கேள்விக்குறியான ரத்னாவின் வாழ்க்கை.. பரணி எடுக்கும் முடிவு என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், ரத்னா பொய் சொல்லிவிட்டு அண்ணனுடன் சென்னை போன விஷயம் தெரிந்த வெங்கடேஷ் கடுப்பாகி இனிமேல் நீ ஸ்கூலுக்கு போக வேண்டாம் என்று சொல்கிறான். அதெல்லாம் முடியாது நான் ஸ்கூலுக்கு போவேன் என்று சொல்ல இருவருக்கும் இடையே சண்டை முற்றுகிறது. அப்போது, வெங்கடேஷ் ரத்னாவை அடிக்க கை ஓங்க, ரத்னா தடுத்து நிறுத்தி அதையே நான் திருப்பி பண்ணா என்னவாகும் தெரியுமா என்று கோபப்படுகிறாள். என் அண்ணன் கஷ்டப்பட்டு என்னை படிக்க வச்சி இருக்கிறார். அவரின். வேர்வையில் தான் நான் வாத்தியார் ஆகி இருக்கேன் என்று சொல்கிறாள்.

ஸ்கூலில் நடந்த விஷயம் கனி, ஷண்முகத்திடம் சொல்ல கோபமான சண்முகம், வெங்கடேஷ் வீட்டிற்கு வருகிறான், நடு இரவில் வெங்கடேஷ் வீட்டு கதவை தட்ட வெங்கடேஷ் கதவை திறக்க ஷண்முகம் நிற்பதை பார்த்து ஷாக் ஆகிறான். இதையடுத்து இன்று நடப்பதை பாக்கலாம்.

zee tamil anna

அண்ணா: இன்றைய எபிசோடில், அண்ணன் சண்முகம் வந்ததும் அழுதபடி ஒடி வந்த, ரத்னா, பாரு அண்ணேன் நான் ஸ்கூலுக்கு போகக்கூடாதுனு இவர் சொல்றாரு என்று கதறி அழுகிறாள். அப்போது சண்முகம், நீ தாலி கட்டிவிட்டா, உன் பொண்டாட்டி உனக்கு வேலைக்காரியா இருக்கணுமா. நீ மட்டும் என் தங்கச்சி புருசனா இல்லாமல் இருந்து இருந்தா, அடிக்க வந்த கையை பிச்சி எறிஞ்சி இருப்பேன்.

என் தங்கச்சி யாருமே இல்லாத அனாதை இல்ல, அவளுக்கு அண்ணன் நான் இருக்கேன் கடைசி வரைக்கும் அவளை பார்த்துக்கொள்ள என்னால முடியும். ஒழுங்கா என் தங்கச்சிக்கிட்ட மன்னிப்பு கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்து கூட்டிக்கிட்டுபோ என்று சொல்லிவிட்டு,சண்முகமும் வைகுண்டமும் சேர்ந்து சந்தோசம் இல்லாத இடத்துல என் தங்கச்சி இருக்க வேண்டாம் என்று சொல்லி ரத்னாவை அழைத்து கொண்டு வீட்டிற்கு வருகின்றனர்.

zee tamil anna

டென்ஷனான பரணி: சண்முகத்தின் முடிவால் டென்ஷனான பரணி, பொறந்த பொண்ணு ஒரு வீட்டிற்கு வாழ போய்ட்டா அந்த வீட்டில் என்ன கஷ்டம் இருந்தாலும் அதையெல்லாம் சமாளித்து அங்க தான் வாழனும், பொண்ணுக்கு நல்லது சொல்லுற நீங்களே இப்படி செய்யலாமா என்று சொல்ல, ரத்னா பரணி பேசுவதை தப்பாக புரிந்து கொள்கிறாள். இதுக்கு பேர் தான் அண்ணியார் கொடுமைனு சொல்லுவாங்க போல என மனதிற்குள் வருத்தப்படுகிறாள்.

தங்கையின் மீது பாசம் : பரணி மற்றும் ஷண்முகம் இருவரும் தனியாக இருக்கும் போதும், நீ உன் தங்கச்சிங்க மேலே வச்சிருக்க அதீத பாசமே அவங்க வாழ்க்கைக்கு ஆபத்தாகிடும், ரத்னாவை கூட்டிட்டு போய் வெங்கடேஷ் வீட்டில் விட்டுட்டு வரலாம் என்று சொல்ல ஷண்முகம் பரணியை திட்டி விடுகிறான். மறுநாள் பரணி பாக்கியத்திடம் விஷயத்தை சொல்ல அவளும் ரத்னா வெங்கடேஷ் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று சொல்ல பரணி சண்முகத்தை மீறி ஒரு முடிவெடுக்க தயாராகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X