சாவு விழுந்த குடும்பத்தில் இப்படியா.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோடு!
சென்னை: நேற்றைய எபிசோடில், மொத்த குடும்பமும் கதறுவதைப் பார்த்த முத்துப்பாண்டி, இந்த குடும்பத்தை இப்படி செய்துவிட்டாரே, இனிமே சௌந்தரபாண்டி திருந்த வாய்ப்பே இல்லை, அவரை புடிச்சி ஜெயிலில் போட வேண்டும் என, உச்ச கட்ட கோவத்தில் இருக்க, அழுதுகொண்டு இருந்த சண்முகம்,
இன்னைக்கு இந்த குடும்பம் இப்படி ஆனதுக்கு காரணமே உன் அப்பா தான். நான் எவ்வளவு கஷ்டப்பட்டு அவரை புடிச்சி கொடுத்தேன், பின் அவன் எப்படி வெளியில் வந்தான். உன்னாலத்தான் அவன் வெளியில் வந்தான். உன் அப்பன் உயிரோட இருக்க வேண்டும் என்றால், ஒழுங்கா அவனை புடிச்சி ஜெயில்ல போடு இல்லனா, நான் கொலைகாரனா மாறிவிடுவேன் என்று முத்துப்பாண்டியிடம் கத்துகிறான். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடு, காலையில் பரணி எழுந்து வந்து அத்தை இருந்து இருந்தால் இந்நேரம் கோலம் போட்டுட்டு இருப்பாங்க என்று வருத்தப்பட்டு பிறகு நான் கோலம் போடுகிறேன் என்று சமாதானம் செய்கிறாள். மறுபக்கம் சௌந்தரபாண்டிக்கு முத்துப்பாண்டி காபி போட்டு கொடுக்க அதை குடிக்க முடியாமல் சௌந்தரபாண்டி என்னடா காபி போட்டு இருக்க என்று திட்ட முத்துப்பாண்டி குடிக்க கேட்டங்களேன்னு போட்டு கொடுத்தேன், குடிக்க முடிந்தால் குடிங்க, இல்லனா விடுங்க என்று பதிலடி கொடுக்கிறான்.
ரத்னாவின் ரிஷப்ஷன்: அடுத்ததாக வெங்கடேஷ் குடும்பத்தினர் சௌந்தரபாண்டியை சந்தித்து பொண்ணு வீட்டு காரர்கள் கேட்டுக்கிட்டதால் கல்யாணத்தை சிம்பிளா கோவிலில் வச்சிக்க சம்மதம் சொன்னோம். அதே நேரத்தில் ரிஷப்ஷனை கிராண்டா வச்சிக்கலாம் என்று முடிவெடுத்து இருந்தோம். ஆனால், இப்போ குடும்பம் இருக்கும் நிலைமையிலே, அதை பத்தி நீங்க தான் ஷண்முகம் குடும்பத்துல பேசி சம்மதம் வாங்கி தரணும் என்று சொல்கின்றனர்.
அடுத்த பஞ்சாயத்து: உடனே சௌந்தரபாண்டி, நான் சொன்னா எல்லாம் அவங்க கேட்க மாட்டாங்க, இவன் கிட்ட சொல்லுங்க என்று முத்துபாண்டியை கை காட்ட அவன் ஷண்முகத்திடம் பேசுவதாக வாக்கு கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்


Click it and Unblock the Notifications











