உன் குடுமி என் கையில..சௌந்தரபாண்டியை மிரட்டும் பாண்டியம்மா.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், நடு இரவில் சனியனை பார்க்க வந்த சௌந்தரபாண்டி, பாண்டியம்மா வீட்டுக்கு வந்து இருக்கா. அவள் ஏதோ ஒரு திட்டத்தோடு வீட்டுக்கு வந்து இருக்கா,அவளை ஜெயிலுக்கு அனுப்பியதால், கொலை வெறியோட வீட்டுக்கு வந்து இருக்கா. அவ ஏதோவது பிளான் போடுவதற்குள் அவளை இந்த வீட்டை விட்டு அனுப்பனும் இல்லனா போட்டுத்தள்ள வேண்டும் என்று சொல்லுகிறான்.
அதைத்தொடர்ந்து, ஷண்முகம் வீட்டுக்கு வந்த பாண்டியம்மாவை பார்த்து, கனி பயத்தில் கத்த அனைவரும் ஓடிவருகின்றனர். திமிராக உள்ளே வரும் பாண்டியம்மா, பரணியைப் பார்த்து என் தம்பி பெத்த தங்க சிலையே எப்படி இருக்க என்று கேட்க, கோவப்பட்ட பரணி, பாண்டியம்மாளை திட்டுகிறாள். ஆனால், பாண்டியம்மா சூடாமணி பற்றி தப்பு தப்பாக பேசுகிறாள். இதையடுத்து இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்.

அண்ணா: இன்றைய எபிசோடில், பாண்டியம்மா வீட்டிற்கு வந்து சூடாமணியை திட்டி பேசியதை நினைத்து பரணி, தங்கைகள் என எல்லாரும் கோபத்தில் இருக்கின்றனர். மேலும் இந்த விஷயம் ஷண்முகத்திற்கு தெரிய வேண்டாம், தெரிந்தா பெரிய பிரச்சனையாகிவிடும் என்று சொல்கிறாள் பரணி. ஆனால் வீட்டிற்கு வந்த ஷண்முகம், பாண்டியம்மா வீட்டுக்கு வந்து என்ன சொன்னா என்று கேட்க பரணி அதிர்ச்சி அடைந்து சமாளிக்க முயற்சி செய்கிறாள்.
கோபத்தில் சண்முகம்: உடனே சண்முகம், கனி எனக்கு போன் செய்து எல்லா விஷயத்தையும் சொல்லிட்டா என்று சொல்லி கோபமாகி அங்கிருந்து சௌந்தரபாண்டி வீட்டிற்கு கிளம்பி வருகிறான். குடும்பத்தினர் அனைவரும் ஷண்முகம் மீண்டும் அருவாளை எடுத்துட போறான் என்று பதறுகின்றனர். இதையடுத்து, சௌந்தரபாண்டி வீட்டுக்கு வரும் சண்முகம், என் வீட்டிற்கு வந்து என் அம்மாவையே தப்பா பேசுவியா என்று பொறுமையாக பேசி, முத்துபாண்டியிடம் பாண்டியம்மாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப சொல்கிறான்.
வெளியில போயிடு: அருளை எடுத்து தம்பி சௌந்தரபாண்டியை வெட்டுவான் என்று எதிர்பார்த்த பாண்டியம்மாவுக்கு சண்முகத்தின் பொறுமையை பார்த்து ஷாக் ஆகிறாள். இந்த திட்டம் இப்படி ஆகிபோச்சே, வேறொரு திட்டத்தை தான் போடணும் என்று முடிவெடுக்கிறாள். இந்த நேரத்தில் சௌந்தரபாண்டி வீட்டில் எல்லாரும் பாண்டியம்மாவை வெளியே போக சொல்ல சௌந்தரபாண்டியும், அக்கா நீ வெளியே போய்டு, நீ விட்டுக்கு வந்தது யாருக்கும் பிடிக்கல என்று சொல்கிறான்.
கம்பி எண்றியா: இதை தொடர்ந்து பாண்டியம்மா சௌந்தரபாண்டியை தனியாக அழைத்து சென்று நீ அடிச்ச நகையில் பாதி நகை இன்னும் என்கிட்டே தான் இருக்கு. நீ என்னை வீட்டை விட்டு அனுப்பினா நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று இந்த திருட்டுல உனக்கும் பங்கு இருக்குனு சொல்லிடுவேன். தம்பி இப்போ உன் குடுமி என் கையில, என்று மிரட்டுகிறாள். மேலும் நான் வீட்டை விட்டு போற மாதிரி போவேன், நீ என்னை தடுத்து நிறுத்தி வீட்டுக்குள்ள கூப்பிடனும், இல்லனா நீயும் கம்பி தான் எண்ணனும் என்று எச்சரிக்கை விடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











