்சாங்க, அப்புறம் அப்பா, வீட்டுக்கு வந்தாரு, அவரையும் மாமா எட்டி மிதிச்சிவிட்டார், அப்பாவிற்கு முடியாமல் போய்விட்டது என்று சொல்லி அழுகிறாள். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த சண்முகம் சௌந்தரபாண்டி வீட்டிற்கு கோபத்துடன் செல்கிறான் . இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X