நாமினேஷன் நாளில் கடத்தப்பட்ட வெற்றி.. வேட்புமனு தாக்கல் செய்த துளசி.. கெட்டி மேளம்!
சென்னை: ஈஸ்வரமூர்த்தி குடும்பத்தில் இருக்கும் யாரும் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்பதால் போராட்டம் நடத்துகின்றனர். இதை தடுத்து நிறுத்தி போலீசை அனுப்பினால் மக்களுக்கு உங்கள் மீது இன்னும் கோபம் அதிகமாகும். அதனால் எனக்குத் தெரிந்த ரவுடிகளை அனுப்புகிறேன் என சொல்லி ரவுடிகளை அனுப்பி வைக்கிறாள். கூட்டத்துக்குள் கூட்டமாக போகும் ரவுடிகள் தங்களுக்குள் சண்டையிடுவது போல ஆரம்பித்து அனைவரையும் தாக்க முயற்சி செய்கின்றனர். இதனால் வெற்றி, துளசி அந்த ரவுடிகளுடன் சண்டையிட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
இது எல்லாத்தையும் தெரிந்து கொண்ட வெற்றி, ஈஸ்வரமூர்த்தியிடம் சண்டை போடுகிறார். அப்போது இவருக்கும் இடையே சண்டை பெருசாகிப்போக ஒரு கட்டத்தில் வெற்றி உங்களை எதிர்த்து நான் சுயேச்சையாக போட்டியிட்டு உங்களை தோற்கடிப்பேன் என சொல்கிறார். இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். மீனாட்சி வெற்றி போட்டியிட்டால் நாம தோற்றுவிடுவோம் என பயப்படுகிறாள்.

கெட்டி மேளம்: இதற்கிடையில், மறுநாள் நாமினேஷன் தாக்கல் செய்யும் வேலைகள் வேகமாக நடக்கின்றன. "வெற்றி நாமினேஷன் தாக்கல் செய்தால் அவன் நிச்சயம் ஜெயித்து விடுவான்" என்ற பயத்தில் ஈஸ்வரமூர்த்தி பாலில் மயக்கம் மருந்து கலந்து வெற்றியை மயக்கி, அவரை கடத்தி ஒரு இடத்தில் சேரில் கட்டி வைக்கிறார். சற்று நேரம் கழித்து விழித்தெழும் வெற்றி, தன்னை கடத்தி வைத்திருப்பதை உணர்கிறார். அப்போது அங்கு வரும் ஈஸ்வரமூர்த்தியை பார்த்து, "இது துரோகம்... இப்படிச் செய்யக்கூடாது... என்னை விடுங்கள் அப்பா!" என்று கோபத்திலும் வேதனையிலும் கேட்கிறார். ஆனால் ஈஸ்வரமூர்த்தி அதற்கு, "கொஞ்ச நேரம் அமைதியா இரு. என் மருமகள் மீனாட்சி தான் வேட்புமனு தாக்கல் செய்யட்டும். ஒரே குடும்பத்தில் இருவர் போட்டியிட்டா என் மரியாதை என்ன ஆகும்?" அதற்காகத்தான் கடத்தினேன் என்கிறார்.
வேட்புமனு தாக்கல் செய்த துளசி: மறுபக்கம், மீனாட்சி நாமினேஷன் தாக்கல் செய்ய, துளசி ஸ்டைலாக காரில் வந்து இறங்கிவேட்புமனு ;!தாக்கல் செய்கிறார். இதைக் கண்டு அதிர்ச்சி அடையும் மீனாட்சி, "வெற்றி தான் போட்டியிடுவதாக சொன்னார்... நீ எப்படி வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று கேட்க, இது தான் எங்களுடைய பிளான் என்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications