கதறும் குடும்பத்தை பார்த்து சந்தோஷப்படும் சௌந்தரபாண்டி..அண்ணா சீரியலில் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், உயிரோடுக்கு போராடிக் கொண்டிருந்த சூடாமணி கண் முன் ரத்னாவின் கல்யாணம் நடக்கிறது. பின் சூடாமணி, சண்முகத்திடம் இனிமே நீ. அருவா எடுக்கக் கூடாது தங்கச்சிகளை நல்லபடியா, படிக்கவைத்து கட்டி கொடுத்து கரை சேர்க்க வேண்டும் என சத்தியம் வாங்கி கொண்டு உயிரை விடுகிறாள்.
மொத்த குடும்பமும் சூடாமணியை கட்டிப்பிடித்து அழுதுக்கொண்டு இருக்க, சூடாமணியின் உடல் வீட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. அனைத்து சடங்குகளையும் நான்கு தங்கைகளும் சேர்ந்து செய்கின்றனர். சண்முகம் கண்ணீருடன் சூடாமணிக்கு கதறி எழுதபடி கொள்ளி வைக்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா: இன்றைய எபிசோடில், சூடாமணியின் பிரிவால் மொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கி துடிக்கிறது.அதன் பிறகு வீட்டில் ஷண்முகம் குடும்பம் மொத்தமும் சாப்பிடாமல் கண் கலங்கியபடி இருக்க பாக்கியம் வெட்டுக்கிளி மற்றும் உடன்குடியிடம் சாப்பாடு வாங்கிட்டு வர சொல்லி சாப்பிட வைக்கிறாள். ஷண்முகம் அம்மாவை நினைத்து கண் கலங்குகிறான்.
பிறகு தங்கைகள் எல்லாரும் ஒன்றாக தூங்கி கொண்டிருக்க ஷண்முகத்திற்கு அம்மா சூடாமணி பக்கத்தில் உட்கார்ந்து அவர்களை பார்த்து கொண்டிருப்பது போன்று தோன்ற திடீரென ரத்னா தூக்கத்தில் இருந்து எழுந்து அம்மாவை நினைத்து அழுகிறாள். ஷண்முகம் சோகத்தை மனதில் வைத்து கொண்டு தங்கைகளுக்கு ஆறுதல் சொல்லி விட்டு அம்மாவாக நினைக்கும் மரத்தின் அருகே வந்து இதுவரைக்கும் மரத்தை திட்டி மட்டுமே பேசிய ஷண்முகம் முதல் முறையாக அம்மாவை நினைத்து எமோஷனலாக பேசி மரத்தை கட்டியணைத்து கண் கலங்குகிறான்.

கதறி அழுத சண்முகம்: மொத்த குடும்படும் கதறுவதைப் பார்த்த முத்துப்பாண்டி, இந்த குடும்பத்தை இப்படி செய்துவிட்டாரே, இனிமே சௌந்தரபாண்டி திருந்த வாய்ப்பே இல்லை, அவரை புடிச்சி ஜெயிலில் போட வேண்டும் என, உச்ச கட்ட கோவத்தில் இருக்க, அழுதுகொண்டு இருந்த சண்முகம், இன்னைக்கு இந்த குடும்பம் இப்படி ஆனதுக்கு காரணமே உன் அப்பா தான். நான் எவ்வளவு கஷ்டப்பட்டு அவரை புடிச்சி கொடுத்தேன், பின் அவன் எப்படி வெளியில் வந்தான். உன்னாலத்தான் அவன் வெளியில் வந்தான். உன் அப்பன் உயிரோட இருக்க வேண்டும் என்றால், ஒழுங்கா அவனை புடிச்சி ஜெயில்ல போடு இல்லனா, நான் கொலைகாரனா மாறிவிடுவேன் என்று முத்துப்பாண்டியிடம் கத்துகிறான்.
இதைக்கேட்ட பாக்யம், அய்யோ அந்த சாமியார் சொன்னாரே கல்யாணம் நடந்தா உயிர் பலி நடக்கும் என்று நான், கேட்காம போயிட்டேனே, மறுபடியும் இந்த புள்ளைங்க அனாதையாக நிக்குதே என்று கதறி அழுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











