சூடாமணியின் உயிர் பிரிந்தது.. கொள்ளி வைத்த சண்முகம்.. அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், மருதப்பன் சண்முகத்தை கத்தியால் குத்த வரும் போது, சூடாமணி, குறுக்கே வந்து விழுந்து கத்தி குத்தை வாங்கிக் கொள்கிறாள். மருதப்பனை துரத்திக்கொண்டு முத்துப்பாண்டி வர, மருதப்பன், சௌந்தரபாண்டி காரில் ஏறி தப்பி சென்றுவிடுகிறான்.

சூடாமணி ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடக்க, அப்போது, அங்கு வரும் சாமியார், நான் தான் சொன்னேனே கல்யாணம் நடந்தால் ஒரு உயிர்பலி நடக்கும் என்று யாராவது கேட்டீங்களா என்று சொல்ல, பாக்கியம் கதறி அழுதபடி எப்படியாவது சூடாமணியை காப்பாற்றுங்கள் என்று கதறுகிறாள். விதி வலியது இனி ஒன்றுமே செய்ய முடியாது, அவங்க ஆசைப்படி கல்யாணம் நடக்கட்டும், அதையாவது அவங்க பார்க்கட்டும் என்று சொல்ல, அனைவரும் கதறி அழுகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil anna

அண்ணா: இன்றைய எபிசோடில், கத்தியால் குத்து வாங்கிய சூடாமணி சரிந்து விழுந்து உயிருக்கு போராடுகிறாள். சூடாமணியை பார்த்து மொத்த குடும்பம் துடிக்க சண்முகம் மருதப்பன் ஆட்களை அடித்து ஓட விடுகிறான். சூடாமணி நான் பிழைக்க மாட்டேன் என்று சொல்லி ரத்னா கல்யாணத்தை பார்க்க வேண்டும் என தனது ஆசையை செல்கிறாள். ஹாஸ்பிடலுக்கு போகலாம் என்று எவ்வளவோ சொல்லியும் சூடாமணி கேட்காததால், வேறு வழியே இல்லாமல், வெங்கடேஷ் ரத்னா கழுத்தில் தாலி கட்டுகிறான்.

கதறி அழுத குடும்பம்: கல்யாணத்தை பார்த்த சூடாமணி கண்ணை மூட அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். பிறகு சண்முகம், கத்திக்கொண்டு ஓடிவர, கண் திறக்கும் சூடாமணி, இனிமே நீ அருவா எடுக்கக் கூடாது தங்கச்சிகளை நல்லபடியா, படிக்கவைத்து கட்டி கொடுத்து கரை சேர்க்க வேண்டும் என சத்தியம் வாங்கி கொண்டு உயிரை விடுகிறாள். இதைப்பார்த்த பாக்கியம், அய்யோ அந்த சாமியார் சொன்னது நடந்துவிட்டதே என தலையில் அடித்துக்கொண்டு அழுகிறாள்.

கொள்ளி வைத்த சண்முகம்: மொத்த குடும்பமும் சூடாமணியை கட்டிப்பிடித்து அழுதுக்கொண்டு இருக்க, சூடாமணியின் உடல் வீட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. இறுதி சடங்குகள் செய்யப்படுகின்றன, உன்னோடு வாழ எனக்கு கொடுத்துவைக்கவில்லை என்று வைகுண்டம், சூடாமணியின் காலை பிடித்துக்கொண்டு கதறி அழுகிறார்.அனைத்தும் சடங்குகளையும் நான்கு தங்கைகளும் சேர்ந்து செய்கின்றனர். சண்முகம் கண்ணீருடன் சூடாமணிக்கு கொள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X