உயிருக்கு போராடும் சூடாமணி.. சாமியாரிடம் மன்றாடும் பாக்கியம்..அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், பாக்கியம் சித்தரை சந்தித்து பலமுறை திருமணம் நின்று விட்டதால், இந்த முறை திருமணம் நடந்தே ஆகவேண்டும், ஆனால், திருமண பேச்சு எடுத்ததில் இருந்தே பல தடங்கல் வருகிறது என்று சொல்லி, சித்தரிடம் இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்கணும், ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லுங்க என்று கேட்கிறார். இதையெல்லாம் கேட்ட சித்தர், இந்த கல்யாணம் நடக்க கூடாது, அப்படி மீறி நடந்தால் ஒரு உயிர் போவதை யாராலும் தடுக்க முடியாது என்று சொல்ல பாக்கியம் அதிர்ச்சி அடைகிறாள்.

இந்த விஷயத்தை, பாக்கியம் சிவபாலனிடம் சொல்லி கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என்று கேட்க, சிவபாலன் அம்மா, அது அப்பாவோட ஐடியா, அப்பா கூட இந்த சாமியாரை நான் பல முறை பார்த்து இருக்கிறேன் என்று சொன்னதும், ஓ அப்படியா கதை சரி கல்யாணம் நல்லபடியாக நடக்கட்டும் என்கிறார். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

zee tamil anna

அண்ணா: இன்றைய சீரியலில், கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் நடக்க சௌந்தரபாண்டி மருதப்பனை ஏற்றி விட அவன் சண்முகத்தை போட்டு தள்ள கத்தி எடுக்கிறான். தாலியை எல்லாரிடமும் ஆசிர்வாதம் வாங்கி வந்து வெங்கடேஷிடம் கொடுக்கின்றனர். இதே நேரத்தில் மருதப்பன் கத்தியால் குத்த வர இதை சூடாமணி பார்த்து விட்டு ஓடி வந்து கத்தி குத்து வாங்குகிறாள். இதையடுத்து சூடாமணி சரிந்து விழுகிறாள்.

கதறி அழும் பாக்கியம்: இதைப்பார்த்த பாக்கியம் ஐயோ, நான் கல்யாணம் இப்போ வேண்டாம் என்று சொன்னேனே, சாமியார் பண்ண வேண்டாம் என்று சொன்னாரே என்று சொல்லி கதறி அழுகிறாள். அப்போது, சண்முகம், இதுக்குத்தான் என்னிடம் சத்தியம் வாங்குனியா என அனைவரும் கதறி அழுதுக்கொண்டு இருக்க, சூடாமணி ரத்தவெள்ளத்தில் ரத்னாவிற்கு திருமணம் வைக்கும் படி சொல்லுகிறாள்.

உச்சகட்ட கோவத்தில் முத்துப்பாண்டி: மறுபக்கம்,மருதப்பன் கீழே ஓடி வந்து சௌந்தரபாண்டியிடம் ஐய்யா, சூடாமணியை போட்டு தள்ளியாச்சி என்று சொல்லிக்கொண்டு இருக்கிறான். மருதப்பனை துரத்திக்கொண்டு வந்த முத்துப்பாண்டியை பார்த்துவிட்டு, நீ திருந்தவே மாட்டியா என்று அருகில் வர, சௌந்தரபாண்டி காரில் ஏறி தப்பி சென்றுவிடுகிறான். அவர்களை கொஞ்ச தூரம் துரத்தி சென்ற முத்துப்பாண்டி மீண்டும் கல்யாணம் நடக்கும் இடத்திற்கு வருகிறான்.

உயிர் பலி நடந்தே தீரும்: அப்போது, அங்கு வரும் சாமியார், நான் தான் சொன்னேனே கல்யாணம் நடந்தா ஒரு உயிர்பலி நடக்கும் என்று யாராவது கேட்டீங்களா என்று சொல்ல, பாக்கியம் கதறி அழுதபடி எப்படியாவது சூடாமணியை காப்பாற்றுங்கள் என்று கதறுகிறாள். விதி வலியது இனி ஒன்றுமே செய்ய முடியாது, அவங்க ஆசைப்படி கல்யாணம் நடக்கட்டும், அதையாவது அவங்க பார்க்கட்டும் என்று சொல்ல, அனைவரும் கதறி அழுகின்றனர். இப்படியான நிலையில், அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X