ஷண்முகம் குடும்பம் நல்லாவே இருக்கக்கூடாது.. கடத்தப்பட்ட இசக்கி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில்,பாண்டியம்மா வீட்டிற்கு அடியாட்களை வர வைத்து நான் சொல்ற ஒருத்தியை கடத்தணும் என்று சொல்கிறாள். அதை தொடர்ந்து வீட்டிற்கு வரும் ரௌடிகளிடம், இசக்கியை கை காட்டி இவளை தான் கடத்தணும் என்று சொல்ல, அவர்களும் இசக்கியை நன்றாக பார்த்துக் கொண்டு சென்றுவிடுகின்றனர்.
அதைத்தொடர்ந்து, பாக்யம், இசக்கியிடம் முத்துப்பாண்டியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு போய் விளக்கு போட சொல்லுகிறாள். அதே போல, பரணிக்கு போன் செய்து, ரத்னாவையும் வெங்கடேஷனையும் கோவிலுக்கு விளக்கு போட அனுப்பும் படி சொல்லுகிறாள். ஆனால், முத்துப்பாண்டிக்கு வேலை இருப்பதால், இசக்கியை தனியாக போகும்படி சொல்லுகிறான். இதை தொடர்ந்து இசக்கி கோவிலுக்கு கிளம்ப ரவுடிகளும் அவளை கடத்த தயாராகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், ரத்னா, வெங்கடேஷ், வைகுண்டம் என மூன்று பேரும் ஆட்டோவில் வந்து இறங்க. அங்கே இசக்கி மட்டும் தனியாக நின்று கொண்டு இருக்கிறாள். உடனே வைகுண்டம் மாப்பிள்ளை வரலையா என்று கேட்க, என் புருஷனுக்கு இன்னைக்கு நிறைய வேலை இருக்காம். அதான் வரமுடியாது நீ மட்டும் போய்ட்டுவா என்று சொல்லிவிட்டார். அதுவும் 108 விளக்கு என்று சொன்னதும் மனுஷன் நீயே போய்ட்டுவாமா என்று சொல்விட்டார் என்கிறாள்.
மகிழ்ச்சியில் இசக்கி: இதையடுத்து, இசக்கிக்கு போன் வர, இதோ முத்து, மாமா தான் பேசுகிறார் என்று சொல்லிவிட்டு போனை எடுத்து பேசுகிறாள். அப்போது முத்துப்பாண்டி, என்னாலத்தான் கோவிலுக்கு வர முடியல, உனக்கு என்னென்ன தேவையோ எல்லாம் வரும் என்று சொல்லிவிட்டு முத்து போனை வைக்க, ஒரு பெண் பூ கொண்டு வந்து ஐயா கொடுக்க சொன்னதாக சொல்கிறாள். அதை தொடர்ந்து இன்னொரு பெண், சில பொருட்களை கொடுத்து ஐயா கொடுக்க சொன்னதாக சொல்கிறாள். முத்துப்பாண்டி கூட வரவில்லை என்றாலும் அவளுக்கு தேவையான எல்லாவற்றையும் ஏற்பாடு செய்ததைப்பார்த்து, இசக்கி சந்தோஷமடைகிறாள்.
மறைந்து இருந்த பாண்டியம்மா: இசக்கியை கடத்துவதற்காக பாண்டியம்மா காரில் வந்து இறங்கி, அடியாட்களிடம் என்னை தெரிந்த மாதிரி காட்டிக்காதீங்க, சரியான நேரம் பார்த்து நான் கை காட்டுறேன். அந்த நேரத்தில் அவளை தூக்கிவிட வேண்டும் என்று சொல்லிவிட்டு, தலையில் முக்காடு போட்டுக்கொண்டு, ஒரு இடத்தில் மறைந்து நின்று இசக்கியை கண்காணிக்கிறாள்.
மேலும், கோவிலில், ரத்னா வெங்கடேஷிடம் திரியை திரித்து தர சொல்ல அவன் கடுப்பாகிறான். என் வீட்டிற்கு வாடி உனக்கு இருக்கு, இது எல்லாம் என் வீட்டுக்கு நீ வரவரைக்கும் தான் வந்த பின் உனக்கு இருக்குடி என்று மனதுக்குள் வன்மத்தை சேர்த்து கொள்கிறான். இதைத்தொடர்ந்து 108 விளக்குபோட்டு முடிந்ததும், ரத்னா மற்றும் வெங்கடேஷ் இருவரும் ஸ்கூலுக்கு நேரமாகி விட்டதால் கிளம்பி விடுகின்றனர்.
இசக்கியை கடத்திய ரௌடிகள்: அவர்கள் இருவரும் சென்ற பிறகு, இசக்கி அன்னதானம் கொடுத்துக்கொண்டு இருக்கிறாள். அந்த நேரம் கோவிலில் யாரும் இல்லாததால், இசக்கியை ரௌடிகள் கடத்திவிடுகின்றனர். இந்த சத்தம் யாருக்கும் கேட்கக்கூடாது என்பதற்காக பாண்டியம்மா கோவில் மணி அடிக்கிறாள். பின் பாண்டியம்மா ரத்னாவின் பேக்கை எடுத்து அவளது போனில் இருந்து சண்முகத்துக்கு போன் செய்து இசக்கியை கடத்தி விட்டதாக சௌந்தரபாண்டி குரலில் பேச சண்முகம் அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











