மீனாட்சியிடம் சிக்கிய ஈஸ்வரமூர்த்தி.. நடக்கப்போகும் விபரீதம்.. கெட்டி மேளம்!

சென்னை: கெட்டி மேளம் சீரியலில் நேற்றைய எபிசோடில் துளசிக்கு மகளிர் அணி தலைவர் பதவி கிடைக்கிறது. இதனால் ஆத்திரப்படும் மீனாட்சி, அவரது கூட்டாளியான சண்முகத்தை சந்தித்து இதற்கு மேல், நம்மால் எதுவுமே செய்ய முடியாது. நாம அந்த குடும்பத்தை அழிக்க போடும் பிளான் எல்லாம் துளசியும், வெற்றியும் சேர்ந்து முறியடித்து விடுகிறார்கள் என சொல்கிறார். இதைக்கேட்டு ஜெயிலில் இருக்கும் சண்முகம் சில யோசனைகளை சொல்கிறார். ஈஸ்வரமூர்த்தி பணத்தாசை பிடித்தவன், அவனை பணத்தால் சிக்க வைத்து விடு அதன் பிறகு அவனை ஒட்டுமொத்தமாக உன்னுடைய கண்ட்ரோலுக்கு வந்து விடுவான் என ஐடியா கொடுத்து அனுப்புகிறார்.

கெட்டி மேளம்: இன்றைய எபிசோட் ஈஸ்வரமூர்த்தி கோயிலுக்கு சென்றிருக்க அப்போது காண்ட்ராக்டர் குமார் நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன். எனக்கு ஒரு காண்ட்ராக்டை முடித்து கொடுத்தால் நிச்சயமாக கஷ்டத்தில் இருந்து மீண்டு வந்து விடுவேன் அதற்காக உங்களுக்கு இப்போதே அட்வான்ஸ் ஆக பணத்தை தருகிறேன் என சொல்கிறார். இதை கேட்டு கோபப்படும் ஈஸ்வரமூர்த்தி கோவிலில் பேசக்கூடிய விஷயமா இது, எதிர்க்கட்சியினர் யாராவது பார்த்தால் பெரிய பிரச்சனை ஆகிவிடும் என சொல்கிறார். அதன் பிறகும் குமார் தன்னுடைய கஷ்டமான நிலையை சொல்லி பணத்தை உடனடியாக தருகிறேன் என சொல்வதால் ஈஸ்வரமூர்த்தி பணத்திற்கு ஆசைப்பட்டு காண்ட்ராக்டர் குமாரிடமிருந்து பணத்தை வாங்குகிறார். இதை யாரோ வீடியோவாக எடுத்த ஈஸ்வரமூர்த்திக்கு அனுப்புகின்றனர்.

Getti melam promo
Photo Credit:

மீனாட்சியின் பிளான்: இதனால் ஆத்திரப்படும் ஈஸ்வரமூர்த்தி, இதை யார் செய்தது என குமாரிடம் விசாரிக்கிறார் அப்போது காண்ட்ராக்டர் குமார் எனக்கும் இதே போல ஒரு பென் டிரைவ் வந்தது என சொல்கிறார். அதன் பிறகு இதை யார் செய்திருப்பார்கள் என யோசனை செய்து கொண்டு இருக்க, அந்த நேரம் அங்கு வரும் மீனாட்சியை பார்த்து எதுக்குமா இங்க வந்த என்ன விஷயம் என்று கேட்கிறார். அப்போது மீனாட்சி, ஈஸ்வரமூர்த்தியிடம், மாமா நடந்த எல்லா விஷயமும் தெரியும், நீங்க எதை பற்றியும் கவலைப்படாதீர்கள். இந்த வீடியோவை அனுப்பியது யார் என சீக்கிரம் கண்டுபிடித்து விடலாம் என சொல்லி ஈஸ்வரமூர்த்தியை நம்ப வைக்க அழகாக காய்களை நகர்த்துகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Read more about: promo சீரியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X