தாலியை கழட்டி கேட்ட வெங்கடேஷ்.. ஷண்முகம் சமாளிக்க போவது எப்படி? அண்ணா சீரியலில் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், ஷண்முகம் வீட்டில் மரத்தடியில் விளக்கு போட அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டு இருக்க, துக்கம் தாங்காமல் குடித்துவிட்டு வந்து, என் சூடாமணி கொன்றது சௌந்தரபாண்டி தான் அவன் சாகாமல் நான் விளக்குப்போடவிட மாட்டேன் என்று சொல்லி, அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறான். பிறகு, சண்முகம், வைகுண்டத்தை சமாதானப்படுத்தி அழைத்து வந்து விளக்கு போட சொல்கிறான். ஆனால், யார் ஏற்றியும் விளக்கு எரியாததால் அனைவரும் கவலை அடைகின்றனர்.
மேலும், வெங்கடேஷன், ரத்னா அழுதுகிட்டே இருக்காதே, போட்டோல அசிங்கமா இருக்கும் உன்னை பத்தி மட்டும் யோசிக்காதே அடுத்தவங்கள பத்தியும் யோசிக்காதே என்று கண்ணீர் விட்டு அழுகிறாள். மேலும், விளக்கு எரியாததை சொல்ல ரத்னா கவலைப்படுகிறாள். உடனே ரத்னா, ரிசப்ஷன் தொடங்க இன்னும் 1 மணி நேரம் இருப்பதால் அம்மாவுக்கு விளக்கு போட கிளம்பி வருகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், அனைவர் விளக்கு ஏற்றியும் எரியாததால், வைகுண்டம், சௌந்தரபாண்டி செத்தா தான் விளக்கு எரியும் என்கிறான். அந்த நேரம் பார்த்து ரத்னா ஓடி வர அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதைப்பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்து திட்ட, ரிசப்ஷனுக்கு இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு, விளக்கு ஏற்றிவிட்டு கிளம்பி விடுகிறேன் என்று சொல்லி, ரத்னா விளக்கு ஏற்ற, விளக்கு எரிகிறது.
அம்மா தான் முக்கியமா: மறுபக்கம் வெங்கடேஷ் ரத்னாவை பார்க்க வர அவள் இல்லாமல் இருக்க, ரத்னா எங்கே என்று கேட்க, தாய் மாமா அவ அம்மாவுக்கு விளக்கு போடுறது தான் முக்கியம்னு போய்ட்டா என்று ஏற்றி விடுகிறான். அவன் மட்டுமில்லாமல் மற்றவர்களும், அவளுக்கு கல்யாண ஆனதில் விருப்பமே இல்ல போல, பெண் புடிச்சித்தானே கல்யாணம் பண்ணீங்க என்று கேட்டு, வெங்கடேசனை ஏற்றி விடுகின்றனர்.
தாலியை கழட்டி கொடு: இதனால், கோபமடைந்த வெங்கடேஷ் ரிஸப்ஷனை நிறுத்துமாறு சொல்கிறான். அவனின் அம்மா, அப்பா அவ விளக்கு போடத்தானே போயிருக்கா வந்துடுவா என்று சொல்லி சமாதானம் செய்தும் வெங்கடேஷன் சமாதானம் ஆகாமல், இதுக்கு போல என்னால விட்டு கொடுத்து போக முடியாது என்று சொல்லிவிட்டு கோபமாக கிளம்பி ஷண்முகம் வீட்டிற்கு வருகிறான். ரத்னாவிடம் உனக்காக நிறைய விட்டு கொடுத்து போய்ட்டேன், இனிமேலும் என்னால் விட்டு கொடுக்க முடியாது. நான் ஒரு தேதியை சொல்றேன், வந்து தாலியை கழட்டி கொடுத்திட்டு போ என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். சௌந்தரபாண்டிக்கு விஷயம் தெரிந்து சந்தோசப்படுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











