இசக்கியை கடத்திய ரௌடி.. சௌந்தரபாண்டிக்கு பாண்டியம்மா வைத்த ஆப்பு..அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், பாண்டியம்மா என்னை வீட்டை விட்டு அனுப்பினா நீ கம்பி என்ன வேண்டியது தான் என்று சௌந்தர பாண்டியனை மிரட்டுகிறாள். மேலும், பாண்டியம்மா வீட்டை விட்டு கிளம்ப சௌந்தரபாண்டி நீ எங்கேயும் போக வேண்டாம், நீ கஷ்டப்படுறதை என்னால் பார்க்க முடியாது என்று தடுத்து நிறுத்த எல்லாரும் சௌந்தரபாண்டியை திட்டுகின்றனர்.
இதையடுத்து,இசக்கியும் முத்துபாண்டியும் கிளம்பி ஷண்முகம் வீட்டிற்கு வந்து அப்பா தான் அத்தையை அனுப்பல என்று சொல்ல சண்முகம் அதை கேட்காமல், முத்துபாண்டியன் மீது கோபப்படுகிறான். இதையடுத்து, அனைவரும் வீட்டில் சமைத்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கு, முத்துப்பாண்டி கையில் இரும்பு பெட்டி விழுந்து காயமாகிவிடுகிறது. இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

அண்ணா: இன்றைய சீரியலில், இசக்கி,பாக்யாவிடம் அத்தை மாமாவிற்கு கையில் நேற்று ரத்தக்காயம் ஆகிவிட்டது. இதனால், கோவிலுக்கு போய் பொங்கல் வைத்துவிட்டு வரலாம் என்று சொல்கிறாள். உடனே பாக்யம், சரி போகலாம் என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்புகின்றனர். அப்போது கோவிலில்,பாக்யம் இல்லாத நேரத்தில் இசக்கியை பாண்டியம்மாள் ஏற்பாடு செய்த ஆட்கள் கடத்திக்கொண்டு சென்றுவிடுகின்றனர். இதை தூரத்தில் இருந்து பார்த்துவிட்ட பாக்யம், முத்துப்பாண்டிக்கு போன் செய்து விஷயத்தை சொல்லுகிறாள்.
பாண்டியம்மாள் போட்ட பிளான்: மறுபக்கம், பாண்டியம்மாள் குரலை சௌந்தரபாண்டியன் போல மாற்றி, சண்முகத்திற்கு போன் செய்து, டேய் சண்முகம் என்கிட்ட பிரச்சனை வச்சிக்காத என்று எத்தனை முறை சொல்லி இருக்கிறேன் நீ கேட்டியா. இப்போ, உன் தங்கச்சி இசக்கி என்கிட்ட வசமா மாட்டிக்கிட்ட என்ற சொல்கிறாள். அதையடுத்து ஷண்முகம், இசக்கியை தேடி அலைகிறான்.
இது அப்பா வேலைதான்: இசக்கி காணாமல் போன தகவலை கேட்டு பதறி ஓடி வந்த முத்துப்பாண்டி, அம்மா பாக்யாவிடம் யார் கடத்துனாங்க என்று தெரியுமா, ஆள பாத்தியா என்று கேட்க, யார் கடத்தினார்கள் என்று தெரியல. ஆனால், இது எல்லாம் உன் அப்பன் வேலையாத்தான் இருக்கும். அவன் உன்னை நல்லாவே வாழவிட மாட்டான். நேத்துத்தான் உன்னையும் இசக்கியையும் பிரிப்பேன் என்று சவால் விட்டான். அப்படி சொன்னபடியே செய்துவிட்டான் என்று சொல்லி பாக்கியா புலம்புகிறாள்.
வாயில் துப்பாக்கி: இதனால், கோவத்தின் உச்சத்திற்கு சென்ற முத்துப்பாண்டி, வீட்டிற்கு வர, சௌந்தரபாண்டிய சோபாவில் உக்காந்து கொண்டு இருக்கிறான். அப்போது, இசக்கி எங்கே என்று கேட்க, சௌந்தரபாண்டிய என்ன என்று புரியாமல் முழிக்க, ஓவர் டென்ஷனான முத்துப்பாண்டி, அப்பாவின் வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டுகிறான். இதைப்பார்த்த பாண்டியம்மா, இந்த காட்சியைப் பார்க்கத்தான் நான் ஜெயிலில் இருந்து வந்தேன். ஏல சௌந்தரபாண்டி ஒன்னு நீ சாகணு, இல்ல ஜெயிலுக்கு போகணும், அதை நான் கண்ணால பார்க்க வேண்டும் என்று மனதிற்குள் ரொம்ப சந்தோஷத்தில இருக்கிறாள் பாண்டியம்மா. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











