இரும்பு இதயத்தில் பூத்த காதல்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், இசக்கியை கடத்திய பாண்டியம்மா, சௌந்தரபாண்டியனின் குரலில் சண்முகத்திடம் உன் தங்கச்சியை கடத்திவிட்டேன் என்று சொல்ல சண்முகம் இசக்கியை தேடி செல்கிறான். இந்த நேரத்தில் கையில் அருவாளுடன் வீட்டுக்கு வந்த வைகுண்டம், என் குடும்பத்தை வாழவே விடமாட்டியா, உன்னை கொன்னாத்தான் என் குடும்பம் நல்லா இருக்கும் என்று சௌந்தரபாண்டியை வெட்ட வருகிறான்.

இப்போது, வீட்டுக்கு வரும் முத்துப்பாண்டி, இசக்கி எங்கே என்று கேட்டு சௌந்தரபாண்டி வாயில் துப்பாக்கியை வைக்க அவர் நான் கடத்தல என்று சமாளிக்க முயற்சி செய்கிறார். நான் கடத்திவிட்டு, நானே கடத்திவிட்டேன் என்று போன் செய்து சொல்லுவேனா, எந்த முட்டாளும் அப்படி சொல்லமாட்டான் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்.

zee tamil anna

அண்ணா: இன்றைய சீரியலில், முத்துப்பாண்டி, தனது அப்பாவிடம் நீ தான் இசக்கி கடத்துன உண்மைய சொல்லி என்று கேட்க, அப்போது பாக்யா, டேய் முத்துப்பாண்டி, இத உன் அப்பா செய்யலடா, அவர் வீட்டிலேயே இருந்து என்னை வேலை வாங்கிக்கொண்டு இருந்தார். இது வேறுயாரோ செய்த வேலை என்று சொல்ல, இல்லமா, சண்முகத்திற்கு இவர் தான் போன்ல பேசி இருக்காரு என்கிறான் முத்துப்பாண்டி. இல்லடா இது வேறு யாரோ செய்த வேலை, நீ முதலில் இசக்கியை தேடு என்று சொல்கிறாள் பாக்யா.

பயந்த ரௌடிகள்: மறுபக்கம், இசக்கி நான் யாருன்னு தெரியுமா? என்னை கடத்தி இருக்கீங்க, இந்த விஷயம் மட்டும் என் மாமாவிற்கு தெரிஞ்சா நீங்க அவ்வளவு தான் . நான், இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி ஓட பொண்டாட்டி என்று சொல்ல ரவுடிகள் அனைவரும் மிரண்டு போகின்றனர். இதையடுத்து, பாண்டியம்மாவுக்கு போன் போட்டு இசக்கியோட புருஷன் போலீசா என்று கேட்க அவள் சமாளித்துவிட்டு, முதலில் அவ கதைய முடிங்க என்று சொல்லி போனை வைக்கிறாள்.

காப்பாற்றிய சண்முகம்: இதையடுத்து, இசக்கியை கொல்லுவதற்காக ரௌடி ஒருவன் அருவாளை எடுத்து அவளை வெட்ட வர, அந்த நேரத்தில், இசக்கியை கடத்தி வைத்திருக்கும் குடோனுக்குள் என்ட்ரி கொடுத்த சண்முகம் ரவுடிகள் அனைவரையும் அடித்து போட்டு இசக்கியை காப்பாற்றுகிறான். அப்போது இசக்கி, அண்ணா நீ மட்டும் வரலனா என்னை கொன்னு இருப்பாங்க என்று கதறி அழ, நான் இருக்கும் போது ஒன்னும் ஆகாது வா வீட்டுக்கு போகலாம் என்று அழைத்து வருகிறான்.

முத்துப்பாண்டியை கட்டியணைத்த இசக்கி: வீட்டிற்கு வரும் இசக்கி, பாக்யாவை பார்த்து, அத்தை என்று அழுதுக்கொண்டு ஓடுகிறாள். பின் முத்துப்பாண்டியை பார்த்த இசக்கி ஓடிப்போய் அவனை கட்டிப்பிடித்துக் கொள்ள சௌந்தரபாண்டி இசக்கி கிடைத்து விட்டதால் கொஞ்சம் நிம்மதி அடைகிறான். அப்போது, சண்முகம், அத்தை நீ என்னத்தான் சொன்னாலும் எனக்கு உங்க வீட்டு ஆள் மேலத்தான் சந்தேகமா இருக்கு என்று சொல்கிறான். உடனே பாக்யா, இல்ல சண்முகம், இவர் வீட்டைவிட்டு போகல, யாரிடமும் போனில் பேசல நான் வீட்டில் தானே இருந்தேன் என்று சொல்கிறாள்.

இப்போது, முத்துப்பாண்டி, இசக்கியை கடத்தியதில் இவங்க ரெண்டு பேருக்கும் தொடர்பு இருக்குனு தெரிந்தால், இரண்டு பேரையும் கருப்பு மிஷினில் வைத்து அப்படியே நசுக்கி விடுவேன் என்று சொல்ல, பாண்டியம்மா பதறுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X