தம்பிக்கு வில்லியாகும் பாண்டியம்மா.. கொலைகாரன் ஆவானா ஷண்முகம்? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், பரோலில் வெளியே வரும் பாண்டியம்மா, சௌந்தரபாண்டி வீட்டிற்குள் வந்ததும் வராததுமாக, இசக்கியை ஓடுகாலி பெத்த மகளே, வெறும் பய தங்கச்சி பேச கடுப்பான இசக்கி அவளது கழுத்தில் கைவைத்து மிரட்டுகிறாள்.
மறுபக்கம், சண்முகம் வீட்டில் அனைவரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்க, சண்முகம், மாப்பிள்ளை வெங்கடேஷனிடம், நீங்க உள்ளே கட்டிலில் ரத்னாவுடன் படுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல, கடுப்பான ரத்னா, நான் இந்த வீட்டில் இருக்கும் வரைக்கும் கனி கூடத்தான் படுப்பேன் என்று சொல்கிறாள். இதைக்கேட்ட வெங்கடேஷனுக்கு ரத்னா மீது அதிகமாக கோவம் வருகிறது. இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா: இன்றைய சீரியலில், பாண்டியம்மா நல்லவள் போல பேசி சௌந்தரபாண்டியிடம் வேஷம் போடுகிறாள். நீ பண்ணது தான் சரி தம்பி, ரெண்டு பேரும் ஜெயிலுக்குள்ள போய் இருந்தா இங்கே எதுவும் பண்ணியிருக்க முடியாது என்று சொல்கிறாள். அதே நேரத்தில் பாண்டியம்மா, டேய் சௌந்தர பாண்டி, என்னையா ஜெயிலுக்கு அனுப்பின. உன் கூடவே நல்லவ மாதிரி இருந்து அந்த சண்முகத்தை ஏற்றிவிட்டு அவன் கையாலே உன்னை கொலை பண்ண வைக்கிறேன் என சபதம் எடுப்பதோடு. சண்முகம், சௌந்தரபாண்டியை வெட்டிக் கொல்வது போல நினைத்து பார்த்து சந்தோஷமும் அடைகிறாள்.
குழப்பத்தில் சௌந்தரபாண்டி: சௌந்தரபாண்டிக்கும் பாண்டியம்மா மீது ஒரு சின்ன சந்தேகம் வருகிறது. குடும்பத்தினர் எல்லோரும் நீங்கதானே பாண்டியம்மாவை வெளியே எடுத்தீங்க என்று கேள்வி கேட்க சௌந்தரபாண்டி எனக்கே தெரியாது என்று சொல்லி பாண்டியம்மாவிடம் சென்று எப்படி வெளியே வந்தா? என்று விசாரிக்கிறார். பாண்டியம்மாவை பரோலில் வெளியே வந்த விஷயத்தை பாக்யம் பரணிக்கு போன் போட்டு சொல்லுகிறாள்.
வில்லியாகும் பாண்டியம்மா: இதையடுத்து, நடு இரவில் சனியனை பார்க்க வரும் சௌந்தரபாண்டி, பாண்டியம்மா வந்து இருக்கும் விஷயத்தை சொல்ல சனியன் அதிர்ச்சி அடைந்து, இருக்கும் பிரச்சனை பத்தாதுனு, இவங்க வேற எப்படி வந்தாங்க என்று கேட்கிறான். அதுதான் எனக்கும் புரியல, வந்ததுமே சூடாமணி நாம தான் கொன்னோம்னு சொல்லுற, இவளை இப்படியே விட்டா, எல்லா உண்மையையும் சொல்லிடுவா, இவளையும் சூடாமணியை போட்டு தள்ளியது போல போட்டு தள்ள வேண்டும் என்று கோபத்தோடு சௌந்தரபாண்டியன் பேசுகிறான்.
உடனே சனியன், சூடாமணி வேற, பாண்டியம்மா உங்க அக்கா அவங்களை எப்படி கொல்வது என்று கேட்கிறான். அவளை ஜெயிலுக்கு அனுப்பியதால், கொலை வெறியோட வீட்டுக்கு வந்து இருக்கா, அதுவும் அவளை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு ஒருமுறை கூட, அவளை போய் பாக்கவில்லை. என் அக்காவை பத்தி எனக்கு தெரியாதா, ஏதோ திட்டத்தோடு தான் இந்த வீட்டுக்கு வந்து இருக்கா, அடுத்து அவள பிளான் போடுவதற்குள் அவளை இந்த வீட்டை விட்டு அனுப்பனும் இல்லனா போட்டுத்தள்ள வேண்டும் என்று சௌந்தர பாண்டிய பேசுகிறான்.
ஆட்டத்தை ஆரம்பித்த பாண்டியம்மா: அதைத் தொடர்ந்து ஷண்முகம் வீட்டு பாண்டியம்மா வந்து நிற்கிறாள். இதைப்பார்த்த கனி பயத்தில் கத்த அனைவரும் ஓடிவருகின்றனர். திமிராக உள்ளே வரும் பாண்டியம்மா, பரணியைப் பார்த்து என் தம்பி பெத்த தங்க சிலையே எப்படி இருக்க என்று கேட்க, கோவப்பட்ட பரணி, பாண்டியம்மாளின் கையை தட்டிவிட்டு எதற்கு இங்கே வந்தே என்று கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











