ஏய்.. ஓடுகாலி மகளே.. இசக்கியை கேவலப்படுத்தும் பாண்டியம்மா.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் !

சென்னை: நேற்றைய எபிசோடில், செலவுக்கு கையில் பணம் இல்லாததால், சனியன் சௌந்தரபாண்டி வீட்டிற்கு வருகிறான். சௌந்தரபாண்டி அவனுக்கு பணத்தை கொடுத்துவிட்டு போ, இந்த பணத்தை வச்சிக்கிட்டு எங்கேயாவது போ என்று சொல்கிறான். இதை சிவபாலன் பார்த்துவிட்டு முத்துப்பாண்டியிடம் சொல்ல, அவன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஒழுங்கா சரண்டர் ஆகிவிடு என்று மிரட்ட பயந்து போன சனியன், மறைத்துவைத்து இருந்த கத்தியை எடுத்து சௌந்தரபாண்டி கழுத்தில் வைத்து மிரட்டுகிறான்.

அப்போது, பாக்யம், டேய் முத்துப்பாண்டி இரண்டு பேரையும் சுடுடா என்கிறாள். இசக்கியும் இவங்கள சுட்டுத்தள்ளுங்க அப்போத்தான் இந்த குடும்பம் நல்லா இருக்கும் என்று சொல்ல. முத்துப்பாண்டி சனியனை பார்த்து சுடும் நேரத்தில், சனியன் சௌந்தரபாண்டியை தள்ளிவிட்டுவிட்டு தப்பிச்சென்று விடுகிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், பாண்டியம்மா ஜெயிலில் இருந்து பரோலில் வெளியே வருகிறாள். நேராக சௌந்தரபாண்டி வீட்டிற்குள் வந்ததும் வராததுமாக, ஏன்டி இந்த வீட்டில் காபி தண்ணி கொடுக்கக்கூட ஆள் இல்லையா என்று கேட்க, அனைவரும் வெளியே வந்து பாண்டியம்மாவை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது பாண்டியம்மா, ஏய் ஓடுகாலி பெத்த மகளே, வீட்டுக்கு வந்தவளுக்கு காபி கொடுக்கணும்னு கூடவா உனக்கு தெரியாது என்று இசக்கியை கேவலமாக பேசுகிறாள் பாண்டியம்மா.

கடுப்பான பாக்யம்: இதைக்கேட்டுக்கொண்டு இருந்த பாக்யம், வந்ததும் உங்க வேலையை ஆரம்பிக்காதீங்க அவ இப்போத்தான் அழுகையை நிறுத்திட்டு சிரிச்சிக்கிட்டு இருக்கா என்று சொல்ல, ஓ வெறும் பய தங்கச்சிக்கு எல்லாம் இந்த வீட்டில் மரியாதை வந்துடுச்சா என்று சொல்ல, கோவத்தின் உச்சிக்கு சென்ற இசக்கி, இதோ பாருங்க இனிமே என்னை, என் குடும்பத்தை பத்தி ஏதாவது பேசுனீங்கனா.. அவ்வளவு தான் என்று பாண்டியம்மாள் கழுத்தில் கைவைத்து மிரட்டுகிறாள் இசக்கி

வெங்கடேஷனின் திட்டம்: இதையடுத்து, சண்முகம் வீட்டில், காலையில் ரத்னா காபி கொண்டு வர தனக்குத்தான் ரத்னா காபி கொண்டு வருகிறாள் என்று ஆசையுடன் எதிர்பார்க்க அவள் அண்ணனுக்கு கொண்டு போய் கொடுக்க கோவமாகி மனதுக்குள் வன்மத்தை கூட்டி கொள்கிறான். பிறகு வெங்கடேஷை பார்க்க அவனது குடும்பத்தினர் வீட்டிற்கு வர அவன் கீழே படுத்து தூங்கியதை பார்த்து எங்க புள்ளைக்கு கீழே படுத்து தூங்கி பழக்கமே இல்லை என்று நொந்து கொள்கின்றனர். பிறகு வெங்கடேஷ் அம்மாவை தனியாக அழைத்து சென்று எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் மா.. ரத்னாவை வீட்டிற்கு கூட்டி வந்து அந்த ஸ்கூலை என் பேருக்கு மாத்தி எழுதற வரைக்கும் பொறுமையா இருங்க என்று தனது திட்டத்தை சொல்கிறான்.

கனிக்கூடத்தான் படுப்பேன்: இதையடுத்து அனைவரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்க, சண்முகம், அம்மா வீட்டுக்கு வந்ததா பரணி சொன்னா, இருந்துவிட்டு போய் இருக்கலாமே என்று கேட்கிறான். இல்ல வீட்டில் அப்பாவிற்கு மருந்து தரவேண்டும் அதான் அம்மா கிளம்பி விட்டார்கள் என்று சொல்கிறான். இதையடுத்து, சண்முகம் நீங்க உள்ளே கட்டிலில் ரத்னாவுடன் படுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல, கடுப்பான ரத்னா, நான் இந்த வீட்டில் இருக்கும் வரைக்கும் கனிக்கூடத்தான் படுப்பேன் என்று சொல்கிறாள். இதைக்கேட்ட வெங்கடேஷனுக்கு ரத்னா மீது அதிகமாக கோவம் வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X