ரத்னா சொன்ன பொய்.. குடும்பத்திற்கு வரப்போகும் ஆபத்து.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், வெங்கடேஷ் ஸ்கூலுக்கு கிளம்ப ரத்னாவும் கூடவே கிளப்புகிறாள். அப்போது வெங்கடேஷ் அம்மா, நீ எதுக்குமா வேலைக்கு போகணும், நம்ம வீட்டுலயே நிறைய வேலை இருக்கு, அதுவும் இல்லாம வெங்கடேஷன் கை நிறைய சம்பாதிக்கிறான். கல்யாணத்துக்கு முன்னாடி குடும்ப கஷ்டத்துக்காக வேலைக்கு போன, இப்போ எதுக்கு போகணும் என்று சொல்கிறார். உடனே ரத்னா, நான் குடும்ப கஷ்டத்துக்காக வேலைக்கு போகல, என் அண்ணனும் பணத்துக்காக என்னை வேலைக்கு அனுப்பல என்கிறாள்.

அடுத்து பரணி ஹாஸ்பிடலுக்கு வந்து விட ஷண்முகம் அங்கே வந்து அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறான் ஆனால் பரணி கோபமாக பேசுகிறாள். ஷண்முகம் அதான் மன்னிப்பு கேட்டுட்டேன்ல என்று சொல்லி பேச, பரணி போய் டீ வாங்கிட்டு வா அப்போ தான் சமாதானம் ஆவேன் என்று சொல்கிறாள். பிறகு ஷண்முகம் டீ வாங்கி வந்து கொடுத்து பரணியை சமாதானம் செய்கிறான்.

zee tamil anna

அண்ணா: இதையடுத்து, இன்றைய எபிசோடில், சண்முகம் வீட்டிற்கு ரத்னா பெயரில், ஒரு கடிதம், வருகிறது. கனி மற்றும் சண்முகம் அதை எடுத்து ரத்னாவிடம் கொடுக்கின்றனர். படித்து பார்க்கும் ரத்னா, அண்ணா நாளைக்கு கல்வியாளர்கள் மாநாடு சென்னையில் நடக்கிறது. அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று லெட்டர் அனுப்பி இருக்காங்க என்று சொல்கிறாள். உடனே சண்முகம் ரொம்ப நல்ல விஷயம் தான் கட்டாயம் நீ போக வேண்டும் என்று சொல்ல, ரத்னா, நாளைக்கு வீட்டுக்கு விருந்தாளிகள் வராங்க, ஏற்கனவே அத்தை சொல்லிவிட்டார்கள் என்று சொல்கிறாள்.

சென்னைக்கு போகும் குடும்பம்: உடனே சண்முகம், விருந்தாளியை என்னைக்கு வேண்டுமானாலும் பார்க்கலாம், இதுதான் முக்கியம் இந்த விஷயத்தை சொன்னா அனுப்ப மாட்டாங்க, பரணிக்கு உடம்பு சரியில்லை என்று பொய்சொல்லிட்டு சென்னைக்கு போகலாம் என்று ஐடியா கொடுக்க, ரத்னாவும் வீட்டில் அத்தைக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல, அவங்களும் சரி போய்ட்டுவா என்கின்றனர். இதையடுத்து, ரத்னா, அண்ணா மதுரைக்கு போன மாதிரி எல்லாருமே போகலாம் என்று இசக்கி போன் போட்டு, சென்னை போற விஷயத்தை சொல்கிறாள்.

சௌந்தரப்பாண்டி போட்ட பிளான்:உடனே இசக்கி, போகலாமே, இப்போவே ரெடியாகட்டுமா என்று கேட்க, ரத்னா, ஏய் அத்தைக்கிட்ட ஒருவார்த்தை கேளு என்று சொல்ல, உடனே இசக்கி என் அத்தை நான் என்ன சொன்னாலும் சரினுதான் சொல்லுவாங்க என்று சொல்லிவிட்டு பாக்யத்திடம் விஷயத்தை சொல்ல, அவளும் போய்ட்டு வா என்கிறாள். இதையெல்லாம் மறைந்து இருந்து கேட்டுக்கொண்டு இருக்கும் பாண்டியம்மா, டேய் சௌந்தரபாண்டி, இவளுங்க சென்னை போறாளுங்க, நாமளும் அதுக்கு முன்னாடி சென்னை போய் இவங்க கதையை அங்கே முடிச்சிடனும் என்று சொல்ல. சரியா சொன்ன அக்கா, சண்முகம் தங்கச்சியோட சென்னை போகும் போதும், நாமும் போனா பாக்கியம் எப்படியும் அவங்ககிட்ட விஷயத்தை சொல்லிடுவா. இதனால், பாக்கியத்தையும் அழைத்துக்கொண்டு போகலாம் என்று முடிவு செய்கின்றனர்.

சென்னைக்கு கிளம்பிய குடும்பம்: இதையடுத்து, ரத்னா, கனி, இசக்கி மூன்று பேரும் கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு சென்னைக்கு கிளம்ப இதைப்பார்த்த சண்முகம், என்னது கண் ஆப்ரேஷன் பண்ண மாதிரி என்று கேட்க, சென்னைக்கு போறோம் அங்க இருக்குறமாதிரி இருக்க வேண்டாமா என்று சொல்லிவிட்டு அனைவரும் காரில் சென்னைக்கு கிளம்புகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X