தங்கைக்காக காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சண்முகம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் !
சென்னை: இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் வீட்டுக்கு வந்த வெங்கடேஷ் ரத்னாவோட வாழ முடியாது தாலிய கழட்டி கொடுத்து விடு என அதிர்ச்சி கொடுத்த நிலையில், அதைத் தொடர்ந்து சண்முகம் மற்றும் பரணி என இருவரும் வெங்கடேஷ் வீட்டிற்கு வந்து ரத்னா வாழ்க்கையை சரி செய்வதை பற்றி பேசுகின்றனர். இதையடுத்து இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில், சண்முகமும் பரணியும் வெங்கடேஷ் வீட்டில் பேச்சு வாரத்தை நடத்த, வெங்கடேஷ் எனக்கு உங்க கூட பேச விருப்பம் இல்லை என்று சென்று விடுகிறான். இதையடுத்து, வெங்கடேஷின் அப்பா, உங்களுக்காக எவ்வளவோ விட்டு கொடுத்தாச்சு, இனிமே சரி வராது, ஊரை கூட்டி அறுத்துவிட வேண்டியது தான் என்று சொல்ல, வெங்கடேஷின் தாய் மாமாவும் ஆமாம், அதுதான் சரி என்று ஏற்றி விடுகிறான்.

காலில் விழுந்த சண்முகம்: யார் பேசியும் வெங்கடேஷ் சமாதானம் ஆகாததால், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த, சண்முகம். யாரும் எதிர்பாராத நேரத்தில் என் தங்கச்சி செய்தது தப்பு தான் அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அனைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான். இதை பார்த்து வெங்கடேஷின் தாய் மாமா, இந்த காட்சியை சௌந்தரபாண்டி பார்த்தா சந்தோஷப்படுவாரே என்று மனதிற்குள் பூரித்துப்போக, சண்முகம் அனைவரின் காலில் விழுந்ததைப்பார்த்து பரணி கண்ணீர் வடிக்கிறாள்.
தங்கைகள் தான் முக்கியம்: அதை தொடர்ந்து சண்முகமும் பரணியும் இந்த விஷயம் தங்கைகளுக்கு தெரிய வேண்டாம் என்று முடிவெடுக்கின்றனர், ஆனால் உடன்குடி வீட்டிற்கு வந்து ஷண்முகம் காலில் விழுந்த விஷயத்தை சொல்ல மொத்த குடும்பமும் உடைந்து போகிறது. பிறகு சண்முகமும் பரணியும் வீட்டிற்கு வர, மீண்டும் தங்கைகளுக்கு எதுவும் தெரிய வேண்டாம், தெரிந்தால் வருத்தப்படுவார்கள் என்று சொல்லி உள்ளே வர, கண்ணீரோடு ஓடி வந்த ரத்னா, ஏன் அண்ணா இப்படி பண்ணின என்று கேட்க, நான் ஒன்னும் பண்ணல என்று சொல்கிறான்.
ரத்னா பொய் சொல்லாதே அண்ணே, எங்களுக்காக அவங்க காலுல விழுந்து இருக்க என்று சொல்லி கதறி அழ, என் தங்கச்சிகளுக்காக என்ன வேணாலும் செய்வேன் என்று சொல்ல, மூன்று தங்கைகளும் கண் கலங்குகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











