சதி செய்த மீனாட்சி.. பதவி விலகிய ஈஸ்வரமூர்த்தி.. கெட்டி மேளம்!
சென்னை: ஈஸ்வரமூர்த்தி கோயிலுக்கு சென்றிருக்க அப்போது காண்ட்ராக்டர் குமார் நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன். எனக்கு ஒரு காண்ட்ராக்டை முடித்து கொடுத்தால் நிச்சயமாக கஷ்டத்தில் இருந்து மீண்டு வந்து விடுவேன் அதற்காக உங்களுக்கு இப்போதே அட்வான்ஸ் ஆக பணத்தை லஞ்சமாக தருகிறார். ஈஸ்வரமூர்த்தி பணத்திற்கு ஆசைப்பட்டு காண்ட்ராக்டர் குமாரிடமிருந்து பணத்தை வாங்குகிறார். இதை யாரோ வீடியோவாக எடுத்த ஈஸ்வரமூர்த்திக்கு அனுப்புகின்றனர்.
அந்த நபர் யார் என்று கண்டுபிடிக்க ஈஸ்வரமூர்த்தி முயற்சி செய்கிறார். ஆனால், அது முடியாமல் போய்விடுகிறது. இதையடுத்து, ஈஸ்வரமூர்த்தியை மிரட்டும் அந்த மர்ம நபர், உன்னமாதிரி பணத்திற்கு ஆசைப்படுபவன் இந்த பதவியில் இருக்கக்கூடாது, நீ பதவி விலக வேண்டும் என மிரட்டுகிறான்.

கெட்டி மேளம்: இதையடுத்து,ஈஸ்வரமூர்த்தியை மிரட்டும் நபர் நேரில் சந்திக்க வேண்டும் என்று சொல்கிறான். இதனால் ஈஸ்வரமூர்த்தி அவன் சொல்லும் இடத்திற்கு செல்ல மீனாட்சியும் அவருடன் வருகிறாள். வீடியோவை காட்டி மிரட்டும் அந்த நபர் பதவியை ராஜினாமா செய்ய சொல்ல ஈஸ்வரமூர்த்தி அந்த நபரை கன்னத்தில் அறைந்து மடக்கி பிடிக்க ஈஸ்வரமூர்த்தி ஆட்கள் அங்கு அவளை சூழ்ந்து விடுகின்றனர்.
மீனாட்சியின் சூழ்ச்சி: அதைத்தொடர்ந்து உன்னை யார் இதெல்லாம் செய்ய சொன்னது என்று விசாரிக்க அந்த நபர் மீனாட்சி பார்க்க மீனாட்சி தனது கழுத்தில் கத்தியை வைத்து சொல்லி கண் காட்ட அவனின் அப்படியே செய்ய ஈஸ்வரமூர்த்தி என் மருமகள விட்டுடு என கத்துகிறார். மீனாட்சி யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்த மிரட்டல் காரனை கொலை செய்கிறாள். ஈஸ்வரமூர்த்தியிடம் நீங்க பதவியில் இருக்க வேண்டும் அதற்காக நான் எதுவேண்டுமானாலும் செய்வேன் என்று சொல்லி அவர் மனதில் நல்ல இடம் பிடிக்கிறாள். பின் மீனாட்சி, நான் போலீசில் ஆஜராகி விடுகிறேன் என்று சொல்ல ஈஸ்வரமூர்த்தி கட்சியில் இருக்கும் ஒருவனை ஆஜராக சொல்கிறார்.
தேர்தலில் நிற்கும் மீனாட்சி: பிறகு மேல் இடத்தில் இருந்து ஈஸ்வரமூர்த்திக்கு போன் கால் வர அவர் அங்கு சென்று சந்திக்க அந்த வீடியோவை காட்டி உன்னால எனக்கு கெட்ட பெயர் மரியாதையா பதவி விலகிடு என சொல்ல விஸ்வரமூர்த்தி தனக்கு பதிலாக மீனாட்சியை தேர்தலில் நிற்க வைக்க முடிவு செல்கிறார். இந்த விஷயம் அறிந்த வெற்றி, துளசி மகளிரணி பொறுப்புக்கு வந்ததால இப்படி பண்றீங்களா அண்ணி நிக்க வைக்கிறது ஓகே பிரச்சனை இல்ல, ஆனா நீங்க ஏன் நிற்கவில்லை என்று கேள்வி கேட்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications