நீ யாருக்குடி பொண்டாட்டி.. இசக்கியை அவமானப்படுத்திய பாண்டியம்மா.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், சனியன் சௌந்தரபாண்டியிடம் இருந்து பணம் வாங்க பிச்சைக்காரன் வேடத்தில் வர இவனை பார்த்த இசக்கி தன்னை கடத்தியவர்களில் ஒருவன் என்று நினைத்து கொண்டு பாக்கியத்திடம் விஷயத்தை சொல்ல பாண்டியம்மா இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். சனியன் சௌந்தரபாண்டிக்கு போன் போட்டு பேச அவர் நான் வெளியே இருக்கேன். யார்கிட்டயும் மாட்டிக்காமல் அங்கிருந்து ஓடி போய்டு என்று சொல்ல சனியன் எஸ்கேப் ஆக முயற்சி செய்ய அவனை மடக்கி பிடிக்கின்றனர்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், பாக்கியம் மற்றும் வைகுண்டம் ஆகியோர் சனியனை மடக்கி பிடித்து அவனை விசாரித்துக்கொண்டு இருக்கின்றனர். அப்போது ,சனியன் நான் பிச்சைக்காரன் தான், பசி தாங்கமுடியல அதான் சாப்பாடு கேட்டு வந்தேன் என்று சொல்லி, எஸ்கேப் ஆக பார்க்கிறான். உடனே அப்படியா இதோ இரு என்று சொல்லிவிட்டு உள்ளே வந்து, ஒரு பெரிய குண்டானில் தண்ணீரை வைத்து கொண்டு, வந்த பாக்கியம் என் மருமகளையா கடத்த பார்த்த என்று சனியன் மீது தண்ணீர் ஊற்ற அவன் நகர்ந்து கொள்ள பின்னாடி வந்து நின்ற சௌந்தரபாண்டி மீது சுடு தண்ணீர் கொட்டி விடுகிறது.

zee tamil anna

புலம்பிய சௌந்தரபாண்டி: அதன் பிறகு சௌந்தரபாண்டி காயத்தில் தவிக்க பாக்கியம் மஞ்சள் போட்டு விடுகிறாள். எதுக்கு டி என் மேலே சுடு தண்ணீர் ஊத்தின என்று கேட்க நீங்க எதுக்கு குறுக்க வந்தீங்க, நான் அவன் மேலத்தான் ஊத்தப்போனேன் என்று கலாய்க்கிறாள். நான் அவன் யார் என்ன சொல்லப்போகிறான் என்பதை கேட்க வந்தேன். அதுக்குள்ள என் மேல சுடு தண்ணிய ஊத்திட்டியே என்று சொல்லி புலம்புகிறான்.

நீ என்ன பொண்டாட்டியா: பிறகு சௌந்தரபாண்டிக்கு பாக்கியம் சாப்பாடு பரிமாற இசக்கி சிவபாலனுக்கு சாப்பாடு பரிமாறுகிறாள். இதை பார்த்த பாண்டியம்மா என்னடி, இசக்கி சிவபாலனுக்கு நீ பொண்டாட்டி மாதிரி நடந்துக்குற என்று பேச இசக்கி மற்றும் சிவபாலன் என இருவரும் பாண்டியம்மாவிடம் கோபப்படுகின்றனர். இதை தொடர்ந்து இசக்கி சோகமாக அமர்ந்திருக்க பாக்கியம் அவளை சமாதானம் செய்கிறாள்.

வசமா சிக்கிய பாண்டியம்மா: சாப்பிடாமல் உட்கார்ந்திருந்த இசக்கி யாரோ பேசுனதுக்கு எதுக்கு நான் சாப்பிடாமல் இருக்கனும் என்று சாப்பிட போக பாண்டியம்மா தன்னை அவனமானப்படுத்திய இசக்கியை அடிக்க போர்வையை போர்த்தி கொண்டு கிச்சனுக்குள் நுழைகிறாள். சிவபாலன், அது திருடன் என நினைத்து பாண்டியம்மாவை போட்டு அடி வெளுத்து எடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X