கொன்னு எரிச்சிடுவேன்.. வார்னிங் கொடுத்த சண்முகம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், அதன் பிறகு வைகுண்டத்தை அங்கிருந்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வர சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியம்மா போட்ட கணக்கு தப்பா ஆயிடுச்சு என டென்ஷனாகின்றனர். அதைத்தொடர்ந்து வைகுண்டம் வீட்டில் டல்லாக இருக்க சண்முகம் அதை பார்த்து என்னாச்சு என்று கேட்க வைகுண்டம் சமாளிக்கிறார்.

இசக்கி ஃபோன் போட்டு, என்ன ஆச்சு இசக்கி ஏதோ பிரச்சனை இருக்கு என்ன என்று சொல்லு என்று சொல்ல, இசக்கி கதறி அழுதபடி, பாண்டியம்மா புடவை கொளுத்துவிட்டு, நான் தான் கொளுத்திவிட்டேன் என்று சொல்லி, என்னை அடிச்சாங்க, அப்புறம் அப்பா, வீட்டுக்கு வந்தாரு, அவரையும் மாமா எட்டி மிதித்துவிட்டார், அப்பாவிற்கு முடியாமல் போய்விட்டது என்று சொல்லி அழுகிறாள். இதையடுத்து, இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோட் ஆத்திரம் அடைந்த சண்முகம், ஏப்பா யார் அடிச்சா என்ன ஆச்சு, என்கிட்ட மறைச்சிட்டா எல்லாம் சரியாகி விடுமா என்று கேட்க, ஏல என்ன யாருடா அடிப்பா, என்ன யாரும் அடிக்கவில்லை என்று சொல்ல, யாரும் அடிக்காமத்தான் நெஞ்சு எலும்பு உடைச்சி உங்காந்து இருக்கியா… உண்மைய சொல்லு என்று சொல்லி கத்துகிறான். அப்போது, பரணி, எதுவும் ஆகவில்லை சண்முகம், ஏன் கோவப்படுறா என்று சொல்கிறாள்.

உச்சகட்ட கோவத்தில் சண்முகம்: அடிச்சது உன் அப்பாவாச்சே அதனாலத்தான் அமைதியா இருக்க, உன் அப்பன் மட்டும் வெல்லக்கட்டியா என்று கேட்க, அப்படி இல்ல சண்முகம் தயவு செய்து புரிஞ்சிக்கோ, இப்படி எதாவது செய்தால் தான் நீ சண்டைக்கு வருவேனு அவங்க பிளான் பண்றாங்கடா அது தெரியாம நீ போய் , அவரை வெட்டுவேனு நின்னா என்ன அர்த்தம் என்று பரணி சமாதானப்படுத்துகிறாள். ஆனால், சண்முகம் சமாதானம் ஆகாமல், இனிமேலும் அவனை விட்டு வைக்கக்கூடாது என்று, சௌந்தரபாண்டியன் வீட்டிற்கு கோவத்துடன் கிளம்ப பரணியும் இரு நானும் வருகிறேன் என்று இரண்டு பேரும் வீட்டுக்கு வருகின்றனர்

ஒளிந்துகொள்ளும் பாண்டியம்மா: வீட்டுக்கு வந்த சண்முகம் கோவத்துடன், என்ன தைரியம் இருந்தா, என் அப்பன் மேல கை வெச்சி இருப்ப என்று கேட்க, அப்போது, இசக்கி அவரை சும்மாவிடாதே அண்ணா, அப்பாவை நெஞ்சிலேயே மிதிச்சாரு. எல்லாத்துக்கும் காரணம் இந்த பெரிய ஆத்தாத்தான் என்று சொல்ல, கோவத்தின் உச்சத்திற்கு சென்ற சண்முகம், ஏய் பாண்டியம்மா, ஒழுங்க இருந்துக்கோ இல்லனா… உன்னை கொன்னுடுவேன் என்று அடிக்க பாய, பரணி, சிவபாலன், பாக்கியம் ஆகியோர் தடுத்து நிறுத்துகின்றனர். சண்முகம் கோவத்தை பார்த்து பயந்து போன பாண்டியம்மா வீட்டுக்குள் ஓடி ஒளிந்துக்கொள்கிறாள்.

சமாதானமான சண்முகம்: உடனே பரணி, இசக்கி இது உன் வீட்டு பிரச்சனை, உன்னை இந்த வீட்டை விட்டு அனுப்பத்தான் இந்த ஆளு பிளான் போடுறாரு, நீ இந்த வீட்டை விட்டு போகக்கூடாது, இன்னும் இரண்டு நாள் முத்துப்பாண்டிவந்துவிடுவான், அவன் வரும் போது நீ இந்த வீட்டில் தான் இருக்கணும் என்று சொல்ல, இசக்கியும் சரி என்று சொல்ல, சண்முகமும் சமாதானமாகி வீட்டுக்கு வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X