மீனாட்சி vs துளசி தேர்தல் மோதல்... தேர்தல் கதையில் சூடு பிடித்த கெட்டி மேளம்!

சென்னை: வெற்றி நாமினேஷன் தாக்கல் செய்தால் அவன் நிச்சயம் ஜெயித்து விடுவான் என்ற பயத்தில் ஈஸ்வரமூர்த்தி பாலில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து அவரை கடத்தி விடுகிறார் ஈஸ்வரமூர்த்தி, இதனால் ஆத்திரப்படும் வெற்றி இது துரோகம்... இப்படிச் செய்யக்கூடாது... என்னை விடுங்கள் அப்பா என்று கோபத்திலும் வேதனையிலும் கேட்கிறார். ஆனால் ஈஸ்வரமூர்த்தி, "கொஞ்ச நேரம் அமைதியா இரு. என் மருமகள் மீனாட்சி வேட்புமனு தாக்கல் செய்யட்டும். ஒரே குடும்பத்தில் இருவர் போட்டியிட்டா என் மரியாதை என்ன ஆகும்? அதற்காகத்தான் கடத்தினேன் என்கிறார்.

மறுபக்கம், மீனாட்சி நாமினேஷன் தாக்கல் செய்ய, துளசி ஸ்டைலாக காரில் வந்து இறங்கி வந்து வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதைக் கண்டு அதிர்ச்சி அடையும் மீனாட்சி, "வெற்றி தான் போட்டியிடுவதாக சொன்னார்... நீ எப்படி வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று கேட்க, இது தான் எங்களுடைய பிளான் என்கிறார். இதனால் கோவப்படும் மீனாட்சி, எனக்கு சப்போட்டா என் பின்னாடி மாமா இருக்காரு, உனக்கு பின்னாடி யார் இருக்காங்க? உங்க வீட்டு நாலு மட்டும் தான் விழும் என கிண்டல் செய்கிறார். அப்போது துளசி, ஈஸ்வரமூர்த்தி உனக்கு மட்டும் மாமனார் இல்ல எனக்கு மாமனார் தான். நானும் அந்த வீட்டு மருமகள் தான்.

Getti melam promo
Photo Credit:

கெட்டி மேளம்: இத்தனை நாளை அந்த வீட்டுக்குள்ளே எதிர் எதிர்த்து சண்டை போட்டுக்கொண்டு இருந்தோம். இப்போது வெளியில் நேரடியாக மோதப்போகிறோம். எனக்கு பின்னாடி மக்கள் இருக்காங்க. பக்கள் ஆதரவை யாருக்கு என்பதை இந்த தேர்தலில் பார்க்கலாம். இதுக்கப்புறம் தான் ஆட்டமே ஆரம்பமாக போகுது களத்தில் சந்திக்கலாம் என்று சொல்கிறாள்.

சவால் விட்ட வெற்றி: உடனே மீனாட்சி, ஈஸ்வரமூர்த்திக்கு போன் செய்து, மீனாட்சி நம்ம திட்டத்தை எல்லாம் வீணாக்கிடா, வெற்றியை நாமினேஷன் தாக்கல் செய்யக்கூடாது என்று பார்த்தா, மீனாட்சி வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டதாக சொல்கிறார். இதைக்கேட்டு ஈஸ்வரமூர்த்தி அதிர்ச்சி அடைந்து, வெற்றிடம் விசாரிக்கிறார். அப்போது வெற்றி என்னப்பா, துளசி வேட்பு தாக்கல் செய்துவிட்டாளா என்று கேட்டு, தேர்தல்ல நான் நிற்கிறதா ஐடியவே இல்ல, நீங்க இப்படி எதாவது பண்ணுவீங்கனு தெரியும் அதனால் தான் இப்படி திட்டத்தை போட்டோ என்று சொல்கிறார். மேலும், உங்களால் மட்டும் தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியுமா நான் உங்களோட புள்ள, இந்த தேர்தலில் உங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து துளசி ஜெயிக்க வைத்து காட்டுகிறேன் என வெற்றி ஈஸ்வரமூர்த்திக்கு சவால் விடுகிறான்.

Read more about: promo சீரியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X