உங்களை ஜெயிக்க விடமாட்டேன்.. ஈஸ்வரமூர்த்திக்கு வெற்றி சவால்.. கெட்டி மேளம்!
சென்னை: ஈஸ்வரமூர்த்தி தனது பதவியை ராஜினா செய்ததை அடுத்து இடைத் தேர்தலில் மீனாட்சியை நிற்கவைக்கிறார். இதனால், கோவப்படும் அபிராமி, உங்க கூட இரண்டு பசங்க இத்தனை நாளா கூட இருக்கும் போது நீங்க எப்படி மருமகளை நிற்க வைப்பீங்க என கேள்வி எழுப்புகிறார். ஆனால், ஈஸ்வரமூர்த்தி, என் பதவியை எப்போ ராஜினா செய்ய வேண்டும், யாரை பதவியில் நிறுத்த வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும் என சொல்லிவிட்டு செல்கிறார்.
கெட்டிமேளம்: மறுபக்கம், ஈஸ்வரமூர்த்தியின் குடும்பத்தில் இருந்து தனது மருமகளையே நிற்க வைக்கிறார்..குடும்ப ஆட்சிக்கு சப்போர்ட் செய்யக்கூடாது என பெண்கள் அணி ஒவ்வொரு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்கிறது. இதை அந்தப் பக்கமாக வந்த வெற்றியும் துளசியும், அந்த பெண்களின் கருத்து ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்த போராட்டம் நேரலையாக டிவியில் டெலிகாஸ்ட் ஆகிக் கொண்டிருக்க இதை பார்த்த ஈஸ்வரமூர்த்தி கடுப்பாகிறார். உடனே போலீசை வைத்து அங்கு போராடிக் கொண்டு இருந்தவர்களை அடித்து விரட்ட சொல்கிறார்.
ஈஸ்வரமூர்த்தியின் திட்டம்: மீனாட்சி, ஈஸ்வரமூர்த்தியை தடுத்து நிறுத்தி போலீசை அனுப்பினால் மக்களுக்கு உங்கள் மீது இன்னும் கோபம் அதிகமாகும். அதனால் எனக்குத் தெரிந்த ரவுடிகளை அனுப்புகிறேன் என சொல்லி ரவுடிகளை அனுப்பி வைக்கிறாள். அதே சமயம் ஈஸ்வரமூர்த்தி மீனாட்சியிடம் என்னுடைய மொத்த சொத்தை விற்றாவது உன்னை நான் ஜெயிக்க வைப்பேன் என சொல்கிறார். இதையடுத்து போராட்டம் நடைபெறும் இடத்தில், கூட்டத்துக்குள் கூட்டமாக போகும் ரவுடிகள் தங்களுக்குள் சண்டையிடுவது போல ஆரம்பித்து அனைவரையும் தாக்க முயற்சி செய்கின்றனர். இதனால் வெற்றி, துளசி அந்த ரவுடிகளுடன் சண்டை போட்டு ஒரு சிலரை காப்பாற்றுகிறார்.

சவால் விட்ட வெற்றி: இதற்கு எல்லாம் காரணம் தன் அப்பா தான் என தெரிந்து கொண்ட வெற்றி நேராக வீட்டுக்கு வந்து, எதுக்கு அந்த அப்பாவிகளை அடிச்சீங்க என்று கேட்க, கோவப்படும் ஈஸ்வரமூர்த்தி அதை கேட்க நீ யாருடா என கேட்கிறார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை பெரிதாக, அப்போது வெற்றி, இதுக்கு மேல இந்த தொகுதியில் நீங்க ஜெயிக்கக்கூடாது, உங்களை எதிர்த்து நான் சுயச்சையாக நின்று ஜெயித்து காட்டுகிறேன் என சாவல் விடுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications