ரத்னா கல்யாணம் நடக்குமா? சௌந்தரபாண்டியனின் பிளான்.. அண்ணா இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில்,ஷண்முகம் கல்யாணம் நல்லபடியா நடக்கணும் என்று சொல்ல முத்துப்பாண்டி அவன் தோள் தட்டி நான் இருக்கேன் பார்த்துக்கலாம் என்று சொல்கிறான். அடுத்து மருதப்பன் இசக்கியை கடத்தி அவள் கழுத்தில் தாலி கட்ட திட்டமிடுகிறான். இதற்காக ஒரு பையை கீழே போட்டு அதைவைத்து இசக்கியை தூக்க திட்டம் போடுகிறான்.
அந்த பையை எடுத்துக்கொண்டு இசக்கிவர அவளை மருதப்பன் கடத்தி விடுகிறான். பின் மருதப்பன் சௌந்தரபாண்டிக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல அவன், ரத்னாவை தூக்க பிளான் போட்டு இருப்பதாகவும், ரத்னாவை தூக்கியதும் சூடாமணியை போட்டு தள்ள சொல்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: கோவிலில் கல்யாண வேலைகள் நடந்து கொண்டிருக்க இசக்கி, காணாததால், அவளை முத்துப்பாண்டி தேடுகிறான். அப்போது உடன்குடி, ஒரு பையை எடுத்து கொண்டு இசக்கி போன விஷயத்தை சொல்ல, சரி வா இசக்கியை தேடலாம் என்று சொல்லி இருவரும் கிளம்புகின்றனர். சிறிது தூரம் வந்ததும், இசக்கி எடுத்து சென்ற பை கீழே கிடந்ததால், இசக்கிக்கு ஏதோ பிரச்சனை நடந்து இருக்கு என்று தெரிந்து கொண்ட முத்துப்பாண்டி அவளை தேடுகிறான்.
இசக்கியை தேடி அலையும் முத்துப்பாண்டி: இதைத்தொடர்ந்து, முத்துப்பாண்டின் தேடி வருவதை பார்த்த இசக்கி மாமா மாமா என்று கத்த மருதப்பன் அவள் வாயை மூடிக்கொண்டு அவளை ஒரு மரத்திற்கு பின் மறைத்து வைக்கிறான். அதன் பின் முத்துப்பாண்டி, இசக்கி அங்கு இல்லை என்று சென்றுவிட, இசக்கி மாமா என்று கத்த, அதில் முத்துப்பாண்டியின் காதில் விழ, இந்த இடத்தில் தான் இசக்கி இருக்கிறாள் என்று தேடி வர, இங்கு மருதமுத்து இருக்க, அவனிடம் சண்டை போடுகிறான். இசக்கியிடம் தாலி இருப்பதால், முத்துப்பாண்டி அவளை கல்யாணம் நேரம் நெருங்குகிறது அங்குபோ என்று சொல்ல, இசக்கி தாலியை எடுத்துக்கொண்டு, கோவிலுக்கு வந்த அனைத்து விஷயத்தையும் சொல்லுகிறாள்.

சூடாமணியை கொல்ல திட்டம்: தொடர்ந்த முத்துப்பாண்டி, மருதப்பனிடம் சண்டை போட அவன், தப்பித்து ஓடிவிடுகிறான். இந்த விஷயம் சௌந்தரபாண்டியனுக்கு தெரிய வருகிறது. சௌந்தரபாண்டிய, மருதப்பனுக்கு போன் செய்து, டேய்... நீ என் மருமகள் மீது கை வைக்கிறியா என்று கேட்க, மருதப்பன், நீங்கள் காட்டிய இடத்தில் இசக்கிதான் இருந்தாள் என்று சொல்லி சமாளிக்கிறான். சரிஇந்த பிளான் ஒவர் அவுட் ஆகளை எப்படியாவது ரத்னா கல்யாணம் நிற்க வேண்டும் என்று சொல்கிறான்.
இதையடுத்து, சௌந்தரபாண்டி ஏற்பாடு செய்த ஆட்கள் சூடாமணி போட்டு தள்ள பிளான் போட்டு சரியான நேரத்தை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். இப்படியான நிலையில், அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











