அம்மா செத்து 3 நாள்.. இதுக்குள்ள ரிசப்ஷனா? அண்ணா சீரியலில் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், சண்முகம் வீட்டிற்கு வரும் வெங்கடேஷன் அப்பா, அம்மா, ரத்னாவிடம் ரிசப்ஷன் குறித்து பேச ரத்னா அம்மாவிற்கு விளக்கு போடணும் என்பதால் வர மாட்டேன் என்று மறுத்து அழுகிறாள். உடனே ஷண்முகம் அவ வருவா நாங்க கூட்டிட்டு வருகிறோம் என்று வாக்கு கொடுக்கிறான். அதன்பின், நமக்காக கல்யாண விஷயத்தில் நிறைய விட்டு கொடுத்து போய் இருக்கா, இதனால்,இந்த நேரத்தில், நாம் விட்டு கொடுக்க வேண்டும் என்று ரத்னாவிற்கு எடுத்து சொல்கிறான்.
இங்கே வெங்கடேஷ் வீட்டில் இருக்க அவனது உறவினர்கள் அனைவரும், எந்த ஊரில் இந்த கொடுமை நடக்கும் கல்யாணம் ஆனதும்,அம்மா வீட்டுல இருக்கா என்று ரத்னாவை பற்றி தப்பாக பேசி ஏற்றி விட இதைக்கொண்ட வெங்கடேஷ் மிகவும் வேதனைப்படுகிறான். இதைத்தொடர்ந்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், பரணி, பாக்யம் என அனைவரும் இந்த ரிசப்ஷனுக்கு சம்மதம் தெரிவித்துத்தான் ஆக வேண்டும். அது தான் சூடாமணியோட ஆசை, நீ நல்ல வாழவேண்டும் என்று ஆசைப்பட்டாங்க இதனால் நீ முதலில் கிளம்பி வெங்கடேஷ் வீட்டுக்கு போ, அங்க உன் மாமியார் மாமியாரின் சொத்தக்காரங்க உனக்காக காத்துக்கிட்டு இருக்காங்க அவங்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிடாதே, இங்கு நடக்க வேண்டியதை நாங்க பார்த்துக்கொள்கிறோம் என்று பாக்கியம் சொல்லுகிறாள்.
கதறி அழுத ரத்னா: இதைத்தொடர்ந்து சண்முகம், அத்தை சொல்லுவது தான் சரி, ரத்னா நீ கிளம்பி வெங்கடேஷ் வீட்டுக்கு போ என்கிறான். இதைக் கேட்ட ரத்னா, என்ன அண்ணா, நீயும் இப்படி சொல்றா, வீட்டில் இப்படி ஒரு விஷயம் நடந்து இருக்கு அம்மாவை பறிகொடுத்து இருக்கோம். இதையெல்லாம் மறந்துவிட்டு, நகை நட்டு, பட்டுப்புடவை கட்டிக்கிட்டு நான் எல்லார் முன்னாடி எப்படி அண்ணன் நிற்பது, என்னாலத்தானே அம்மாவே செத்துப்போச்சு என்று ரத்னா கதறிஅழுகிறாள்.
நீ நல்ல வாழணும்: உடனே சண்முகம், ஏய் ரத்னா அழுவதே, அம்மா ஒன்னும் சாகல, நம்ம கூடத்தான் இருக்காங்க, அம்மா இறந்ததற்கு யாரும் காரணம் இல்ல அவங்க விதி முடிஞ்சி போச்சு அவ்வளவு தான், இனிமேல் நீ உன் வாழ்க்கையை நல்லபடியா பார்த்துக்கோ, நீ நல்லா வாழவேண்டும் என்பதுதான் அம்மாவின் ஆசை என்று சொல்லி, ரத்னாவை சமாதானப்படுத்தி வெங்கடேஷ் வீட்டுக்கு அனுப்பிவைக்கிறான்.
கடுப்பான ரத்னா: இதையடுத்து, ரத்னா வெங்கடேஷன் வீட்டுக்கு வருகிறாள், அப்போது அங்கு இருந்த வெங்கடேஷன் உறவினர்கள், ஏன்டா இந்த சீமாட்டியை கல்யாணம் பண்ணிக்கத்தான் இத்தனை போராட்டமா, தாலி கட்டுனதும் புருஷன் வீட்டுக்கு வந்து புருஷன் கூட இல்லாம, நீ போய் உன் அம்மா வீட்டுல உங்காந்துக்கிட்ட என்னமா அர்த்தம் என்று அனைவரும் மாறி மாறி கேள்வி கேட்க,ரத்னா பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறாள். இதையடுத்து வெங்கடேஷ் அவங்க வீட்டில் ஒரு முக்கியமான விஷயம் அதான்,நான் தான் அனுப்பி வெச்சேன் என்று சொல்லுகிறான்.
அம்மா செத்து 3 நாள்: இதையடுத்து,ரூமில் ரத்னா அழுதுக்கொண்டு இருக்க, வெங்கடேஷ் உள்ளே வந்து ரத்னாவை சமாதானப்படுத்துகிறான். அப்போது ரத்னா, அம்மா செத்து 3 நாள் கூட ஆகல, அதுக்குள்ள எதுக்கு இந்த ரிசப்ஷன், எங்க வீட்டில் இருந்து யாரும் வரல, நான் மட்டும் எப்படி என்று கதறி அழுகிறாள். அவளை சமாதானப்படுத்திய வெங்கடேஷ், ரத்னா உன் நிலை எனக்கு புரிந்து, ரிசப்ஷன் முடிந்ததும் நானும் உன் கூட வந்து எத்தனை நாள் வேண்டுமானாலும் இருக்கேன் என்று சொல்லி அவளை சமாதானப்படுத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











