பைத்தியம் போல அலையும் சௌந்தரபாண்டியன்.. சுத்தவிட்ட சண்முகம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில் கல்வியாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் படி ரத்னாவிற்கு கடிதம் வருகிறது.. டாக்டருக்கு உடம்பு சரியில்லை என்று பொய்சொல்லிட்டு சென்னைக்கு போகலாம் என்று ஐடியா. கொடுக்க, ரத்னாவும் வீட்டில் அத்தைக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல, அவங்களும் சரி போய்ட்டு வா என்கின்றனர்.
இதையடுத்து, ரத்னா, அண்ணா மதுரைக்கு போன மாதிரி எல்லோருமே போகலாம் என்று இசக்கி போன் போட்டு, சென்னை போற விஷயத்தை சொல்கிறாள். உடனே இசக்கி நான் ரெடி என்று சொல்லிவிட்டு கிளம்பி. இதை பாண்டியம்மா ஒட்டுகேட்டுவிட்டு, விஷயத்தை சௌந்தர பாண்டியனிடம் சொல்ல, நாமும் சென்னைக்கு போய் இவங்க என்ன பண்றாங்க என்று பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அவர்களும் கிளம்புகின்றனர். இதையடுத்து இன்று என்னநடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், அனைவரும் காரில் சென்று கொண்டு இருக்க, இசக்கி, அண்ணா ஒரு விஷயத்தை உன்கிட்ட இருந்த மறச்சிட்டோம். அதாவது கல்வியாளர்கள் மாநாடு நடக்கல, கெஞ்சல் ஆகிடுச்சு, அந்த மாநாட்டை நடத்துபவருக்கு நெஞ்சுவலியாம் அதான் ரத்து பண்ணிட்டாங்க என் சொல்கிறாள். இதைக்கேட்ட சண்முகம், அப்புறம் எதுக்கு நாம சென்னைக்கு போக வேண்டும் என்று , இதை ஏன் முன்னாடியே சொல்லவில்லை என்று கேட்க.
ஜாலியாக ஊர் சுற்றும் குடும்பம்: நாம மதுரைக்கு போகும் போது ரத்னா அக்கா வரவில்லை, அப்போ அக்கா வந்து இருக்கு நாம எல்லாம் ஜாலியா ஊர் சுத்திபார்த்துவிட்டு போகலாம் என்று சொல்லிவிட்டு. தீம் பார்க்கிற்கு செல்கின்றனர். அதே தீம் பார்க்கிற்கு சௌந்தரபாண்டி, பாக்கியம், பாண்டியம்மா அனைவரும் வருகின்றனர். அப்போது, சண்முகம் தங்கைகளோடு ராட்டிணம் சுற்றுவதை பார்க்கும் பாக்கியா, சௌந்தரபாண்டி பார்த்த பிரச்சனை ஆகிவிடும் என்று, தண்ணி வேண்டும் என சொல்லி அவரை அனுப்பிவிட்டு,அவர்களை மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டு இருக்கிறாள்

டாக்டர் சரவணன்: மறுபக்கம், டாக்டர் சரவணன் தனது மனைவி கோப்பெரும் தேவியுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறான். இதைப்பார்த்த சௌந்தரபாண்டி, ஏய் அக்கா அங்கே பாரு இந்த சண்முகம் செய்ற வேலையை, ஊர்ல நல்லவன் மாதிரி இருந்துகிட்டு இங்கே இன்னொரு பெண் கூட ஐஸ்கிரீம் சாபிடுறான். உன் பொண்ணு வாழ்க்கையை இந்த சண்முகம் எப்படி கெடுத்து இருக்கான் பாரு என்று சொல்ல, இதை நாம பார்த்தா மட்டும் பத்தாது, பாக்கியம் பார்க்க வேண்டும் என்று சொல்லுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











