ரத்னாவை பழிவாங்கிய வெங்கடேஷ்.. பரணியிடம் சரண்டர் ஆன ஷண்முகம்..அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், வெட்டுக்கிளி பணத்தை திருப்பி கொடுத்து விட்டு கந்துவட்டிகாரனிடம் இருந்து டாக்குமென்டையும் பணத்தை கொடுத்ததற்காக பில்லையும் வாங்கி வந்து கொடுக்கிறான். அடுத்து சனியன் அதே கந்து வட்டிகாரனிடம் பணம் கேட்டு வந்து நிற்க வட்டிக்காரர் தர முடியாது என்று சொல்ல சனியன் சௌந்தரபாண்டிக்கு போன் போட்டு சிபாரிசு செய்ய சொல்லி கேட்கிறான். சௌந்தரபாண்டியும் சனியனுக்காக வட்டிக்காரனிடம் பேசும் போது பரணி நகைகளை அடகு வைத்து கடையை மீட்ட விஷயம் தெரியவருகிறது.

இதையடுத்து சௌந்தரபாண்டி, அடகு கடைக்கு சென்று, நகையை மீட்டு ஷண்முகம் வீட்டிற்கு வந்து நகையை கொடுத்து அப்பன் நான் இருக்கும் போது நீ எதுக்கு நகையை அடகு வைக்கணும் என்று சொல்லி ஷண்முகத்தை அவமானப்படுத்தி பேசுகிறான். இதனால், கடுப்பான சண்முகம், பரணியிடம் நான் தான் உன் நகை தேவையில்லன்னு சொன்னேன்ல எதுக்கு இப்படி பண்ண? உன் குடும்பத்தோடு சேர்ந்து என்னை அவமானப்படுத்துறியா என்று கோவப்படுகிறான்.இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

zee tamil anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், பரணி, அந்த நகை எடுத்துக்கொண்டு, சௌந்தர பாண்டி வீட்டுக்கு வந்து அந்த நகை துக்கிவீசிவிட்டு, உன்திட்டம் என்ன என்று எனக்கு நல்லா தெரியும். இந்த நகையை வெச்சு என்னையும் சண்முகத்தையும் பிரிக்கலானு நினைக்கிறியா. அது என்னைக்குமே நடக்காது. சண்முகம் சொல்லுவதை நான் கேட்பேன், நான் சொல்லுவதை சண்முகம் கேட்பான். எங்க இரண்டு பேருக்கு இடையே சண்டையை மூட்டி விடனும்னு நினைச்ச அவ்வளவு தான்.

வார்னிங் கொடுக்கும் பரணி: இத்தனை நாள் சண்முகம் கோவப்பட்டுத்தான் பார்த்து இருப்ப, இதுக்கு மேல என் குடும்பத்திற்கு எதாவது பிரச்சனை பண்ணா, அதுவரை பார்க்காத ஒரு பரணியை நீ பார்ப்ப. இதுதான் நான் உனக்கு கொடுக்கும் கடைசி வார்னிங் என்று சொல்லிவிட்டு பரணி அங்கிருந்து கிளப்பி விடுகிறார். உடனே சௌந்தரபாண்டி, என்ன அக்கா இவங்களுக்கு பிரச்சனை வரும்னு சொன்ன.. ஆனால் இப்போ இப்படி சொல்லிட்டு போறா என்று கேட்க, பாண்டியம்மா கண்டிப்பா இவர்களுக்கு இடையே பிரச்சனை வரும். ஷண்முகம், பரணி பிரிந்துடுவாங்க, எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு என்று சொல்கிறாள்.

ரத்னாவை பழிவாங்கும் வெங்கடேஷ்: மறுபக்கம், வெங்கடேஷ் ஸ்கூலுக்கு கிளம்ப ரத்னாவும் கூடவே கிளப்புகிறாள். அப்போது வெங்கடேஷ் அம்மா, நீ எதுக்குமா வேலைக்கு போகணும், நம்ம வீட்டுலயே நிறைய வேலை இருக்கு, அதுவும் இல்லாம வெங்கடேஷன் கை நிறைய சம்பாதிக்கிறான். கல்யாணத்துக்கு முன்னாடி குடும்ப கஷ்டத்துக்காக வேலைக்கு போன, இப்போ எதுக்கு போகணும் என்று சொல்கிறார். உடனே ரத்னா, நான் குடும்ப கஷ்டத்துக்காக வேலைக்கு போகல, என் அண்ணனும் பணத்துக்காக என்னை வேலைக்கு அனுப்பல. அது என்னுடைய கனவு என்று சொல்கிறாள். இருந்தாலும் வெங்கடேஷ் நீ ஸ்கூலுக்கு வர வேண்டாம் என்று சொல்லி கிளம்பி செல்கிறான்.

zee tamil anna

அடுத்து நடப்பது என்ன: இன்னொரு பக்கம், அடுத்து பரணி ஹாஸ்பிடல் வந்து விட ஷண்முகம் ஹாஸ்பிடல் வந்து அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்ய பரணி கோபமாக பேசுகிறாள். ஷண்முகம் அதான் மன்னிப்பு கேட்டுட்டேன்ல என்று சொல்லி பேச பரணி போய் டி வாங்கிட்டு வா அப்போ தான் சமாதானம் ஆவேன் என்று சொல்கிறாள். பிறகு ஷண்முகம் டி வாங்கி வந்து கொடுக்க, சமாதானம் ஆகும் பரணி, சண்முகம் எப்போ எனக்கு கல்யாணம் ஆச்சோ அப்போதில் இருந்து நீ தான் என் குடும்பம், அது என் குடும்பம் இல்லை, இத நல்லா புரிஞ்சிக்கோ என்று சொல்லுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X