ஆதாரத்தை அழித்த மகேஷ்.. சத்யாவுக்காக அஞ்சலி செய்யப்போவது என்ன? கெட்டி மேளம்!
சென்னை: நவீனை கொலை செய்த குற்றத்திற்காக சத்யாவை போலீஸ் கைது செய்த நிலையில் அஞ்சலி ஸ்டேஷனில் சத்யாவை சந்தித்து நீ இந்த கொலையை பண்ணி இருக்க மாட்டனு நான் நம்புறேன் அங்கு என்ன நடந்தது என்று விசாரிக்க சத்யா நடந்ததை சொல்கிறான். அங்கு வந்த மகேஷ் இந்த சத்யா நல்லவன் கிடையாது என்று சொல்லி பேச அஞ்சலி எனக்கு என்னமோ உன் மேல தான் சந்தேகமா இருக்கு நீ தான் ஏதோ பண்ணி இருக்கணும் என கோபப்படுகிறாள். பிறகு அஞ்சலி வீட்டுக்கு வர லட்சுமி இவ்வளவு நாளா கொலைகாரனையா கேரேஜ்ல நாளைக்கு வச்சுட்டு இருந்த என்று திட்டுகிறாள். அஞ்சலி சத்யா கண்டிப்பாக கொலை செய்து இருக்க மாட்டான் அவனை நான் வெளியே கொண்டு வருவேன் என்று முடிவெடுக்கிறாள்.

கெட்டி மேளம்: ஸ்டேஷனில் போலீஸ் சத்யாவை காட்டுமிராண்டித்தனமாக தாக்குகின்றனர். அஞ்சலி நவீன் வீட்டைச் சுற்றி இருக்கும் வீடுகளுக்கு சென்று சிசிடிவி ஆதாரங்களை தருமாறு கேட்க அவர்கள் மறுத்து விடுகின்றனர். இதைத்தொடர்ந்து அஞ்சலி சத்யாவுக்கு சாப்பாடு கொண்டு வர அப்போது போலீஸ் அவனை கண்மூடித்தனமாக தாக்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதை வீடியோ எடுத்து மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்க போவதாக சொல்ல போலீஸ் பயப்படுகின்றனர். தொடர்ந்து சிவராமன் உதவியுடன் அஞ்சலி நவீன் வீட்டின் அக்கம் பக்கத்தினர் வீட்டில் சிசிடிவி காட்சிகளை ஆராய சத்யா வீட்டுக்குள் சென்றது மட்டும்தான் இருக்கிறது. இதை தூரத்திலிருந்து பார்த்த மகேஷ், நீ இப்படித்தான் பண்ணுவேனு எனக்கு தெரியும். அதனாலதான் சத்யா வெளியே வந்ததை டெலிட் பண்ணிட்டேன் என்று தனக்கு தானே பெருமையாக பேசிக்கொள்கிறேன்.
கோவப்படும் லட்சுமி: மறுபக்கம், அஞ்சலி சிவராமனை வீட்டுக்கு அழைத்து வர லட்சுமி, ஒருவன் கொலை பண்ணிட்டு ஜெயில்ல இருக்கான். இவன் இன்னும் என்ன பண்ணப் போறானோ? இவனால உனக்கு ஏதாவது பெரிய பிரச்சனை வரப்போகுது என சிவராமனை பிடித்து திட்டுகிறாள். முருகன், லட்சுமி அவரை திட்ட வேண்டாம் என்று சொல்ல லட்சுமி அதையும் கேட்காமல் சிவராமனை மோசமாக திட்டுகிறாள். ஒரு கட்டத்தில் அஞ்சலி அவர்தான் நம்ம குடும்பத்துக்கு பெரியவராய் இருந்து எல்லாத்தையும் பாத்துக்கிறாரு, அப்பாவை வெளியே கொண்டு வருவதற்கான முயற்சியையும் எடுத்துக் கொண்டு இருக்காரு.. அவர பத்தி தப்பா பேச வேண்டாம் என சொல்கிறாள். பிறகு சிவராமன் வருத்தத்துடன் வெளியே வர அஞ்சலி அவரிடம் மன்னிப்பு கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications