ரத்னாவிற்கு கல்யாணம் நடக்கக்கூடாது…சித்தர் சொன்ன வாக்கு.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், வெங்கடேஷின் தாய் மாமா ஓவராக பேசுவதை பார்த்து சிவபாலனுக்கு லேசாக சந்தேகம் வருகிறது. இதன்பின்,சிவபாலன், இசக்கி கை பையில் நகை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். இதுபற்றி, இசக்கியிடம் கேட்க அவள், எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல இது எல்லாம், வெங்கடேஷனின் தாய் மாமாவின் வேலை என்பது தெரியவருகிறது.
இதையடுத்து, சிவபாலன் ஒரு ஐடியா போடுகிறான். அதாவது, கனி மயக்கம் போட்டு விழுவது போல நடி, நான் அதற்குள் நகையை, மாமாவின் பாக்கெட்டில் போட்டு விடுகிறேன் என்று சொல்கிறான். இதையடுத்து, ஒவ்வொருவரின் கை பையையும் போலீசார் சோதித்துக்கொண்டு இருக்க கனி, மயக்கம் போட்டு விழ, சிவபாலன், இசக்கி பையில் இருந்த நகையை எடுத்து, வெங்கடேஷனின் தாய் மாமாவின் பாக்கெட்டில் போட்டுவிடுகிறான். இதைத்தொடர்ந்து, போலீசார், அனைவரையும் சோதனை செய்துவிட்டு தாய் மாமாவின் பாக்கெட்டில் கையைவிட அதில், நகை இருப்பதை கண்டுபிடித்து அவரை வெளு வெளுவென வெளுக்கின்றனர்.

அண்ணா: இன்றைய சீரியலில், தாய் மாமன் பாக்கெட்டில் இருந்து நகை எடுத்ததும் பதறிப்போகிறான். அய்யோ நான் நகையை எடுக்கவே இல்லை, இவ்வளவு நேரம் என் பாக்கெட்டில் நகை இல்லையே என்று சொல்ல, கடுப்பான வெங்கடேஷன், நிச்சயத்தில் இருந்து இதே வேலையைத்தான் செய்து கொண்டு இருக்க என்று வெங்கடேஷன், தாய் மாமானை கடுமையாக அடிக்கிறான். அந்த நேரம் பார்த்து, முத்தப்பாண்டி அங்கு வந்து, தாய் மாமனிடம் விசாரிக்கிறான். அப்போது, இதெல்லாம் செய்ய சொன்னது சௌந்தரபாண்டி என்பது தெரியவருகிறது. பிறகு முத்துப்பாண்டி, இனிமே அவர் பேச்சை கேட்டு எதாவது செய்தே அவ்வளவுதான் என்று எச்சரிக்கிறான்.
கீழே விழுந்த முருகன் போட்டோ: அதைத்தொடர்ந்து சௌந்தரபாண்டி இந்த திட்டமும் தோல்வியில் முடிந்ததால் அடுத்து கல்யாணத்தை எப்படி நிறுத்தலாம் என யோசிக்கிறார். அடுத்த நாள் சண்முகம் வீட்டில் இருந்து ரத்னா கல்யாணத்திற்காக எல்லோரும் கிளம்பி செல்ல பூஜை அறையில் இருந்த முருகனின் போட்டோ கீழே விழுந்து உடைந்து சிதறுகிறது.
கல்யாணம் நடக்கக்கூடாது: பிறகு எல்லோரும் மலைக்கோவிலில் ஒன்று கூட பாக்கியத்தை அழைத்த சித்தர் ஒருவர் இந்த கல்யாணம் நடக்கக்கூடாது நிறுத்து என்று சொல்ல அதைக் கேட்டு பாக்கியம் அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











