மீனாட்சியின் மாஸ் மூவ்..போராட்டத்தில் துளசியை சூழ்ந்த ரவுடிகள்..கெட்டி மேளம் ட்விஸ்ட்!

சென்னை: வீடியோவை வைத்து மிரட்டிய அந்த மர்ம நபரை, ஈஸ்வரமூர்த்தியின் ஆட்கள் சுற்றி வளைத்துவிடுகின்றனர். அந்த நேரம் பார்த்து மீனாட்சி அங்கு வர, அந்த மர்ம நபர் மீனாட்சியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுகிறான். இதையடுத்து, மீனாட்சி யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்த மிரட்டல் காரனை கொலை செய்கிறாள். ஈஸ்வரமூர்த்தியிடம் நீங்க பதவியில் இருக்க வேண்டும் அதற்காக நான் எதுவேண்டுமானாலும் செய்வேன் என்று சொல்லி அவர் மனதில் நல்ல இடம் பிடிக்கிறாள். பின் மீனாட்சி, நான் போலீசில் ஆஜராகி விடுகிறேன் என்று சொல்ல ஈஸ்வரமூர்த்தி கட்சியில் இருக்கும் ஒருவனை ஆஜராக சொல்கிறார்.

பிறகு மேல் இடத்தில் இருந்து ஈஸ்வரமூர்த்திக்கு போன் கால் வர அவர் அங்கு சென்று சந்திக்க அந்த வீடியோவை காட்டி உன்னால எனக்கு கெட்ட பெயர் மரியாதையா பதவி விலகிடு என சொல்ல ஈஸ்வரமூர்த்தி தனக்கு பதிலாக மீனாட்சியை தேர்தலில் நிற்க வைக்க முடிவு செல்கிறார். இந்த விஷயம் அறிந்த வெற்றி, துளசி மகளிரணி பொறுப்புக்கு வந்ததால இப்படி பண்றீங்களா அண்ணி நிக்க வைக்கிறது ஓகே பிரச்சனை இல்ல, ஆனா நீங்க ஏன் நிற்கவில்லை என்று கேள்வி கேட்கிறான்.

Getti melam promo

கெட்டி மேளம்: இன்றைய எபிசோடில், அதாவது, ஈஸ்வரமூர்த்தி தேர்தலில் நிற்கவில்லை ஆனால் அவரது குடும்பத்தில் இருந்து தனது மருமகளையே நிற்க வைக்கிறார்..குடும்ப ஆட்சிக்கு சப்போர்ட் செய்யக்கூடாது என பெண்கள் அணி ஒவ்வொரு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்கிறது. இதை அந்தப் பக்கமாக வந்த வெற்றியும் துளசியும் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்த போராட்டம் நேரலையாக டிவியில் டெலிகாஸ்ட் ஆகிக் கொண்டிருக்க இதை பார்த்த ஈஸ்வரமூர்த்தி கடுப்பாகிறார். போலீசை விட்டு அனைவரையும் அடித்து விரட்டுவதாக சொல்கிறார்.

ரௌடிகளிடம் சிக்கிய துளசி: ஆனால் மீனாட்சி, ஈஸ்வரமூர்த்தி தடுத்து நிறுத்தி போலீசை அனுப்பினால் மக்களுக்கு உங்கள் மீது இன்னும் கோபம் அதிகமாகும். அதனால் எனக்குத் தெரிந்த ரவுடிகளை அனுப்புகிறேன் என சொல்லி ரவுடிகளை அனுப்பி வைக்கிறாள். கூட்டத்துக்குள் கூட்டமாக போகும் ரவுடிகள் தங்களுக்குள் சண்டையிடுவது போல ஆரம்பித்து அனைவரையும் தாக்க முயற்சி செய்கின்றனர். இதனால் வெற்றி, துளசி அந்த ரவுடிகளுடன் சண்டையிட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Read more about: promo சீரியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X