சௌந்தரபாண்டி தலையை வெட்டணும்.. குடித்துவிட்டு புலம்பும் வைகுண்டம்.. அண்ணா சீரியலில் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், பரணி, பாக்யம் என அனைவர் சொன்னதையும் கேட்டு, ரத்னா வெங்கடேஷன் வீட்டுக்கு வருகிறாள், அப்போது அங்கு இருந்த வெங்கடேஷன் உறவினர்கள் திட்டுகின்றனர். உடனே வெங்கடேஷ் அவங்க வீட்டில் ஒரு முக்கியமான விஷயம் அதனால, நான் தான் அனுப்பி வெச்சேன் என்று சொல்லுகிறான்.

பின் ரூமிற்கு வரும் வெங்கடேஷ், ரத்னாவை சமாதானப்படுத்துகிறான். உன் நிலை எனக்கு புரியுது, ரிசப்ஷன் முடிந்ததும் நானும் உன் கூட வந்து எத்தனை நாள் வேண்டுமானாலும் இருக்கேன் அதுவரைக்கும் கொஞ்சம் பொருத்துக்கோ என்கிறான். இதைத்தொடர்ந்து, சௌந்தரபாண்டி, ரத்னாவிடம் சூடாமணி பற்றி பேசி, ரிசப்ஷனை கெடுக்க திட்டம் போட்டு அனுப்புகிறான். இதைத்தொடர்ந்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil anna

அண்ணா சீரியல்: இன்றைய சீரியலில், ஷண்முகம் வீட்டில் மரத்தடியில் விளக்கு போட அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டு இருக்க, துக்கம் தாங்காமல் குடித்துவிட்டு வந்து, என் சூடாமணியை கொன்றது சௌந்தரபாண்டியன் தான் அவன் சாகாமல் நான் விளக்குப்போடவிட மாட்டேன் என்று சொல்லி, அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறான். உடனே பரணி, மாமா இத்தனை நேரத்தில் கூட வா குடிச்சிட்டு வருவீங்க, அத்தைக்கு இது நாம செய்யும் சடங்கு மாமா என்று சொல்கிறான்.

சௌந்தரபாண்டி தலை வேண்டும்: உடனே வைகுண்டம், சரி தான், ஆனால் என் சூடாமணியை கொன்னது சௌந்தரபாண்டி தான், இல்லனா மருதப்பனுக்கு எப்படி ரத்னா கல்யாணம் நடக்கும் இடம் தெரியும் என்று, போதையில் புலம்பிக்கொண்டு இருக்கிறான். பிறகு, சண்முகம், வைகுண்டத்தை சமாதானப்படுத்தி அழைத்து வந்து விளக்கு போட சொல்கிறான். ஆனால், காற்றின் காரணமாக விளக்கு எரியவில்லை என்று நினைத்து தடை கட்டி விளக்கேற்ற அப்போதும் விளக்கு எரியாததால் வைகுண்டம் அந்த சௌந்தரபாண்டி தலையை கொண்டு வந்து வைத்து விளக்கு ஏற்றினால் தான் விளக்கு எரியும் என்று ஆவேசமாக கத்துகிறான்.

விளக்குபோட்டா என்ன போடாட்டி என்ன: வெங்கடேஷன் வீட்டி ரத்னா ரிசப்ஷனுக்கு ரெடியாகிக் கொண்டு இருக்கிறாள். அப்போது, சௌந்தரபாண்டி திட்டத்தின் படி தாய் மாமா வெங்கடேஷ் இரண்டு மூன்று பெண்களை ரத்னாவின் அறைக்கு அனுப்பி அவளை கடுப்பாக்குகின்றனர்., உங்க அம்மா செத்துவிட்டார்கள் அதற்காக அழுதுக்கொண்டே இருந்தா எப்படி என்றும், உன்னை எப்படி வெங்கடேஷ் கல்யாணம் செய்துகொண்டான் என்று கேட்கின்றனர். அந்த நேரம் பார்த்து அங்கு வெங்கடேஷன் வந்து, ரத்னா அழுதுக்கிட்டே இருக்காதே, போட்டோல அசிங்கமா இருக்கும் உன்னை பத்தி மட்டும் யோசிக்காதே அடுத்தவங்கள பத்தியும் யோசி என்கிறார். இதைகேட்டு, ரத்னா கண்ணீர் விட்டு அழுகிறாள்.

அடுத்து நடப்பது என்ன: இதையடுத்து, ரத்னா, இசக்கிக்கு போன் செய்து விளாக்கு போட்டாச்சா என்று கேட்க, அவள் விளக்கு எரியாத விஷயத்தை சொல்கிறாள். கனி ஒரு வேளை அம்மாவுக்கு நம்ம மேல கோபமா என்று பேச ரத்னா ரிசப்ஷன் தொடங்க இன்னும் 1 மணி நேரம் இருப்பதால் அம்மாவுக்கு விளக்கு போட கிளம்பி வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X