சௌந்தரபாண்டிக்கு சவால் விட்ட பரணி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், இசக்கிக்கு பிறந்த நாள் என்று தெரியவந்ததை அடுத்து, முத்துப்பாண்டி, இசக்கிக்கு வாங்கிவந்த புடவையை அவளிடம் கொடுக்க, இசக்கி சந்தோஷத்தில் அந்த கிப்டை பிரிந்துப் பார்க்க அவளுக்கு பிடித்த கலரில் புடவை இருக்க சந்தோசப்படுகிறாள். எனக்கு பிடிச்ச கலரில் புடவை வாங்கி கொடுத்திருப்பதாக சொல்ல முத்துப்பாண்டி அது எனக்கு பிடித்த கலர் என்று சொல்கிறான்.
இதைத்தொடர்ந்து, முத்துப்பாண்டி, இந்த புடவையை கட்டிக்கிட்டு நாளைக்கு கோவிலுக்கு போகலாம், நீ இந்த புடவையை தான் கட்டிகிட்டு வரணும் என்று சொல்ல இசக்கி அளவில்லா சந்தோசம் அடைகிறாள். இதைப்பார்த்த சௌந்திரப்பாண்டி, ஓ நீ சந்தோஷமாக இருக்கியா உன்னை சும்மாவிட மாட்டேன் என்கிறான். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா: இன்றைய எபிசோடில், இசக்கி ஷண்முகம் மற்றும் பரணிக்கு போன் செய்து, மாமா பிறந்தநாள் வாழ்த்து சொன்னாங்க, அவரு எனக்கு பிடித்த கலரில் புடவை வாங்கி கொடுத்தார் என்று சொல்கிறாள். இதைக்கேட்டு பரணி, என்னடி இசக்கி, மாமா புடவை தானே வாங்கிக் கொடுத்தாரா. இதுக்கே இப்படியா சந்தேகப்படுறியா என்று கிண்டல் செய்கிறாள். மேலும், என் அண்ணன் எப்படி செலவு செய்வான் என்று எனக்கும் தெரியும் என்று பரணி சொல்ல, இசக்கி, என்ன பரணி நான் உன் மதனி என்கிட்ட பேசும் போது பாத்துப்பேசு என்று இருவரும் மாறி மாறி விளையாட்டாக பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
இதையெல்லாம், கேட்டுக்கொண்டு இருந்த சௌந்தரப்பாண்டி, இவளுங்க அடிக்கிற இந்த கூத்தைப்பார்த்து எனக்கு வயிறு எரியுது. அங்க சண்முகம் நிம்மதியா தூக்குவான். அவனை தூங்கவிட மாட்டேன் என்று சொல்லிவிட்டு, மீண்டும் சண்முகத்திற்கு போன் போட்டு, உன் தங்கச்சியை சந்தோசமா வாழ விடமாட்டேன், நாளைக்கு அவ கோவிலுக்கு போக மாட்டா என்று வார்னிங் கொடுக்க பரணி போனை வாங்கி உன்னால் ஒன்னும் பண்ண முடியாது என்று சவால் விடுகிறாள்.
என்ன ஒன்னும் பண்ண முடியாது: இதையடுத்து அடுத்த நாள் காலையில் போலீஸ் ஸ்டேஷனே கொண்டாட்ட கோலத்திற்கு மாற முத்துப்பாண்டி என்ன விசேஷம் என்று குழப்பம் அடைய இசக்கியோட பிறந்த நாளை இங்க தான் கொண்டாட போறோம் என்று சொல்கின்றனர். அடுத்து, இசக்கி பிறந்த நாளை கொண்டாட எல்லாரும் ஸ்டேஷனில் ஒன்று கூட சனியன் என்ட்ரி கொடுக்க முத்துப்பாண்டி அவனை பிடிக்க போக சௌந்தரபாண்டி அவனை ஒன்னும் பண்ண முடியாது. அவனுக்கு முன் ஜாமின் வாங்கியாச்சு என்று ஆர்டர் காபியை எடுத்து காட்டி அதிர்ச்சி கொடுக்கிறான்.
இதையடுத்து இசக்கியின் பிறந்த நாளை கொண்டாட முத்துப்பாண்டி ஆசையாக அவளுக்கு கேக் ஊட்டி விட்டு வாழ்த்து சொல்ல அனைவரும் சந்தோசப்பட சௌந்தரபாண்டி கடுப்பாகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











