ஒரு பெண்ணோட கனவும் முக்கியம்..ஆனந்த கண்ணீரில் சண்முகம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: சனிக்கிழமை எபிசோடில், சண்முகம் தனது தங்கைகளுடன், தீம் பார்க்கிற்கு செல்கின்றான். அதே தீம் பார்க்கிற்கு சௌந்தரபாண்டி, பாக்கியம், பாண்டியம்மா அனைவரும் வருகின்றனர். அப்போது, சண்முகம் தங்கைகளோடு ராட்டிணம் சுற்றுவதை பார்க்கும் பாக்கியா, சௌந்தரபாண்டி பார்த்தா பிரச்சனை ஆகிவிடும் என்று, தண்ணி வேண்டும் என சொல்லி வேறு பக்கம் அனுப்பி விடுகிறாள்.
மறுபக்கம், டாக்டர் சரவணன் தனது மனைவி கோப்பெரும் தேவியுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறான். இதைப்பார்த்த சௌந்தரபாண்டி, ஏய் அக்கா அங்கே பாரு இந்த சண்முகம் செய்ற வேலையை, ஊர்ல நல்லவன் மாதிரி இருந்துகிட்டு இங்கே இன்னொரு பெண் கூட ஐஸ்கிரீம் சாபிடுறான். உன் பொண்ணு வாழ்க்கையை இந்த சண்முகம் எப்படி கெடுத்து இருக்கான் பாரு என்று சொல்ல, இதை நாம பார்த்தா மட்டும் பத்தாது, பாக்கியமும் பார்க்க வேண்டும் என்று சொல்லுகிறான்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், சௌந்தரபாண்டி, சரவணனின் மனைவியிடம் வந்து, உன் புருஷன் நல்லவன் இல்ல. ஊருல ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி குடும்பம் நடித்துறான். இங்கு வந்து உன் கூட குடும்பம் நடத்துறான் என்று சொல்ல தேவி குழப்பம் அடைகிறாள். இதையடுத்து, சௌந்தரபாண்டி நீ பாரு என்று காட்ட சண்முகத்தை காட்ட, சண்முகம் ரத்னாவுடன் இருப்பதை பார்த்த தேவி, சரவணன் தான் வேறொரு பெண்ணுடன் இருப்பதாக தப்பாக புரிந்து கொண்டு அடிக்க போக கடைசியில் அது சண்முகம் என தெரிய வருகிறது. இதையடுத்து, அனைவரும் பேசிக்கொண்டு இருக்க, தேவி, எனக்கு சண்டை போட நாத்தனார்களே இல்லையேனு கவலையாக இருந்தது என்று சொல்கிறாள். சண்முகம் இவங்க உங்களுக்கு நாத்தனார் போல தான் சண்டை போட்டுக்கோ என்று சொல்கிறான்.
பாட்டுப்பாடி அசத்திய கனி: அனைவரும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருகக், கனி நல்லா பாடுவா என்று சொல்ல சரவணன் பாட சொல்ல கனி அண்ணனுக்கு தெரிந்தா அவ்வளவு தான் என்னை கொன்னே போட்டுவிடும், அண்ணனுக்கு இதெல்லாம் பிடிக்காது என்று சொல்லி பாட மறுக்கிறாள். இதையடுத்து, சரவணன், அப்போ ஷண்முகம் சொன்னதான் பாடுவியா என்று கேட்க கனி, ஆமாம் என்கிறாள். இதையடுத்து வெளியே வந்த, சரவணன் சண்முகம் கெட்டப்புக்கு மாறி மீண்டும் உள்ளே வந்து, எலே கனி, அவன்கிட்ட என்ன சொன்ன உண்மையை சொல்லு.. உனக்கு பாடணும்னு ஆசை இருந்தா போய் பாட வேண்டியது தானே என்று சொல்ல கனி ஆவலுடன் பாட செல்கிறாள். அருமையாக பாடி அனைவரிடத்திலும் கைத்தடலை பெறுகிறாள்.
கண்கலங்கிய சண்முகம்: ஆனால் அவள் பாடி கொண்டிருக்கும் போதே ஷண்முகம் வந்து விட ஷாக் ஆகி நிற்கிறாள் கனி. இறுதியாக கனிக்கு முதல் பரிசு கிடைக்க மேடை ஏறும் ஷண்முகம் எமோஷனலாக பேசுகிறான், என் தங்கச்சிங்க நல்லா படிச்சு நல்ல இடதுக்குல கட்டி கொடுத்தா போதும்னு தான் நினைச்சேன், ஆனால் இனிமே அப்படி இருக்க மாட்டேன். என் தங்கச்சிகளோட கனவை நிறைவேற்றுவேன் என்று சபதம் எடுக்கிறான். இதுக்கெல்லாம் காரணம் சரவணன் தான் என்று சரவணனுக்கு நன்றி சொல்கிறான்.
இதை அனைத்தையும், சௌந்தரபாண்டி பார்த்துவிட்டு இவர்கள் டபுள் ஆக்ஷனா, அட நமக்கே தண்ணி காட்டிவிட்டார்களே என்று புலம்புகிறான் இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











