கொஞ்ச நேரத்தில் கதை முடிஞ்சி இருக்கும்.. உயிர்தப்பிய சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் !
சென்னை: நேற்றைய எபிசோடில், வெங்கடேஷ், ரத்னாவை பழிவாங்கும் எண்ணத்தோடு சண்முகத்தின் வீட்டிற்கு வந்து, திடீரென சண்முகத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க ரத்னா மனம் இறங்கி உள்ளே வாங்க என்று கூப்பிடுகிறாள். அடுத்ததாக வெங்கடேஷ் உள்ளே வந்ததும் அவனை எங்கே தங்க வைப்பது? அம்மா இறந்து போன இந்த நேரத்தில் அவங்களை ஒண்ணா ரூமுக்குள் தங்க வைக்கிறது சரியா இருக்குமா என்று சண்முகமும் வைகுண்டமும் குழப்பம் அடைகின்றனர். அப்போது, வெங்கடேஷன் ஹாலில் பாய் போட்டு படுத்துக்கொள்கிறான். இதைப்பார்த்து அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
இன்றைய எபிசோடில், ரத்னா, சண்முகத்திடம் என்ன சமைக்க வேண்டும் என்று கேட்க, இத்தனை நாள் எனக்கு பிடித்ததைத்தான் சமைத்து கொடுத்தீங்க இனிமே, நம்ம மாப்பிள்ளை வெங்கடேஷனுக்கு என்ன பிடிக்குமோ அதை சமைத்து கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். எல்லாத்தையும் மறந்துட்டு மாப்பிள்ளை நம்ம வீட்டுக்கு வந்து இருக்கிறார். இவர் இங்க இருக்குற வரைக்கும் வெங்கடேஷை நல்லபடியாக பார்த்துக்கணும் என்று முடிவெடுக்கின்றனர்.

கோவப்படும் பாக்கியா: மறுபக்கம் முத்துப்பாண்டிக்கு இசக்கி அழகாக தலை குளித்துவிட்டு காபி கொண்டுவந்து தர, முத்துப்பாண்டி எங்கே அழுமூஞ்சி இசக்கியை காணோமே என்று கிண்டலாக கேட்க, என் புருஷனுக்கு அழுதா பிடிக்கல, அதான் இனிமேல் நான் அழமாட்டேன் என்று சிரித்துக்கொண்டே ரூமைவிட்டு வெளியே வருகிறாள். அதைப்பார்த்து விட்ட சௌந்தரபாண்டி, என்ன இசக்கி காலையிலேயே தலைக்கு குளிச்சி இருக்க என்ன விஷயம் என்று கேட்கிறான். இதைக் கேட்டுக்கொண்டு இருந்த பாக்கியம், வயசு தான் ஆகி இருக்கு அறிவு இல்லையா, மருமகள் கிட்ட இப்படி எல்லாமா கேள்வி கேட்பீங்க என்று திட்டுகிறாள்.
கழுத்தில் கத்தியை வைத்த சனியன்: இதையடுத்து, சௌந்தரபாண்டி வெளியே வர சனியன் வந்து நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். டேய் இங்கே ஏன்டா வந்த என்று கேட்க, சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சு அதான் வந்தேன் என்று சனியன் பணம் கேட்க, சௌந்தரபாண்டி அவனுக்கு பணத்தை கொடுத்துவிட்டு போ, இந்த பணத்தை வெச்சிக்கிட்டு எங்கேயாவது போ என்று சொல்கிறான். இதை சிவபாலன் பார்த்துவிட்டு முத்துப்பாண்டியிடம் சொல்ல, யூனிபார்மில் ஸ்டேஷன் கிளம்பி கொண்டு இருந்த முத்துப்பாண்டி துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஓடி வருகிறான்.
தப்பி ஓடிய சனியன்: முத்துப்பாண்டி கையில் துப்பாக்கி இருப்பதை பார்த்து பயந்து போன சனியன், மறைத்துவைத்து இருந்த கத்தியை எடுத்து சௌந்தரபாண்டி கழுத்தில் வைத்து மிரட்டுகிறான். அப்போது முத்துப்பாண்டி, ஏய் சனியன் ஒழுங்க சரண்டர் ஆகிடு என்று சொல்கிறான். அப்போது, பாக்யம், டேய் முத்துப்பாண்டி இரண்டு பேரையும் சுடுடா என்கிறாள். இசக்கியும் மாமா சுட்டுத்தள்ளுங்க அப்போத்தான் இந்த குடும்பம் நல்லா இருக்கும் என்று சொல்ல. முத்துப்பாண்டி சனியனைப் பார்த்து சுடும் நேரத்தில், சனியன் சௌந்தரபாண்டியை தள்ளிவிட்டுவிட்டு தப்பிச்சென்று விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











