தியாவை காப்பாற்ற ஜெகனை கொன்ற மோனிகா.. அதிர்ச்சியில் துளசி.. கெட்டி மேளம்!
சென்னை: தியாவை கொன்றுவிடுவேன் என ஜெகன் மிரட்ட அந்த நேரத்தில் மோனிகா, கத்தியை எடுத்து ஜெகனை கொன்றுவிடுகிறாள். இதையடுத்து போலீசார், மோனிகாவை கைது செய்து அழைத்து செல்கின்றனர். பின் நீதிமன்றம் வெற்றியை ஸ்ரீகாந்த் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிடுகிறது. இந்த செய்தியை கேள்விப்பட்ட மீனாட்சி இந்த குடும்பத்தை எப்படி அழிப்பது என்று அடுத்த திட்டத்தை போடுகிறாள். மற்றொரு பக்கம்,
அஞ்சலியின் பிசினஸில் முதலீடு செய்ய நவீன் என்பவர் அறிமுகமாகிறார். அவரை வீட்டுக்கு வீட்டிற்கு அழைத்து வந்து அனைவருக்கும் அறிமுகப்படுத்துகிறாள் அஞ்சலி.
கெட்டிமேளம்: வீட்டிற்கு வரும் நவீன், அஞ்சலி மிகவும் திறமையான பெண், இவள் கல்லூரியில் படிக்கும் போதே மிகவும் திறமையான பெண். நிச்சயம் இவள் பிஸ்னஸில் அடுத்த கட்டத்திற்கு செல்வார் என அஞ்சலியின் அம்மாவிடம் சொல்கிறார். இதையடுத்து, நவீன் மற்றும் அஞ்சலி ஆகியோர் ஒரு மீட்டிங் இருக்கு கிளம்ப இவர்களுடன் சத்யாவும் வருகிறான். சத்யா அஞ்சலி உடன் சிரிச்சு சிரிச்சு பேசிக்கொண்டு வர இதைப்பார்த்த நவீன் கடுப்பாகிறான். மிகவும் சத்யா சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நவீனை கலாய்க்க நவீன் மேலும் கடுப்பாகிறான்.

மகேஷின் பிளான்: பிறகு வழியில் மகேசை சந்திக்க நவீன் மகேஷிடம் சென்று சார் நீங்க என்ன இங்கே என்று விசாரிக்க அவன் வேலை விஷயமாக வந்ததாக சொல்கிறான். பிறகு அஞ்சலியை பார்த்த மகேஷ் அஞ்சலியுடன் பேச நவீன் அஞ்சலியை தெரியுமா என்று விசாரிக்க சத்யா, அஞ்சலி மகேஷின் மனைவி இப்போ இருவரும் பிரிந்து இருக்காங்க என்ற உண்மையை உடைக்கிறான்.
செந்திலை அடித்த லட்சுமி: பிறகு மீட்டிங் நடக்கும் சமயத்தில் சத்யா நவீனை கலாய்த்து கொண்டே இருக்க அஞ்சலி அவளை வெளியில் காத்திருக்க சொல்கிறார். இன்னொரு பக்கம் ரகுவரன் வீட்டுக்கு வந்து பிசினஸில் பங்கு கேட்க துளசி, லட்சுமி ஆகியோர் அவனைத் திட்டுகின்றனர். இதனால், ஆத்திரப்படும் செந்தில் ரகுவை அங்கிருந்து கிளம்பிச் சொல்ல அவன், எங்க குடும்ப விஷயத்துல தலையிட நீ யாருடா என்று சட்டையை பிடிக்க முருகன் கோபமாகி ரகுவை அடிக்க லட்சுமி முருகனை அறைகிறாள். பிறகு முருகன் நான் தான் மூத்த பையனு சொன்னீங்க, ஆனா நான் மூத்த பையன் இல்லல்ல என்று எமோஷனலாக பேச லட்சுமி அவரை அடித்ததும் எனக்கு கோபம் வந்திருச்சு என்று சொல்கிறாள். மேலும் ரகுவை அனுப்பி வைத்ததை மகேஷ் தான் என்பது தெரிய வருகிறது.


Click it and Unblock the Notifications











