உன் தங்கச்சியை வாழ விடமாட்டேன்.. கோபத்தில் சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், சூடாமணி எழுதி வைத்திருந்த டைரியில் உனக்கு பிறந்த நாள் என்று எழுதி இருக்கிறார்கள். உன் பிறந்த நாளை நன்றாக கொண்டாட வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. இதனால், நாளைக்கு நீயும் மாப்பிள்ளை முத்துபாண்டியும் வீட்டிற்கு வந்துவிடுங்கள் என்று சொல்லுகிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
அண்ணா: இன்றைய எபிசோடில், பிறந்த நாள் கொண்டாட்ட விஷயத்தை ஷண்முகம் சொல்லிவிட்டு வெளியே வர, அவனை வழிமறித்த சௌந்தரபாண்டி உன் தங்கச்சி நல்லபடியா வாழறானு சந்தோசப்படாத, அவளை நான் வாழ விட மாட்டேன், என் புள்ளை கிட்ட இருந்து பிரித்து வாழாவெட்டியா அனுப்பி வைக்கிறேன் என்று சவால் விட, பதிலுக்கு ஷண்முகமும், அவங்க ரெண்டு பேரையும் நல்ல வாழவைப்பது தான் என் வேலை என்கிறான்.

இவர்கள் இருவரும் வெளியில் சண்டைப்போட்டுக்கொண்டு இருக்க, அங்கு வரும் பாக்யம், ஏங்க உங்களுக்கு புத்தியே இல்லையா, சின்ன பயக்கூட சண்டை போடுறீங்க அவன் அடிச்சா தாங்குவீங்களா என்று சொல்ல, சண்முகம், அத்தை மாமன பத்திரமா பாத்துக்கோ, இல்லனா அவ்வளவு தான் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான். இருந்தாலும், மனதளவில் சௌந்தரபாண்டி சொன்ன வார்த்தையால் ஷாக் ஆகிறான்.
உன் தங்கச்சியை வாழ விடமாட்டேன்: வீட்டிற்கு வந்த சண்முகம், பரணியிடம் சௌந்தரபாண்டிய சவால் விட்டதை சொல்லி வருத்தப்படுகிறான். ஏற்கனவே ரத்னா இந்த வீட்டில் இருக்கா, இசக்கியும் வாழாமல் இந்த வீட்டிற்கு வந்துட்டா என்னால் தாங்க முடியாது என்று கவலைப்படுகிறான். சௌந்தரபாண்டி சொன்ன வார்த்தைகளை சொல்ல பரணி அந்த ஆளை நான் பார்த்துக்கறேன் என்று ஆறுதல் சொல்கிறாள். பிறகு, சண்முகம், முத்துபாண்டிக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல அவன் அந்த ஆள் கிடக்கிறாரு, நான் பார்த்துக்கறேன் நீங்க தைரியமா இருங்க, யாரும் எங்களை பிரிக்க முடியாது என்கிறான். இதையடுத்து, சௌந்தரபாண்டி தூங்கி கொண்டிருக்கும் ஷண்முகத்திற்கு போன் போட்டு, என்ன சண்முகம் நல்லா தூங்குறியா? நல்லா தூங்கு இனி மேல் நீ தூங்கவே முடியாது, உன் தங்கச்சியை வாழ விட மாட்டேன் என்று சொல்ல, சண்முகம் தூக்கம் இல்லாமல் தவிக்கிறான்.
பிறந்த நாள் கிப்ட்: இதையடுத்து வீட்டிற்கு வரும் முத்துப்பாண்டி, அம்மாவை கூப்பிட்டு தான் இசக்கிக்கு வாங்கிவந்த புடவையை அவளிடம் கொடுக்கும் படி சொல்லுகிறான். உடனே பாக்யம், ஏலே, உன் பொண்டாட்டிக்கு வாங்கியதை நீயே அவ கிட்ட கொடு சந்தோஷப்படுவா என்று சொல்லி இசக்கியை கூப்பிட, அவளிடம் பிறந்த நாள் கிப்ட் என்று சொல்ல, இசக்கி சந்தோஷத்தில் அந்த கிப்டை பிரிந்துப் பார்க்க அவளுக்கு பிடித்த கலரில் புடவை இருக்க சந்தோசப்படுகிறாள். தனக்கு பிடிச்ச கலரில் புடவை வாங்கி கொடுத்திருப்பதாக சொல்ல முத்துப்பாண்டி அது தனக்கு பிடித்த கலர் என்று சொல்கிறான். இருவருக்கும் பிடித்த கலர் ஒன்னு தான் என்பது அறிந்து இருவரும் சந்தோஷப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











