சௌந்தரபாண்டி வாயில் துப்பாக்கியை வைத்த முத்துப்பாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், இசக்கியை கடத்த திட்டம் போட்ட பாண்டியம்மாள், கோவிலில் அடியாட்களுடன் மறைந்து நின்று, கடத்துவதற்கான சரியான நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறாள் அப்போது ரத்னா, வெங்கடேஷ் இசக்கி என அனைவரும் விளக்கு போட்டுவிட ரத்னா, வெங்கடேஷ் நேரமாகிவிட்டதால் கிளம்பி விடுகின்றனர்.

இதையடுத்து, இசக்கி அன்னதானம் கொடுத்துக்கொண்டு இருக்கிறாள். அந்த நேரம் கோவிலில் யாரும் இல்லாததால், இசக்கியை ரௌடிகள் கடத்திவிடுகின்றனர். இந்த சத்தம் யாருக்கும் கேட்கக்கூடாது என்பதற்காக பாண்டியம்மா கோவில் மணி அடிக்கிறாள். பின் பாண்டியம்மா ரத்னாவின் பேக்கை எடுத்து அவளது போனில் இருந்து சண்முகத்துக்கு போன் செய்து இசக்கியை கடத்தி விட்டதாக சௌந்தரபாண்டி குரலில் பேசுகிறாள். இதையடுத்து இன்று நடப்பது என்ன என்று பார்க்கலாம்.

zee tamil anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், சண்முகம், வைகுண்டத்திற்கு போன் செய்து, இசக்கியை சௌந்தர பாண்டி கடத்திவிட்டான் இப்போது தான் எனக்கு போன் போட்டு சொன்னான். அவளை முத்துப்பாண்டியிடம் சேர்ந்து வாழவிட மாட்டேன், அவளை கொன்றுவிடுவேன் என்று சொல்கிறான் என்று சொல்ல வைகுண்டம் கோவத்தின் உச்சத்திற்கு கத்துகிறான்.

பாண்டியம்மாவின் பிளான்: இதையடுத்து, வீட்டிற்கு வந்த பாண்டியம்மா, சௌந்தரபாண்டியிடம் குரலை மாற்றி அவனைப்போல பேசிக்காட்டுகிறாள். இதைக்கேட்ட சௌந்தரபாண்டி எப்படி அக்கா பேசுனா என்று கேட்கிறான். அதுமட்டுமில்லடா, இசக்கியை கடத்திட்டேன் இப்போ அவ, நம்ம ஆட்களிடம் இருக்கா. கடத்தியது மட்டுமில்லாமல், இசக்கியின் போனை எடுத்து, ஷண்முகத்திடம் நீ கடத்தியதாக சொல்லி இருக்கேன் என்று சொல்ல சௌந்தரபாண்டி ஏன் அக்கா இப்படி பண்ண? இசக்கிக்கு ஒன்னுனா சௌந்தரபாண்டி, முத்துபாண்டினு ரெண்டு பேருமே வருவானுங்க என்று பயந்து நடுங்குகிறார்.

வாயில் துப்பாக்கி: இந்த நேரத்தில் கையில் அருவாளுடன் வீட்டுக்கு வந்த வைகுண்டம், டேய் என் மகள் எங்கடா, என் குடும்பத்தை வாழவே விடமாட்டியா, உன்னை கொன்னாத்தான் என் குடும்பம் நல்லா இருக்கும் என்று சௌந்தரபாண்டியை வெட்ட வர, இந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த முத்துப்பாண்டி, இசக்கி எங்கே என்று கேட்டு சௌந்தரபாண்டி வாயில் துப்பாக்கியை வைக்க அவர் நான் கடத்தல என்று சமாளிக்க முயற்சி செய்கிறார். நான் கடத்திவிட்டு, நானே கடத்திவிட்டேன் என்று எந்த முட்டாளும் சொல்லமாட்டான் என்று சொல்கிறார்.

மறுபக்கம் கோவிலில், ஷண்முகம் சிசிடிவி காட்சிகளை காட்டி விஷயத்தை சொல்ல பாக்கியம் இவனுங்க தான் நம்ம வீட்டிற்கு வந்தாங்க என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X