சண்முகம் குடும்பத்திற்கு வந்த சிக்கல்.. பாண்டியம்மாவின் பிளான்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், வெங்கடேஷ், ரத்னாவிற்கு பூ வாங்கி வந்து கொடுக்க அவள் வேண்டாம் என்று சொல்கிறாள். இதனால் கடுப்பான வெங்கடேஷ், இது எல்லாம் உன்னை என்வீட்டுக்கு கூட்டிட்டு போகுற வரைக்கும் தான் அப்புறம் இந்த வெங்கடேஷன் யார் என்று தெரியும் என்று பிளான் போடுகிறான்.
மறுபக்கம், முத்துபாண்டி, இசக்கியை சந்தோஷமான கணவன் மனைவியாக இருப்பதை பார்க்கமுடியாத சௌந்தரபாண்டி அவர்களை பிரிக்க வேண்டும் என்று திட்டம் போடுகிறான். இதை தெரிந்து கொண்ட பாண்டியம்மா, உன் மரியாதை இந்த வீட்டில் கெட்டுப்போச்சு, இதுக்குத்தான் இவ்வளவு சொத்து சேர்த்துவைச்சியா என்று அவளை ஏற்றிவிடுகிறாள். இதனால், சௌந்தரபாண்டிக்கு இசக்கி மீது கோவம், வர, இதை சாதகமாக வைத்து பாண்டியம்மா ஒரு புது திட்டத்தை தீட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அண்ணா: இன்றைய எபிசோடு, பாண்டியம்மா அடியாட்களை வர வைத்து நான் சொல்ற ஒருத்தியை கடத்தணும் என்று சொல்கிறாள். அதை தொடர்ந்து அடியாட்கள் டொனேஷன் கேட்பது போல் வீட்டிற்குள் வர, அப்போது இசக்கியை தண்ணீர் கொண்டுவருவது போல வர வைத்து,கை காட்டி இவளை தான் கடத்தணும் என்று சைகையில் காட்டுகிறாள். அவர்களும் இசக்கியை நன்றாக பார்த்துக்கொள்கின்றனர். பிறகு பாக்யம், பேப்பரைப்பார்த்து, இந்த ராசிக்கார பொண்ணுங்க இந்த கோவிலுக்கு போய் விளக்கு போட்டா நல்லது என்று படிக்க இசக்கி அது உண்மை என நினைத்து நான் போய் விளக்கு போடுறேன் என்று முடிவெடுக்கிறாள்.
பிளான் போட்ட வெங்கடேஷன்: பிறகு பாக்யம், பரணிக்கு போன் செய்து ரத்னாவையும் விளக்கு போட வெங்கடேஷுடன் அனுப்பி வைக்க சொல்கிறாள். பரணி நான் போய் விளக்கு போடலாமா என்று கேட்க பாண்டியம்மா சூடாமணி இறந்து போனதால் நீ போட கூடாது என்று சொல்கிறாள். இதையடுத்து, வெங்கடேஷன் வாங்கிக் கொடுத்த பூவை வைத்துக்கொள்ளும் படி பரணி வந்து கொடுக்க, ரத்னா, அம்மா இறந்து 40 நாள் தான் ஆச்சு அதுக்குள்ள பூவைத்துக்கொண்டு, ஜோடியா போனா நல்லவா இருக்கும் என்று சொல்ல, சண்முகம் அவளுக்கு புத்தி சொல்லி அனுப்பி வைக்கிறாள்.
தனியாக கோவிலுக்கு போகும் இசக்கி: இதை தொடர்ந்து பாக்கியம் முத்துபாண்டியிடம் இசக்கியை கோவிலுக்கு அழைத்து செல்ல சொல்கிறாள். இதையடுத்து, முத்துப்பாண்டி தனியாக வந்து, இசக்கியிடம் நான் வேலைக்கு போகணும் என்று கெஞ்ச, இசக்கி சரி மாமா நான் மட்டும் போயிட்டு வரேன் என்று சொல்கிறாள். இதை தொடர்ந்து இசக்கி கோவிலுக்கு கிளம்ப ரவுடிகளும் அவளை கடத்த தயாராகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











