கல்யாணம் நடந்தால் உயிர்பலியாகும்.. அண்ணா இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், முத்துப்பாண்டி, மருதப்பனிடம் சண்டை போடுகிறான். இசக்கியை மருதப்பன் கடத்திய விஷயம் சௌந்தரபாண்டியனுக்கு தெரிய வருகிறது. சௌந்தரபாண்டிய, மருதப்பனுக்கு போன் செய்து, டேய்... நீ என் மருமகள் மீது கை வைக்கிறியா என்று கேட்க, மருதப்பன், நீங்கள் காட்டிய இடத்தில் இசக்கிதான் இருந்தாள் என்று சொல்லி சமாளிக்கிறான். இதையடுத்து, சௌந்தரபாண்டிய ஏற்பாடு செய்த ஆட்கள் சண்முகம் போட்டு தள்ள பிளான் போட்டு சரியான நேரத்தை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
இன்றைய எபிசோடில், இசக்கியிடம் தாலி இருப்பதால், ஷண்முகம் இசக்கியை தேடி வர, இங்கே மருதப்பன் ஆட்கள் முத்துபாண்டியை தலையை அடித்து சரிய வைத்து விடுகின்றனர். இதைப்பார்த்த,ஷண்முகம் சண்டை போட்டு ஷண்முகம் முத்துபாண்டியையும் இசக்கியையும் மருதப்பன் பிடியில் இருந்து மீட்டெடுக்கிறான்.

என்ன பரிகாரம்: மறுபக்கம், பாக்கியம் சித்தரை சந்தித்து பலமுறை திருமணம் நின்று விட்டதால், இந்த முறை திருமணம் நடந்த ஆகவேண்டும், ஆனால், திருமண பேச்சு எடுத்ததில் இருந்தே பல தடங்கல் வருகிறது என்று சொல்லி, சித்தரிடம் இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்கணும், ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லுங்க என்று கேட்கிறார். இதையெல்லாம் கேட்ட சித்தர், இந்த கல்யாணம் நடக்க கூடாது, அப்படி மீறி நடந்தால் ஒரு உயிர் போவதை யாராலும் தடுக்க முடியாது என்று பாக்கியம் அதிர்ச்சி அடைகிறாள்.
உயிர் பலியாகும்: இந்த விஷயத்தை பாக்கியம் சண்முகத்திடம் சொல்ல, ஷண்முகம் அவர் போலி சாமியாராக இருப்பார், அம்மாவிடம் இந்த கல்யாணத்தை நல்லபடியாக நடத்தி கொடுப்பேன் என்று சத்தியம் செய்து இருக்கிறேன். இதனால், இந்த கல்யாணத்தை நான் நல்லபடியாக நடத்துவேன் என்று, சித்தர் சொன்னதை உதாசீனம் செய்து விடுகிறார்.
அடுத்து கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் நடக்க சௌந்தரபாண்டி மருதப்பனை ஏற்றி விட அவன் சண்முகத்தை போட்டு தள்ள கத்தி எடுக்கிறான். தாலியை எல்லாரிடம் ஆசிர்வாதம் வாங்கி வந்து வெங்கடேஷிடம் கொடுக்கின்றனர். இதே நேரத்தில் மருதப்பன் கத்தியால் குத்த வர இதை சூடாமணி பார்த்து விட்டு ஓடி வந்து கத்தி குத்து வாங்குகிறாள். இதையடுத்து சூடாமணி சரிந்து விழுகிறாள். இப்படியான நிலையில், அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











