ரத்னாவை நடுத்தெருவில் நிறுத்துவேன்.. புருஷன் செய்யும் வேலையா இது? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் !

சென்னை: நேற்றைய எபிசோடில், ஷண்முகம் காலில் விழுந்தும், மனம் மாறாத வெங்கடேஷ், அடுத்த நாள் காலை பேக்கை எடுத்து கொண்டு ஷண்முகம் வீட்டிற்கு கிளம்புகிறான். அப்போது வீட்டில் என்னை அவமானப்படுத்திய ரத்னாவிடம் இருந்து ஸ்கூலை பிடிங்க, அவளை நடுரோட்டில் நிற்க வைக்கிறேன் என்று சபதம் எடுத்துவிட்டு, சண்முகம் வீட்டிற்கு வருகிறான்.

இதை தொடர்ந்து, அனைவரும், அவரை உள்ளே கூப்பிட அவன் ரத்னா சொல்லாமல் உள்ளே வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறான். இதை பார்த்து ஷண்முகம், ரத்னாவிடம் வந்து உள்ளே கூப்பிடு என்று சொல்ல, அவள், அண்ணே நீ அந்த குடும்பத்தோட காலில் விழுந்த போது, அவர் எதுவுமே பேசலையே, அவர நான் ஏன் கூப்பிடனும் என்று சொல்ல சண்முகம் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார்.

zee tamil anna

அண்ணா: இன்றைய எபிசோடு, அனைவரும், வெங்கடேஷை உள்ளே கூப்பிட, அவன் திடீரெண ஷண்முகம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க ரத்னா மனம் இறங்கி உள்ளே வாங்க என்று கூப்பிடுகிறாள். உள்ளே கூப்பிடவே இவ்வளவு யோசிக்கிறியா? உன்னை எப்படி அவமானப்படுத்துறேன்னு மட்டும் பாரு என்று மைண்ட் வாய்ஸில் சவால் விட்டு கொள்கிறான். அடுத்ததாக வெங்கடேஷ் உள்ளே வந்ததும் அவனை எங்கே தங்க வைப்பது? அம்மா இறந்து போன இந்த நேரத்தில் அவங்களை ஒண்ணா ரூமுக்குள் தங்க வைக்கிறது சரியா இருக்குமா என்று சண்முகமும் வைகுண்டமும் குழப்பம் அடைகின்றனர். அப்போது பரணி, சண்முகம் இப்போது முதலிரவு நடந்தா சரியாக இருக்காது. இதனால், நான் ரத்னா கூடபடுத்துக்கொள்கிறேன். நீ வெங்கடேஷன் கூட படுத்துக்கொள் என்று பேசி விட்டு வெளியே வருகின்றனர்.

கோபத்தின் உச்சத்தில் வெங்கடேஷ்: அப்போது வெங்கடேஷ் ஹாலில் பாயை விரித்து போட்டு படுத்திருப்பதை பார்த்து ரூமுக்குள் தூங்க சொல்ல, நம்ம வீடு எங்க படுத்தா என்ன இருக்கு, நான் இங்கேயே தூங்கி கொள்கிறேன் என்று சொல்ல மாப்பிள்ளைக்கு நல்ல மனசு என சந்தோசப்படுகின்றனர். அடுத்து பரணியும் சண்முகமும் ரூமுக்குள் வெங்கடேஷை பற்றி பெருமையா பேச அவன் கொசுக்கடியால் தூக்கம் வராமல் தோட்டத்தில் உட்கார்ந்து இருக்கிறான். இதைப்பார்த்த ரத்னா, ரொம்ப நன்றி வெங்கடேஷ் என்று சொல்கிறான். உடனே வெங்கடேஷ் எதுக்கு நன்றி எல்லாம் இதுநம்ப வீடு என்று, மொத்த கோவத்தையும் மனதில் வைத்துக்கு கொண்டு ரத்னாவிடம் நடிக்கிறான்.

ஆறுதல் சொல்லும் முத்துப்பாண்டி: மறுபக்கம் இசக்கி, அண்ணா சண்முகம், வெங்கடேஷ் குடும்பத்தினரின் காலில் விழுந்ததை நினைத்து வருத்தப்பட அதை பார்த்த பாக்யம், டேய் முத்துப்பாண்டி, இசக்கி அம்மாவை நினைச்சி அழுதுக்கிட்டு இருக்கா, அவளுக்கு ஏதாவது ஆறுதல் சொல்லுடா என்று சொல்கிறாள். இதையடுத்து, முத்துப்பாண்டி இசக்கியின் பக்கத்தில் உங்கார்ந்து, ஆறுதல் சொல்ல இவர்களின் அன்னோன்னியத்தை பார்த்த சௌந்தரபாண்டி அதை கெடுத்து விட முயற்சி செய்ய சிவபாலன் அவரை திசை திருப்பி வெளியே அழைத்து வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X