சத்யாவுக்கு கேக் ஊட்டிய அஞ்சலி..சந்தேகத்தில் கொதிக்கும் மகேஷ்.. கெட்டி மேளம்!
சென்னை: வெற்றி தனது அப்பா ஈஸ்வரமூர்த்தியிடம் நான் தான் வேட்பு மனு தாக்கல் செய்வேனு நினைச்சீங்களா? துளசி வேட்பு தாக்கல் செய்து இருக்கா, தேர்தல்ல நான் நிற்கிறதா ஐடியவே இல்ல, நீங்க இப்படி ஏதாவது பண்ணுவீங்கனு தெரியும் அதனால் தான் இப்படி திட்டத்தை போட்டேன் என்று சொல்கிறார். மேலும், உங்களால் மட்டும் தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியுமா நான் உங்களோட புள்ள, இந்த தேர்தலில் உங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து துளசி ஜெயிக்க வைத்து காட்டுகிறேன் என வெற்றி ஈஸ்வரமூர்த்தியிடம் சவால் விடுகிறான்.
அடுத்ததாக வீட்டுக்கு வந்த துளசி, ஈஸ்வரமூர்த்தி இடம் ஆசீர்வாதம் வாங்க போக அவர் தள்ளி சென்று விடுகிறார். அதன் பின் மீனாட்சி, ஈஸ்வரமூர்த்தியிடம் எனக்கு என்னமோ நீங்க பதவியை ராஜினாமா செய்ய காரணமே வெற்றியா இருக்குமே என்கிற சந்தேகமா இருக்கு என்று சொல்ல ஈஸ்வரமூர்த்தி நடந்த விஷயங்களை வைத்து வெற்றியின் மீது சந்தேகப்பட தொடங்குகிறார்.

கெட்டி மேளம்: இன்றைய எபிசோடில், அஞ்சலி அடுத்து பிசினஸில் என்ன செய்வது என்று பேசிவிட்டு வீட்டுக்கு கிளம்ப சத்யா நாளைக்கு ஓனர் அம்மாவோட பிறந்தநாள். உன்ன வச்சு தான் ஒரு பிளான் போட்டு இருக்கேன் என்று சொல்ல சிவராமன் மனதுக்குள் என் பொண்ணோட பிறந்தநாளை எனக்கே சொல்றியா என நினைத்துக் கொள்கிறார். அதன் பிறகு அஞ்சலி தூங்கிக் கொண்டிருக்க சத்யா ஃபோன் செய்து திடீர்னு சுப்ரமணிக்கு உடம்பு சரி இல்லாம போயிடுச்சு தனியா எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல அதான் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கேன், கொஞ்சம் வெளியே வாங்க என்று சொல்ல அஞ்சலி வெளியே வருகிறாள்.
அஞ்சலியின் பிறந்த நாள்: சுப்ரமணி நிற்பதை பார்த்து என்னாச்சு என்று கேட்க சத்யா பிறந்தநாள் வாழ்த்து சொல்லி சர்ப்ரைஸ் கொடுத்து கேக் கட் செய்ய வைக்கிறான். குடும்பத்தில் உள்ள எல்லோரும் வெளியே வந்து அஞ்சலிக்கு வாழ்த்து சொல்கின்றனர். அதன் பிறகு அஞ்சலி சத்யாவுக்கு கேக் ஊட்டி விட இந்த சமயத்தில் கேக் உடன் வீட்டுக்கு வந்த மகேஷ் இதை பார்த்து டென்ஷன் ஆகிறான். மேலும் சத்யாவின் சட்டையை பிடித்து சத்தம் போட அஞ்சலி எனக்கு நீயும் வேணா உன் கேக்கும் வேண்டாம் என மகேஷை அவமானப்படுத்தி அனுப்புகிறாள். அடுத்த நாள் துளசி வீட்டுக்கு வர சத்யா தலைவி அம்மா என சொல்லி கலாய்க்கிறான். தொடர்ந்து அஞ்சலி மற்றும் சத்யா பிசினஸ் விசயமாக வெளியே கிளம்புகின்றனர்.
சந்தேகப்படும் மகேஷ்: அப்போது அஞ்சலி ஒரு கோவிலில் வண்டியை நிறுத்த சொல்கிறாள். சத்யாவையும் கோவிலுக்கு கூப்பிட அவன் சாமி எல்லாம் ஒன்னும் இல்ல.. அப்படி சாமி இருந்திருந்தால் என் கஷ்டத்தை சரி செய்து இருக்கும் என சொல்லி அஞ்சலியை மட்டும் போயிட்டு வர சொல்கிறான். அதற்குள் சத்யா பிரசாதம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்க வெளியே வந்த அஞ்சலி சாமி இல்ல ஆனால் கோவிலில் கொடுக்குற பிரசாதம் மட்டும் வேணுமா என கேள்வி கேட்கிறாள்.சத்யா ஒரு பதில் சொல்ல அஞ்சலி அதற்கு கவுண்டர் போட்டு பேசிக் கொண்டிருக்கிறாள். மேலும் சத்யாவுக்கு விபூதி வைத்துவிட்டு ஊதிவிட கோவிலுக்கு வெளியே நின்று இதை பார்த்த மகேஷ் மேலும் டென்ஷன் அடைகிறான்.


Click it and Unblock the Notifications