கோலாகலமாக நடந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் பைனல்.. முதல் பரிசை தட்டித்தூக்கிய ஜோடி!
சென்னை : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி 'டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட் 3' இதில், நடனக் கலைஞர்களும் பிரபலங்களும் ஜோடியாக இணைந்து, பரபரப்பான, மறக்க முடியாத நிகழ்ச்சிகளை வழங்கினர். இறுதிப் போட்டியில் ஐந்து சிறந்த ஜோடிகளும், தங்களால் முடிந்த சிறந்த நடனங்களை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் நடுவர்களான பாபா பாஸ்கர், சினேகா மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இருந்தனர்.
இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை அடைந்ததைத் தொடர்ந்து பைனல்ஸ் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக வந்த விஜய் ஆண்டனி கலந்து கொண்டு போட்டியாளர்களை ஊக்கப்படுத்தினார். வழக்கம்போல், அரங்கேற்றத்தை மகிழ்ச்சியாக்க RJ விஜய் மற்றும் மணிமேகலை தங்கள் நகைச்சுவையால் ரசிகர்களை ரசிக்க வைத்தனர்.

டான்ஸ் ஜோடி டான்ஸ்: இந்த சீசன் சிறப்பு, நடனங்களுடன் கூடவே போட்டியாளர்களின் வாழ்க்கைப் பயணங்களும் அவர்களின் சவால்களை எதிர்கொண்டு முன்னேறிய விதம், நிகழ்ச்சியை மிகவும் மனதை தொட்டது. இதில், வெற்றிப் பெற்ற ஜோடியான நிதின் மற்றும் டித்தியா அந்த நிகழ்ச்சிக்காக கடுமையாக முயற்சி செய்து, சிறப்பான நடனம் மற்றும் புதுமையால் அனைவரிடமும் பாராட்டைப் பெற்றனர். இதில், முதல் ரன்னரப்பாக தில்லை மற்றும் ப்ரீத்தா ஆகியோர் இருந்தனர். இரண்டாவது ரன்னரப்பாக பிரகனா மற்றும் காகனா ஆகியோர் தங்கள் சிறந்த நடனத்தால் அனைவரையும் கவர்ந்தனர்.
முதல் பரிசு: வெற்றி பற்றி பேசிய நிதின் மற்றும் டித்தியா, "Dance Jodi Dance" எங்களுக்கு வாழ்க்கையை மாற்றிய அனுபவம். ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு புதிய சவாலாக இருந்தது. இந்த அன்பும் ஆதரவும் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர். இந்த சீசன் பிரம்மாண்டமாக நிறைவடைந்த நிலையில், அடுத்த சீசன் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். புதிய திறமைகளை அறிமுகப்படுத்தும் மற்றும் உணர்வுபூர்வமான கதைகளைச் சொல்லும் ஜீ தமிழ், தொடர்ந்தும் தமிழ் தொலைக்காட்சியில் தரத்தை உயர்த்திக் கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நோட்டீஸ்: இந்த நிகழ்ச்சியில் கடந்த 12ந் தேதி செலிப்ரேஷன் ரவுண்ட் நடிகை ரவீனா தாஹா கடவுள்களுடன் இணைந்து டான்ஸ் ஆடுவது போல நடன நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதாவது, சிவன், பெருமாள், முருகர், பிள்ளையார் என வேடம் போட்ட அனைவரும் குத்தாட்டம் போட்டு இருந்தனர். இதை கண்டித்த இந்து முன்னணி அமைப்பு, தங்களின் ட்விட்டர் பக்கத்தில் இந்து கடவுளை இழிவுபடுத்தும் நோக்கில் நிகழ்த்தியை நடத்தி உள்ளனர். இது பக்தர்களின் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளது என பதிவிட்டு, மத்திய இணையமைச்சர் எல். முருகன் அவர்களுக்கு டாக் செய்து புகார் அளித்து இருந்தனர். இதை பார்த்த அரை மணிநேரத்திலேயே 12.7.2025 ஆம் தேதி ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி. கேபிள் டிவி விதிமுறைகளுக்கு மீறி ஒளிபரப்பு செய்து இருக்கிறார்கள். எதற்காக அப்படி ஒளிபரப்பினார்கள் என்பதற்கான விளக்கத்தை ஏழு நாட்களுக்குள் அளிக்க வேண்டும், ஏழு நாட்களுக்குள் சரியான விளக்கம் வரவில்லை என்றால் அடுத்தக்கட்டை நடைவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் அனுப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











