சௌந்தரபாண்டியின் பிளான் சொதப்பல்.. மாட்டிக்கொண்ட தாய்மாமன்.. அண்ணா இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், ஏகேஎஸ் அண்ணாச்சி மகளை சிவபாலனுக்கு திருமணம் செய்து வைக்க பிளான் போட்டு, பெண் பார்க்க அழைத்து செல்கிறான். அப்போது, தனியாக பேச வேண்டும் என்று சொல்ல, அப்போது, நான் வேறொரு பொண்ணை காதலிக்கிறேன் எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்கிறான். ஆனால் ஏகேஎஸ் அண்ணாச்சி மகள் நீங்க யாரை வேணாலும் லவ் பண்ணுங்க, ஆனால் கல்யாணத்திற்கு பிறகு என்னை மட்டும் லவ் பண்ணுங்க என்று சொல்கிறாள்.
அடுத்து சௌந்தரபாண்டி வெங்கடேஷின் தாய்மாமாவுக்கு போன் செய்து, இசக்கி பையில் நகையை திருடி போட்டு விடு என்று சொல்கிறான். இதைத்தொடர்ந்து தாய்மாமனும் நகையை திருடி இசக்கி பையில் போட்டு விடுகிறான் இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா: இன்றைய சிரியலில், குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமாக நகை எடுத்து விட்டு வெளியில் கிளம்ப, அந்த நகை கடையில் வேலை செய்யும் பெண், நான்கு சவரன் செயினை காணவில்லை என்று சொல்ல அதிர்ச்சி அடைந்த நகைக்கடைக்காரர் போலீசுக்கு போன் செய்கிறார். இதைத்தொடர்ந்து, போலீஸ் வேன் இவர்களை வழிமறித்து, நகை காணாமல் போய் விட்டதாக சொல்லி, அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கின்றனர்.
இசக்கி பையில் நகை: அப்போது, வெங்கடேஷின் தாய்மாமா ஓவராக பேசுவதை பார்த்து சிவபாலனுக்கு லேசாக சந்தேகம் வருகிறது. இதன்பின், சிவபாலன், இசக்கி கை பையில் நகை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். இதுபற்றி, இசக்கியிடம் கேட்க அவள், எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல இது எல்லாம், வெங்கடேஷின் தாய்மாமாவின் வேலை என்பது தெரியவருகிறது.
சிவபாலன் ஐடியா: இதையடுத்து,சிவபாலன் ஒரு ஐடியா போடுகிறான். அதாவது, கனி மயக்கம் போட்டு விழுவது போல நடி, நான் அதற்குள் நகையை, மாமாவின் பாக்கெட்டில் போட்டு விடுகிறேன் என்று சொல்கிறான். இதையடுத்து, ஒவ்வொருவரின் கை பையையும் போலீசார் சோதித்துக்கொண்டு இருக்க கனி, மயக்கம் போட்டு விழுகிறாள். அந்த நேரம் பார்த்து, சிவபாலன், இசக்கி பையில் இருந்த நகையை எடுத்து, வெங்கடேஷின் தாய்மாமாவின் பாக்கெட்டில் போட்டுவிடுகிறான்.
மாட்டிக்கொண்ட தாய்மாமன்: இதைத்தொடர்ந்து, போலீசார், அனைவரையும் சோதனை செய்துவிட்டு தாய்மாமாவின் பாக்கெட்டில் கையைவிட அதில், நகை இருப்பதை கண்டுபிடித்து அவரை வெளு வெளுவென வெளுக்கின்றனர். கடைசியில் சௌந்தரபாண்டி போட்ட பிளான் சொப்பலாகி விடுகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











